Homeசெய்திகள்பஞ்சு மிட்டாயை தொடர்ந்து ரோஸ் மில்கிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம்..!

பஞ்சு மிட்டாயை தொடர்ந்து ரோஸ் மில்கிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம்..!

உணவுப் பொருட்களின் மீது கலப்படமானது தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. நாம் உண்ணும் அனைத்து வகையானப் பொருட்களிலும் உடலுக்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறது. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பொருட்களில் ஒன்றாக உள்ள பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன் பி என்னும் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்து இருப்பதாக கூறி பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டது.

இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் நம்மில் பலர் விரும்பி உண்ணும் பொருட்களில் இந்த ரோடமைன் பி ரசாயணம் கலக்கப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படத்தியுள்ளது.

நம்மில் பலரும் விரும்பி பருகும் குளிர்பானங்களில் ஒன்று தான் ரோஸ் மில்க். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகுவது உண்டு. அதிலும் கோடைக்காலங்களில் அனைவரும் இதனை வீடுகளில் தயார் செய்தும், கடைகளில் வாங்கியும் குடிப்பர். இந்நிலையில் தான் தற்போது இந்த ரோஸ் மில்கில் புற்றுநோயை உருவாக்கும் ரோடமைன் பி என்னும் ரசாயனம் கலக்கப்படுவதாக (Rhodamine B in Rose milk) தகவல் வெளியாகியுள்ளது.

ரோஸ் மில்க் மட்டுமின்றி கொட்டைப்பாக்கு, கேழ்வரகு, தர்பூசணி, சிகப்பு முள்ளங்கி, சர்க்கரைவள்ளி கிழங்கு போன்ற பொருட்களிலும் அதன் நிறத்திற்காக ரோடமைன் பி வேதிப்பொருள் கலக்கப்படுகிறது என்று உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. மேலும் உணவு பாதுகாப்பு துறையின் சான்றிழல் பெற்ற கடைகளில் இதுபோன்ற வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதில்லை என்றும் சாலையோரக் கடைகளில் தான் இதுபோன்ற வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதாலும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தகவல் மூலம் உணவு பாதுகாப்புதுறையானது மக்களை எச்சரித்துள்ளது.

Rose Milk Shop

ரோடமைன் பி கலந்துள்ளதா என எவ்வாறு கண்டறிவது

மிகவும் எளிமையான முறையில் உணவுப்பொருட்களில் ரோடமைன் பி (Rhodamine B) கலந்துள்ளதா என்பதை நாம் கண்டறியலாம்.

  • அதற்கு ஒரு வெள்ளை நிற பஞ்சை எடுத்துக்கொள்ளவும்
  • அதை எண்ணெய் அல்லது தண்ணீரில் நனைத்து கொள்ளவும்.
  • பின்பு உங்களுக்கு சந்தேகமாக உள்ள பொருளின் மீது வைக்கவும்.
  • அந்த பஞ்சின் நிறம் மாறவில்லை என்றால் அந்த பொருளில் ரோடமைன் பி கலக்கப்படவில்லை என்று அர்த்தம்.
  • ஒருவேளை அதன் நிறம் இளஞ்சிவப்பாக மாறிவிட்டால் அந்த பொருளில் வேதிப்பொருள் கலந்து இருப்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற நீங்கள் வாங்கும் ஏதேனும் ஒரு பொருளில் ரோடமைன் பி கலக்கப்பட்டு இருந்தால் அது குறித்த புகார்களை 94440 42322 என்ற எண்ணில் அளிக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்: நடிகை பிரியாமணி வாங்கிய புதிய கார்..! விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular