Homeஆன்மிகம்Guru Parka Kodi Nanmai: குரு பகவானால் ஏற்படும் நன்மைகள்..!

Guru Parka Kodi Nanmai: குரு பகவானால் ஏற்படும் நன்மைகள்..!

ஒரு ராசியை குரு பார்க்க கோடி நன்மை (Guru Parka Kodi Nanmai) என சொல்லப்படுகிறது. இதனை பற்றி இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம். நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான். இவர் எவர் ஒருவரின் ராசியில் இருக்கிறாரோ அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக குரு இருக்கும் ராசியில் இருந்து பார்க்கும் ராசி மிகவும் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

நவகிரகங்களில் மிகவும் யோகமான கிரகமாக Guru Bhagavan கருதப்படுகிறார். ஜோதிடத்தில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி ஆகும். இது போன்ற பெயர்ச்சிகள் ஜோதிடத்தில் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்த பெயர்ச்சிகள் ராசிக்கு மகத்தான நல்ல பலன்கள் கொடுக்கும் கிரகம் குரு ஆகும். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தால் ராசி நட்சத்திரத்திற்கு ஏற்றார் போல் பலன்கள் (Guru Peyarchi Palangal in Tamil) கிடைக்கின்றன. இவற்றை தான் குரு பெயர்ச்சி பலன்கள் என்பார்கள். அதேபோல் பெயர்ச்சி அடைந்த ராசியில் இருந்து மற்ற ராசிகளை பார்ப்பதாலும் பல நன்மைகள் நடைபெறுகின்றன.

நவகிரகங்களில் படிப்பின் கடவுளாக கருதப்படும் குரு பகவான் இதிகாசங்களின் படி தேவர்களின் குருவாகவும் இருக்கிறார். மொத்தம் பன்னிரண்டு ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு. அதேபோல் மொத்தம் ஒன்பது கிரகங்கள் உண்டு. அவை அனைத்தும் இந்த 12 ராசிகளுக்கும் இடையே மாறி கொண்டே இருக்கும். இந்த நவகிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்றார் போல் மற்றும் நட்சத்திரத்திற்கு ஏற்றார் போலவும் அனைவர் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த பதிவில் குரு பெயர்ச்சியால் ஏற்படும் குரு பார்வை பலன்கள் (Guru Parvai Palangal in Tamil) பற்றி பார்க்கலாம்.

நவகிரகங்களின் பெயர்கள்

  • சூரியன்
  • சந்திரன்
  • செவ்வாய்
  • புதன்
  • குரு
  • சுக்ரன்
  • சனி
  • இராகு
  • கேது

இவைகள் ஒன்பதும் நவகிரகங்கள் ஆகும். இந்த நவகிரகங்கள் தான் அனைவர் வாழ்விலும் அவர்களின் கர்மவினைகளுக்கு ஏற்றார் போல் நன்மைகள் மற்றும் தீமைகள் செய்வதாக கூறப்படுகிறது. இந்த நவகிரகங்களில் குரு பகவான் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதிலும் குறிப்பாக குரு பார்க்க கோடி நன்மை என்பதன் அர்த்தம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளாம்.

Guru Parka Kodi Nanmai in Tamil

குரு பகவான் (Guru Bhagavan) – Guru Bhagavan in Tamil

குரு பகவான் தேவர்களின் குரு என்று அழைக்கப்படுகிறார். இவர் அறிவில் சிறந்தவர் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் ஏழாவது மகன் ஆவார். குரு பகவானின் மனைவியின் பெயர் தாரை ஆகும். பரத்வாஜர் மற்றும் கசன் ஆகிய இருவரும் குரு பகவானின் பிள்ளைகள் ஆவர்.

இவர் தான் ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களையும் மற்றும் 64 கலைகளையும் கற்றவர். கடுமையான தவம் மற்றும் எண்ணற்ற யாகங்கள் (வேள்வி) செய்து தேவர்களின் குருவாக மாறினார். குரு பகவான் பிருகஸ்பதியின் கிரகமான வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகின்றார். எந்த ஒரு ராசியில் குரு இருக்கிறாரோ அந்த ராசிக்காரர்கள் படிப்பு மற்றும் ஒழுக்கத்தில் சிறந்தவனாக இருப்பார்கள்.

குரு பகவானுக்கு அந்தணன், அரசன், ஆசான், அமைச்சன், ஆண்டளப்பான், குரு, சீவன், சிகிண்டிசன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பொன்னன், பிருகஸ்பதி, பீதகன், மறையோன், வேதன், வேந்தன் என பதினெட்டு (12) பெயர்கள் உண்டு. குரு பகவானுக்கு அனைத்து சின் கோவில்களிலும் தனி சன்னதி உள்ளது.

குரு பகவான் பற்றிய சிறப்பு தகவல் (Guru Bhagavan Patriya Sirappu Thagaval)

குரு பகவானின் பிரதானதலங்கள்ஆலங்குடி(திருவாரூர்) மற்றும் திருச்செந்தூர்
குரு பகவான் பதவி தேவகுரு
சொந்த வீடுதனுசு மற்றும் மீனம் ராசி
நட்புகிரகம்சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய்
பகைகிரகம்புதன் மற்றும் சுக்கிரன்
உச்சராசிகடகம்
நீச்சராசிமகரம்
திசைவடக்கு
நாள்வியாழக்கிழமை
வாகனம்யானை
நிறம்மஞ்சரல்
அதிதேவதைபிரம்மா
தானிய வகைகொண்டக்கடலை
மலர்வெண்முல்லை
வஸ்திரம் (துணி)மஞ்சள்நிற ஆடை
நெய்வேத்தியம் (Naivedhya)கடலைப்பொடி சாதம்
ரத்தினம்புஷ்பராகம்
உறுப்புதசை

குரு பார்க்க கோடி நன்மை (Guru Parka Kodi Nanmai in Tamil)

Guru Bhagavan அறிவில் சிறந்தவர் ஆவார். இவர் இருக்கும் இடத்தை விட பார்க்கும் ராசி மிகவும் யாகம் வாய்ந்தது ஆகும். குரு பகவான் இருக்கும் ராசியில் இருந்து 5,7 மற்றும் 9 ஆகிய இடங்களை பார்ப்பார். குரு இருக்கும் ராசிக்கு அதிக நன்மைகள் தருவதை விட பார்க்கும் ராசிக்கு அதிக நன்மைகள் தருகின்றது. இதுவே வியாழ நோக்கு என அழைக்கப்படுகிறது.

  • ஒரு ராசிக்கு எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்ப்பதால் அந்த தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என கூறப்படுகிறது.
  • ராசின் லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் குரு பகவானின் பொன்னொளி வீசும் பார்வை அவர் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து, ஏழு மற்றும் ஒன்பது இடங்களில் விழும்.

ஒருவர் ராசியில் ஆறாம் இடத்தில் யோக சாணத்தில் குரு பகவான் இருந்தால் அவர் வாழ்வில் வெற்றி ஏற்படும், எதிரிகள் அச்சம் அடைவார்கள், நோய்கள் நீங்கும் மற்றும் குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். அதேநேத்தல் குரு பலம் இலந்து இருந்தால் வயிற்று கோலாரு ஏற்படும்.

Guru Bhagavan Patriya Sirappu Thagaval
  • திருமண யோகத்திற்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் விளங்குகிறார். ஒரு ராசிக்கு வியாழ நோக்கு வந்து விட்டதா என பார்த்த பிறகே திருமணம் ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகிறது.
  • இறைவன் மீது பக்தி, சிரத்தை (அனைத்தையும் கவனமாக தெரிந்து கொள்ளுதல்), புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கம் போன்ற விஷயங்கள் ஒரு ராசிக்கு குரு பலத்தால் கிடைக்கக் கூடியவை ஆகும்.
  • ஒரு ராசியில் குரு பகவானின் பார்வை இருந்தால் அவருக்கு எப்படிப்பட்ட பிரச்சனையாக ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டு வர முடியும் என்பது ஜோதிடத்தில் உள்ள ஐதீகம் ஆகும்.
  • குரு பகவானின் பார்வை எந்த ராசியின் மீது இருந்தாலும் அந்த ராசிக்காரர்கள் எதையும் சாதிப்பார்கள் என கூறப்படுகிறது.

இவை அனைத்தும் Guru Bhagavan ஒரு ராசியில் இருப்பதால், அந்த ராசியில் இருந்து மற்றொரு ராசியை பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள் ஆகும். குரு பகவான் ஒருவரின் ராசியில் இருந்தால் அவருக்கு கல்வி அறிவு அதிகம் இருக்கும், அவர் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்வார். மேலும் அவர் ஒழுக்க நெறி தவறாதவர் இருப்பார் என கூறப்படுகிறது.

அதேபோல் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து 5,7 மற்றும் 9 வது இடங்கயை பார்பார் இந்த இடங்களில் இருக்கும் ராசிக்காரர்களுக்கு யோகம் ஏற்படும். அவர்கள் வாழ்வில் சுபிக்ஷம் ஏற்படும் என்பார்கள். இதனையே குரு பார்க்க கோடி நன்மை என கூறுவார்கள் ஜோதிடர்கள்.

மேலும் படிக்க: நீங்க இந்த ராசியா? 12 Zodiac Signs in Tamil..!

Guru Bhagavan – FAQ

1. குரு பகவான் மனைவி பெயர் என்ன?

குரு பகவானன் மனைவி பெயர் தாரை ஆகும்.

2. தேவர்களின் குரு என அழைக்கப்படுபவர் யார்?

தேவர்களின் குரு என அழைக்கப்படுபவர் குரு பகவான் ஆவார்.

3. இந்த வருடம் குரு பெயர்ச்சி எப்போது?

இந்த வருடம் (2024) குரு பெயர்ச்சி வருகிற மே 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular