Homeலைஃப்ஸ்டைல்சமையல் உப்பு ஈரப்பதம் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? Tips for Keeping Salt...

சமையல் உப்பு ஈரப்பதம் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? Tips for Keeping Salt Dry in Tamil..!

சமையலுக்கு முக்கியமானது அறுசுவைகள் தான் அவற்றில் முக்கியமானது உவர்ப்பு தன்மை கொண்ட உப்பு (Salt). அந்த உப்பானது மழை காலங்களில் மிகவும் ஈரப்பதம் வாய்ந்ததாக இருக்கும். இதனை தடுப்பதற்கான குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.

அறுசுவை என அழைக்கப்படும் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு. இவற்றில் உவர்ப்பு இல்லாமல் மட்டும் எந்த உணவையும் சாப்பிட முடியாது. அதே நேரத்தில் அளவுக்கு அதிகமான உப்பு உள்ள சாப்பாட்டையும் சாப்பிட முடியாது. இதற்கு ஏற்றவாறு உப்பில்லாத பண்டம் குப்பையிலே எனவும் உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் எனவும் தமிழ் பழ மொழிகள் உள்ளன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உப்பானது மழைக்காலங்களில் ஈரப்பதம் உள்ளதாக இருக்கும். நீங்களே உங்கள் வீட்டில் உள்ள உப்பை பாருங்கள் அது மழைக் காலத்தில் ஈரமாக இருக்கும். இதனை தடுப்பதற்கான Tips சிலவற்றை இப்பதிவில் பார்க்லாம்.

உப்பு (Salt) நீர் கோக்காமல் இருக்க

உப்பு பொதுவாக கடல் நீரை வெயிலில் நன்றாகக் காயவைத்து நீரை ஆவியாக்கி உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த உப்பு தயாரிக்கப்படும் இடத்திற்கு உப்பளம் என்று பெயர். இந்த உப்பளம் ஆனது கடற்கரைகளை ஒட்டிய பகுதிகளில் அமைந்திருக்கும். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் சென்னையை அடுத்த கோவளம் பகுதியிலும் உப்பளங்கள் அமைந்துள்ளது.

இந்த உப்பானது மழைக்காலத்தில் நீர் கோர்த்து பிசுபிசுப்பாகவும், முழுவதும் தண்ணீரில் இருப்பது போன்று அல்லது கட்டி கட்டியாக இருக்கும். இவ்வாறு உப்பு ஈரப்பதம் ஆகாமல் பராமரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

1. பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடி பயன்படுத்தவும்

உப்பை சில்வர் பாத்திரத்தில் வைக்க கூடாது. பொதுவாகவே உப்பிற்கு அரிக்கும் தன்மை இருக்கிறது. அதனால்தான் கடல் உள்ள பாறைகள் மற்றும் கிளிஞ்சல்கள் பள்ளம் பள்ளமாக இருக்கும். இந்த காரணம் மட்டும் அல்லாமல் சில்வர் பாத்திரம் வெப்பத்தை கடத்தக்கூடியது, மழைக்காலங்களில் இதில் குளிர் தன்மை இருக்கும் இதனால் உப்பில் நீர் கோத்துக் கொள்ளும். எனவே உப்பை சில்வர் பாத்திரத்தில் வைக்க கூடாது.

Salt in Glass

இதற்கு மாற்றாக பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடிகளில் உப்பை சேகரித்து வைக்கலாம். அதிலும் மூடி உள்ள ஜாடிகளில் உப்பை வைப்பது சிறந்தது. அதே வலை உப்பை எடுத்து விட்டு ஜாடியை மூடி வைத்து விட வேண்டும்.

2. ஸ்பூன் பயன்படுத்தவும்

சமைத்து கொண்டிருக்கும் போது கைகளால் உப்பை எடுப்பதால் உப்பு ஈரப்பதம் ஆகிவிடுகிறது. எனவே உப்பில் Spoon போட்டு பயன்படுத்த வேண்டும்.

உப்பில் பயன்படுத்தும் ஸ்பூன் ஆனது சில்வராக இல்லாமல் பீங்கான் அல்லது கண்ணாடி ஸ்பூனாக இருப்பது சிறப்பு. உப்பில் மர ஸ்பூன் கூட போடலாம்.

 Powdered Salt

3. உப்பில் பச்சை மிளகாய் போட்டு வைக்கலாம்

அதேபோல் உப்பில் மிளகாய் போட்டால் உப்பில் நீர் கோர்காது. மிளகாய் என்றால் பச்சை மிளகாய் தான் போடவேண்டும், காஞ்ச மிளகாய் போட்டால் அது நல்ல பலனைத் தராது. பச்சை மிளகாய் சிறிது நாளில் நிறம் மாறிவிடும் அதன் பிறகு வர மிளகாய் போட வேண்டும்.

4. உப்பில் அரிசி போட்டு வைக்கலாமா

உப்பு ஜாடியில் அரிசியை போட்டு வைத்தால் உப்பில் நீர் கோக்காமல் இருக்கும். அதை தூள் உப்பில் கழந்து விட்டால் அரிசி உப்புடன் சேர்ந்து சமையலில் கழந்து விடும். எனவே அரிசியை கல் உப்பில் சேர்ப்பது சிறந்தது. இந்த அரிசி போடுவதன் மூலம் உப்பில் உள்ள ஈரப்பதம் குறையும்.

Rock Salt

5. உப்பில் கிராம்பு போட்டு வைக்கலாமா

உப்பு ஜாடியில் 4 அல்லது 5 கிராம்பு போட்டு வைத்தால் உப்பு ஈரப்பதம் ஆகாமல் இருக்கும். தூள் உப்பில் இந்த Clove போட்டு வைக்கலாம். உப்பை எடுக்கும் போது கிராம்பானது அரிசியை விட நன்றாக தெரியும்.

Clove

6. உப்பில் கிட்னி பீன்ஸ் போட்டு வைக்கலாம்

உப்பில் கிட்னி பீன்ஸ் எனப்படும் ராஜ்மா கொஞ்சம் போட்டு வைத்தால் உப்பு ஈரப்பதம் ஆகிவிடுகிறது. இதை தூள் உப்பு அல்லது கல் உப்பு எதில் வேண்டுமானாலும் போட்டு வைக்கலாம்.

மேலே கொடுக்கப்பட்ட குறிப்புகள் (Tips) மூலம் மழை மற்றும் குளிர் காலங்களில் உப்பில் நீர் கோர்த்துக் கொள்ளாமல் பராமரிக்கலாம். இதனால் உப்பு கட்டியாக அல்லது தண்ணீர் கலந்தது போலவே இருக்காது.

மேலும் படிக்க: பிளம் கேக் செய்வது எப்படி..?
உப்பு – FAQ

1. உப்பில் என்ன சத்துக்கள் உள்ளன?

உப்பில் அயோடின், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் குளோரைடு, மெக்னீசியம், குரோமியம், இரும்பு, துத்தநாகம், போன்ற சத்துக்கள் உள்ளன.

2. உப்பு எதிலிருந்து கிடைக்கிறது?

உப்பு கடல் நீரிலிருந்து உருவாக்கப்படுகிறது.

3. தமிழ்நாட்டில் உப்பு எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருநெல்வேலி போன்ற கரையோர மாவட்டங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

4. கடல் நீர் எவ்வளவு உவர்ப்பு தன்மை கொண்டது?

கடல் நீரில் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பைக் கொண்டுள்ளது. இதன் உவர்ப்புத்தன்மை 3.5 சதவீதம் ஆகும்.

5. உப்பு நம் உடலுக்கு முக்கியமானது?

ஆம், மனித உடலில் நரம்பு தூண்டுதல்களை நடத்தவும், தசைகளை தளர்த்தவும் மற்றும் சுருங்கவும், நீர் மற்றும் தாதுக்களின் சரியான சமநிலையை பராமரிக்கவும் ஒரு சிறிய அளவு சோடியம் தேவைப்படுகிறது.

6. தினமும் எவ்வளவு உப்பு உடலுக்கு தேவைப்படுகிறது?

மனித உடலுக்கு தினமும் சுமார் 500 மி.கி சோடியம் (உப்பு) தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular