Homeசமையல் குறிப்புகள்இந்த வீக் எண்ட்ல... சிக்கன் மட்டன்கு பதிலா ஒரு முறை இப்படி Fish Biryani செஞ்சு...

இந்த வீக் எண்ட்ல… சிக்கன் மட்டன்கு பதிலா ஒரு முறை இப்படி Fish Biryani செஞ்சு பாருங்க..!

நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு உணவு தான் பிரியாணி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகவும் இது உள்ளது. பிரியாணி பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் அந்த அளவுக்கு தான் இருப்பார்கள் மற்றபடி அனைவருக்கும் பிரியாணி மிகவும் பிடித்த ஒரு உணவாக தான் உள்ளது.

நாம் பல வகையான பிரியாணி வகைகளை சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதிகபட்சம் நாம் கடைகளில் சென்று சாப்பிட்டாலும் சரி வீடுகளில் செய்து சாப்பிட்டாலும் அதிக அளவில் செய்வது சிக்கன் அல்லது மட்டன் பிரியாணி தான். ஆனால் இந்த வாரம் விக் எண்ட்ல இந்த மீன் பிரியாணி செஞ்சு பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. நாம் இப்பதிவில் சுவையான மீன் பிரியாணி செய்வது எப்படி (Simple Fish Biryani Recipe In Tamil) என்பது குறித்து பார்க்கலாம்.

மீன் பிரியாணி செய்வது எப்படி (How to Make Fish Biryani In Tamil)

தேவையான பொருட்கள் (Fish Biryani Ingredients)

  • பாசுமதி அரிசி – 1 கிலோ
  • வஞ்சரம் மீன் – 1 கிலோ
  • பெரிய வெங்காயம் – 4
  • பழுத்த தக்காளி – 6 முதல் 7
  • தேங்காய் பால் – 1 கப்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 3 டீஸ்பூன்
  • கிராம்பு – 6
  • பட்டை – 3
  • ஏலக்காய் – 6
  • பிரியாணி இலை – 2
  • எண்ணெய் – தேவையான அளவு
  • நெய் – தேவையான அளவு
  • புதினா – ஒரு கைப்பிடி
  • கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
  • உப்பு – தேவையான அளவு

மசாலா அரைப்பதற்கு

  • துருவிய தேங்காய் – 5 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • காய்ந்த மிளகாய் – 5
  • சோம்பு – 3 டீஸ்பூன்
  • இஞ்சி துண்டு – 2
  • பூண்டு – 12 பல்

மீன் பிரியாணி செய்முறை (Fish Biryani Recipe In Tamil)

  • மீன் பிரியாணி செய்வதற்கு முதலில் பாசுமதி அரிசியை நன்றாக இரண்டு முதல் மூன்று முறை கழுவி அதன் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுமார் அரை மணிநேரம் வரை ஊறவைக்கவும்.
  • இந்த பிரியாணிக்கு தேவையான மசாலா அரைப்பதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் துருவிய தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், காய்ந்த சிகப்பு மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • இப்போது பிரியாணி செய்ய முதலில் குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய் ஊற்றவும். அந்த எண்ணெய் சூடான பிறகு அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.
  • பின்னர் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய உடன் புதினா மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
  • இப்போது நாம் அரைத்து வைத்துள்ள விழுதை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். அந்த மசாலாவின் நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்நாக வதக்கி கொள்ளவும். நாம் மாசாலா விழுதிலும் மிளகாய் சேர்த்து அரைத்துள்ளதால் மிளகாய் தூள் அதிகமாக சேர்த்துவிட கூடாது. உங்களது காரத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளவும்.
  • மசாலாக்கள் நன்கு வதங்கிய உடன் அலசிய வஞ்சரம் மீன் துண்டுகளை சேர்த்து கவனமாக கிளறவும்.
  • இப்போது அதில் நாம் அரைமணிநேரம் உறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். ஒரு டம்ளர் அரிசிக்கு 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  • இப்போது உப்பு ருசிபார்த்துக் கொள்ளவும். கொஞ்சம் அதிகமாக இருந்தால் பிரியாணி வெந்து வரும் போது சரியாக இருக்கும். இப்போது 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
  • பின்னர் குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திறந்து பார்த்தால் சுவையான மீன் பிரியாணி தயார்.
Fish Biryani Recipe In Tamil

நாம் இப்பதிவில் வழக்கமாக இல்லாமல் இந்த வீக் எண்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மீன் பிரியாணி செய்வது எப்படி (Fish Biryani Seivathu Eppadi) என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த வீக் எண்ட்ல... சிக்கன் மட்டன்கு பதிலா ஒரு முறை இப்படி Fish Biryani செஞ்சு பாருங்க..!

நாம் இப்பதிவில் சுவையான மீன் பிரியாணி செய்வது எப்படி (Simple Fish Biryani Recipe In Tamil) என்பது குறித்து பார்க்கலாம்.

Type: Appetizer

Cuisine: India

Keywords: Fish Biryani, Fish Biryani Recipe

Recipe Yield: 5

Preparation Time: PT40M

Cooking Time: PT30M

Total Time: PT1H10M

Recipe Ingredients:

  • Basmati rice – 1 kg
  • Vanjaram fish – 1 kg
  • Big onion – 4
  • Ripe tomatoes – 6 to 7
  • Coconut milk – 1 cup
  • Turmeric powder – 1 tbsp
  • Chilli powder – 2 tbsp
  • Coriander powder – 3 tbsp
  • Cloves – 6
  • Band – 3
  • Cardamom – 6
  • Biryani leaves – 2
  • Oil – required amount
  • Ghee – required quantity
  • Mint – a handful
  • Coriander leaves – a handful
  • Salt – required quantity
  • Grated coconut – 5 tbsp
  • Green Chillies – 4
  • Dry Chillies – 5
  • Anise – 3 tbsp
  • Ginger piece – 2
  • Garlic – 12 cloves

Recipe Instructions: மீன் பிரியாணி செய்வதற்கு முதலில் பாசுமதி அரிசியை நன்றாக இரண்டு முதல் மூன்று முறை கழுவி அதன் பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுமார் அரை மணிநேரம் வரை ஊறவைக்கவும். இந்த பிரியாணிக்கு தேவையான மசாலா அரைப்பதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் துருவிய தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், காய்ந்த சிகப்பு மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். இப்போது பிரியாணி செய்ய முதலில் குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய் ஊற்றவும். அந்த எண்ணெய் சூடான பிறகு அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். பின்னர் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய உடன் புதினா மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். இப்போது நாம் அரைத்து வைத்துள்ள விழுதை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். அந்த மசாலாவின் நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கிய பிறகு அந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்நாக வதக்கி கொள்ளவும். நாம் மாசாலா விழுதிலும் மிளகாய் சேர்த்து அரைத்துள்ளதால் மிளகாய் தூள் அதிகமாக சேர்த்துவிட கூடாது. உங்களது காரத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளவும். மசாலாக்கள் நன்கு வதங்கிய உடன் அலசிய வஞ்சரம் மீன் துண்டுகளை சேர்த்து கவனமாக கிளறவும். இப்போது அதில் நாம் அரைமணிநேரம் உறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். ஒரு டம்ளர் அரிசிக்கு 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். இப்போது உப்பு ருசிபார்த்துக் கொள்ளவும். கொஞ்சம் அதிகமாக இருந்தால் பிரியாணி வெந்து வரும் போது சரியாக இருக்கும். இப்போது 2 விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திறந்து பார்த்தால் சுவையான மீன் பிரியாணி தயார்.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: ரெஸ்டாரண்டில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலேயே சிக்கன் ரைஸ் செய்வது எப்படி?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular