Homeசமையல் குறிப்புகள்கார்த்திகை பொரி செய்வது எப்படி? Karthigai Pori Recipe in Tamil..!

கார்த்திகை பொரி செய்வது எப்படி? Karthigai Pori Recipe in Tamil..!

கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று அனைவரது வீடுகளிலும் விளக்கேற்றி திருக்கார்த்திகை பண்டிகை கொண்டாடுவார்கள். அன்று வீட்டு வாசலில் குத்து விளக்கு ஏற்றி மற்ற இடங்களில் அழகாக அகல் விளக்கு ஏற்றுவார்கள் அதனுடன் அவல் பொரி செய்து சாமிக்கு பூஜை செய்வார்கள்.

Karthigai Pori செய்வது வீடுகளில் விளக்கேற்றுவதே Karthigai Deepam Special ஆகும். உங்களுக்கு கார்த்திகை பொரி செய்வது எப்படி என்று தெரியுமா? தெரியாது என்றால் உங்களுக்கு உதவும் வகையில் இந்த Karthigai Pori Seivathu Eppadi என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கார்த்திகை பொரி செய்ய தேவையான பொருட்கள் (Karthigai Pori Ingredients)

பொருட்கள் அளவுகள்
அவல் பொரி4 கப்
பொட்டுக்கடலை 4 ஸ்பூன்
தேங்காய்சிறிது சிறிதாக நறுக்கி 4 ஸ்பூன்
வெல்லம்1 கப் (பொரி அளந்த கப்பில் 1 கப்)
ஏலக்காய் தூள்ஒரு சிட்டிகை
நெய்2 ஸ்பூன்
தண்ணீர்1/4 கப்

கார்த்திகை பொரி செய்முறை (Karthigai Pori Recipe)

Step -1

Coconut Pieces
  • கார்த்திகை பொரி செய்வதற்கு முதலில் Aval Pori -ஐ தூசு இல்லாமல் சலிக்க வேண்டும்.
  • தேங்காயை சிறிது சிறதாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

Step -2

Karthigai Aval Pori Recipe
  • அடிப்பில் ஒரு வாணலியை வைத்து 2 ஸ்பூன் நெய் விட்டு அதனுடன் சிறிதாக நறுக்கிய தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை 4 ஸ்பூன் சேர்க்க வேண்டும்.
  • தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை பொன்னிறமாக வறுப்படும் வரை வதக்கவும், வறுப்பட்ட பின்பு மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

Step -3

Karthigai Deepam Pori Recipe
  • அதே வாணலியில் 1 கப் வெல்லம் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை நன்றாக கரைத்துக்கொள்ளவும், இந்த வெல்ல பாகில் அதிக தூசுக்கள் இருக்கும் எனவே இதனை வடிகட்டி கொள்ளவும்.
  • அந்த வாணலியை நன்றாக சுத்தம் செய்த பிறகு மீண்டும் அந்த வாணலியில் வெல்ல பாகுடன் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • Karthigai Pori செய்யும் அளவிற்கு வெல்லம் பதத்திற்கு வந்து விட்டதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வெல்லத்தின் பதத்தை தெரிந்து கொள்ள ஒரு சிறிய தட்டில் சிறிது நீர் ஊற்றி கொள்ளவும். அதில் காய்ச்சிய வெல்லத்தை சிறிதளவு ஊற்றி உருட்டும்போது வெல்லம் மென்மையான பந்து போல் வர வேண்டும். அப்படி வந்து விட்டால் அடுப்பை அனைத்து விடவும்.

Step -4

Aval Pori in Tamil
  • சலித்த பொரியுடன் நெய்யில் வறுத்த தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பிறகு இதனுடன் வெல்ல பாகையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மொத்தமாக சேர்த்தால் வெல்ல பாகு ஒரே இடத்தில் கெட்டியாகிவிடும்.
Karthigai Pori Recipe in Tamil

இவ்வாறு பொரியுடன் வெல்ல பாகும் சேர்த்து கிளரினால் கார்த்திகை பொரி தயாராகிவிடும். மேல் உள்ள முறைகள் மூலம் How to Make Aval Pori at Home என்பதை பார்த்தோம். இந்த கார்த்திகை தீப திருநாளுக்கு Karthigai Pori செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். அனைவருக்கும் இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.

Karthigai Pori Recipe in Tamil

திருக்கார்த்திகை அன்று வீடுகளில் விளக்கேற்றி கார்த்திகை பொரி செய்வார்கள். இந்த Karthigai Pori Recipe பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Type: Dessert

Cuisine: Indian

Keywords: Karthigai Pori Recipe, How to Make Karthigai Pori

Recipe Yield: 4

Preparation Time: PT20M

Cooking Time: PT30M

Total Time: PT50M

Recipe Ingredients:

  • Aval Pori 4 cups
  • Peanuts 4 tbsp
  • Small Chopped Coconut 4 tbsp
  • Jaggery 1 cup (1 cup in Aval Pori cup)
  • A Pinch of Cardamom Powder
  • Ghee 2 tbsp
  • Water 1/4 cup

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் 2023..! 
Karthigai Pori Recipe – FAQ

1. கார்த்திகை தீபம் எப்போது கொண்டாடப்பட உள்ளது?

இந்த வருடம் கார்த்திகை தீபம் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

2. கார்த்திகை தீபம் அன்று எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்?

நட்சத்திரங்கள் அடிப்படையில் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்ற முடியாதவர்கள் 5,7 என ஒற்றை படையில் விளக்குகள் ஏற்றலாம்.

3. வாசலில் போடும் கோலத்தில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

கோலத்தில் கார்த்திகை தீபம் அன்று 5 விளக்குகள் ஏற்ற வேண்டும்.

4. எந்த திசை பார்த்து விளக்கு ஏற்ற கூடாது?

தெற்கு திசை பார்த்து விளக்கு ஏற்ற கூடாது.

5. கார்த்திகை தீபம் எப்போது ஏற்ற வேண்டும்?

திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றுவார்கள் அதன்பின் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular