Homeசமையல் குறிப்புகள்Instant Ragi Recipes: மாவு இல்லாத நேரத்துல இத செஞ்சு பாருங்க..! அடிக்கடி செய்வீங்க..!

Instant Ragi Recipes: மாவு இல்லாத நேரத்துல இத செஞ்சு பாருங்க..! அடிக்கடி செய்வீங்க..!

நம் உடலுக்கு நன்மை சேர்க்கும் உணவுகளில் முக்கிய இடத்தில் இருப்பது தானிய வகைகள் தான். அவற்றை நாம் அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அப்படி சேர்த்துக் கொள்வது இல்லை. அதிலும் குழந்தைகள் என்றால் செல்லவே தேவையில்லை இது போன்ற உணவுகளை உண்பதே இல்லை. இதுபோல உடலுக்கு ஊட்டம் தரும் உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்தது போல செய்துக்கொடுக்கும் போது அவர்கள் விரும்பி உண்பர். அதுபோன்ற ஒரு ரெசிபியை தான் நாம் இப்பதிவில் பார்க்கவுள்ளோம். மாவு இல்லாத நேரத்தில் ராகி மாவை வைத்து தேசை மற்றும் இட்லி செய்வது எப்படி (How to Make Ragi Dosa in Tamil) என்பது குறித்து பார்க்கலாம்.

ராகி இட்லி செய்வது எப்படி (How to Make Ragi Idli in Tamil)

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு – 1/2 கப்
  • சம்பா ரவை – 1/2 கப்
  • கெட்டி தயிர் – 1/4 கப்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவையான அளவு
  • நெய் – தேவையான அளவு
  • கடுகு – சிறிதளவு
  • உளுந்து – சிறிதளவு
  • கடலை – சிறிதளவு
  • பெரிய வெங்காயம் – 1
  • துருவிய கேரட் – 1/2 கப்
  • வர மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு

ராகி இட்லி செய்முறை (Ragi Idly Recipe in Tamil)

  • ராகி இட்லி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் சம்பா ரவை சேர்த்து அதனுடன் கால் கப் தயிர் மூன்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரத்திற்கு அப்படியே மூடி வைக்கவும்.
  • இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அது சூடான பிறகு கடுகு, உளுந்து தாளித்து அதனுடன் கடலை சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் அதனுடன் கிள்ளிய வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
  • இப்போது இதில் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், அரை கப் கேரட் மற்றும் அதனுடன் மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து வதக்கவேண்டும்.
  • இவை நன்கு வதக்கிய பிறகு அனைத்தையும் நாம் கலந்து வைத்துள்ள ராகி மாவுடன் சேர்த்து கலந்து இட்லி தட்டுகளில் இட்லிகளாக சுட்டு எடுக்கவேண்டும். இந்த மாவை தோசைக்கல்லில் சேர்த்து தோசைகளாகவும் வார்க்கலாம்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள கடலைச் சட்னி, புதினா சட்னி அல்லது குருமா சிறப்பாக இருக்கும் மற்றும் அசைவ குழம்புகள் இதனுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
How to Make Ragi Dosa in Tamil

நாம் இப்பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ராகி இட்லி மற்றும் தேசை செய்வது எப்படி (Ragi Dosai Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.

Instant Ragi Recipes: மாவு இல்லாத நேரத்துல இத செஞ்சு பாருங்க..! அடிக்கடி செய்வீங்க..!

மாவு இல்லாத நேரத்தில் ராகி மாவை வைத்து தேசை மற்றும் இட்லி செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Type: Appetizer

Cuisine: Tamil Nadu

Keywords: Ragi Idli, Ragi Dosai, Ragi Dosa

Recipe Yield: 2

Preparation Time: PT10M

Cooking Time: PT30M

Total Time: PT40M

Recipe Ingredients:

  • Ragi flour – 1/2 cup
  • Chamba semolina – 1/2 cup
  • Thick curd – 1/4 cup
  • Salt – as per taste
  • Oil – required amount
  • Ghee – required quantity
  • Mustard – a little
  • Uludu – a little
  • Chickpeas – a little
  • Big Onion – 1
  • Grated carrot – 1/2 cup
  • Vara Chilli – 2
  • Curry leaves – a little
  • Coriander – a little

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: உங்க குழந்தைங்க வாழைப்பூ சாப்பிட மாட்டேங்குறாங்களா..! இப்படி ஒரு முறை செஞ்சு கொடுங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular