வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் உண்ண வேண்டிய ஒரு பொருள் தான் வாழைப்பூ. இந்த வாழைப்பூவில் அதிக அளவிலான நன்மைகள் உள்ளன. ஆனால் இதனை பலர் விரும்பி உண்பதே இல்லை. அதிலும் குழந்தைகள் செல்லவே இல்லை இதுப்போன்ற உணவுப்பொருட்களை எல்லாம் தொடவே மாட்டார்கள். இது போன்ற நேரங்களில் நாம் இந்த உணவை அவர்களுக்கு பிடித்த துரித உணவுகள் போல செய்துக்கொடுத்தால் விரும்பி உண்பர். அதுபோல ஒரு ரெசிபியை தான் நாம் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். ஆம் நாம் இப்பதிவில் வாழைப்பூ 65 செய்வது எப்படி (How to Make Valaipoo Chilli in Tamil) என்பது குறித்து பார்க்கலாம்.
வாழைப்பூ 65 செய்வது எப்படி (How to Make Valaipoo 65 in Tamil)
தேவையான பொருட்கள்
- வாழைப்பூ – 1/2 கப்
- கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- கார்ன் ஃப்ளோர் மாவு – 1/4 கப்
- காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- தனி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – தேவையான அளவு
வாழைப்பூ 65 செய்முறை (Valaipoo 65 Recipe in Tamil)
- வாழைப்பூ 65 செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் கார்ன் ஃப்ளோர், அரிசி மாவு, கடலை மாவு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள் அகியவற்றை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அதன் பிறகு இந்த கலவையில் இஞ்சி பூண்டு விழுது, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிக் வைத்துக்கொள்ளவும்.
- இப்போது நன்றாக சுத்தம் செய்து வைத்துள்ள ஒரு கைப்பிடி வாழைப்பூவை அந்த மாவோடு சேர்த்து, நாம் சேர்த்த வாழைப்பூவை அந்த மாவில் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு 5 நிமிடம் அப்படியே ஊறவிடவும்.
- பின்னர் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். இந்த எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மசாலா கலவையில் கலந்து வைத்துள்ள வாழைப்பூவை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் கிரிஸ்பியான வாழைப்பூ 65 ரெடி.
நாம் இப்பதிவில் அனைவருக்கும் பிடித்த சுவையில் வாழைப்பூ 65 செய்வது எப்படி (Valaipoo 65 Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.
உங்க குழந்தைங்க வாழைப்பூ சாப்பிட மாட்டேங்குறாங்களா..! இப்படி ஒரு முறை செஞ்சு கொடுங்க..!
நாம் இப்பதிவில் அனைவருக்கும் பிடித்த சுவையில் வாழைப்பூ 65 செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கவுள்ளோம்.
Type: Snacks
Cuisine: Tamil Nadu
Keywords: Valaipoo 65 Recipe, Valaipoo Chilli
Recipe Yield: 2
Preparation Time: PT10M
Cooking Time: PT10M
Total Time: PT20M
Recipe Ingredients:
- Banana flower – 1/2 cup
- Chickpea flour – 1 tablespoon
- Rice flour – 1 tablespoon
- Corn flour – 1/4 cup
- Kashmiri Chilli Powder – 2 tbsp
- Single Chilli Powder – 1/2 tsp
- Ginger garlic paste – 1 tbsp
- Garam masala – 1/2 tsp
- Cumin powder – 1/4 tsp
- Salt – as per taste
- Oil – required amount
Recipe Instructions: வாழைப்பூ 65 செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் கார்ன் ஃப்ளோர், அரிசி மாவு, கடலை மாவு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள் அகியவற்றை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு இந்த கலவையில் இஞ்சி பூண்டு விழுது, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிக் வைத்துக்கொள்ளவும். இப்போது நன்றாக சுத்தம் செய்து வைத்துள்ள ஒரு கைப்பிடி வாழைப்பூவை அந்த மாவோடு சேர்த்து, நாம் சேர்த்த வாழைப்பூவை அந்த மாவில் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு 5 நிமிடம் அப்படியே ஊறவிடவும். பின்னர் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். இந்த எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மசாலா கலவையில் கலந்து வைத்துள்ள வாழைப்பூவை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் கிரிஸ்பியான வாழைப்பூ 65 ரெடி.
4.5
இதையும் படியுங்கள்: ரெஸ்டாரண்டில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலேயே சிக்கன் ரைஸ் செய்வது எப்படி? |