Homeஆன்மிகம்தீபாவளிக்கு ஏன் தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்?

தீபாவளிக்கு ஏன் தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்?

தீபாவளி பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாட உள்ள நிலையில் புத்தாடை வாங்குவதற்கும், பட்டாசு வாங்குவதற்கும் கடைகளில் விற்பனை களைகட்டி உள்ளது என்று கூறலாம். தீபாவளி தினத்தன்று புது ஆடைகள் உடுத்துவது, பட்டாசு வெடிப்பது, இனிப்புகள் செய்வது மட்டும் தீபாவளி பண்டிகையை நிறைவு செய்யாது. தீபாவளி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது (Oil Bath) ஒரு வழக்கமான ஒன்றாகும்.

ஆனால் நம்மில் பலருக்கும் ஏன் Deepavali தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம் என்று தெரியாது. தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது கங்கா ஸ்நானம் என்று கூறுவார்கள்.

ஏனென்றால் அனைவராலும் கங்கை நதியில் சென்று நீராட முடியாது. எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்தால் கங்கை நதியில் குளிப்பதற்கு சமமாகும். அதுமட்டுமல்ல எண்ணெய் தேய்த்து கட்டாயம் சீயக்காய் மட்டும் தான் தேய்த்து குளிக்க வேண்டும். ஏனென்றால் எண்ணெயில் மகாலெட்சுமியும், சீயக்காயில் சரஸ்வதியும், வெந்நீரில் கங்கா இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

Ganga Bathing

தீபாவளி தினத்தன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பாக எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இந்த வருடம் நவம்பர் 12-ம் தேதி தீபாவளி வருவதால் அன்று அதிகாலை 3 மணி முதல் 5.30-க்குள் நல்லெண்ணய் தேய்த்து குளிக்க வேண்டும்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular