Homeவிளையாட்டுWorld Test Cricket: வெளியானது புள்ளிப்பட்டியல்..! இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

World Test Cricket: வெளியானது புள்ளிப்பட்டியல்..! இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

உலக நாடுகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய இடத்தை பிடிப்பது டெஸ்ட் போட்டிகள் (World Test Cricket) தான். இந்நிலைியில் தான் தற்போது இந்த ஆண்டிற்கான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் இப்போது 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பட்டியல் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவதை வைத்து கணக்கிடப்பட்டு வருகிறது. இறுதியில் இந்த புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஜந்து போட்டிகள் கொண்ட தொடரின் 4-வது ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் அந்த தொடரையும் கைப்பற்றியது.

இதன் மூலம் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது. மேலும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து 4-வது இடத்தில் பங்களாதேஷ், 5-வது இடத்தில் பாகிஸ்தான் மற்றம் 6-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உள்ளது.

World Test Points Table
இதையும் படியுங்கள்: திடீரென ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..! என்ன காரணம்?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular