Homeஆன்மிகம்Thaipusam 2024 in Tamil: தைப்பூசம் அன்று எந்த நேரத்தில் முருகனை வழிபட வேண்டும்..!

Thaipusam 2024 in Tamil: தைப்பூசம் அன்று எந்த நேரத்தில் முருகனை வழிபட வேண்டும்..!

Thaipusam பற்றிய முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்க உள்ளோம். அதற்கு பொங்கல் குறித்து பார்க்கலாம். தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தான் பொங்கல். இப்பண்டிகை தமிழ் மாதங்களில் ஒன்றான தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த தை மாதத்தில் தான் சில முக்கிய பண்டிகைகளும் வருகின்றன. இதுபோல் தான் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் தைப்பூசம் திருநாளும் வருகின்றது.

இந்த தைப்பூசம் திருநாள் தை மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரம் மற்றும் பௌர்ணமியும் ஒன்றாக சேர்த்து வரும் நாள் தான் தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இந்த திருநாள் முருகனுக்கு மிகவும் பிடித்த நாளாக உள்ளது.

தைப்பூசம் அன்று உலகம் முழுவதும் உள்ள பல முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், காவடி போன்ற பல நிகழ்வுகள் நடைபெறும். எனவே அந்த இடங்கள் அனைத்தும் அன்று திருவிழாக் கோலத்தில் தான் இருக்கும்.

தைப்பூசம் (Thaipusam Meaning)

தைப்பூசம் என்பது இந்துக்களின் பண்டிகைகள் மற்றும் பூஜை நாட்களில் மிகவும் முக்கிய நாளாகும். இந்த நாள் கடவுள் முருகனுக்கு மிகவும் முக்கியமான நாளாகவும் உள்ளது. இந்நாளில் அனைத்து முருகன் கோவிலிலும் பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.

தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது (Thaipusam History)

சிவபெருமான் அவர்கள் அசுரர்களான சூரபத்மன், தாரகாசுரன், சிங்கமுகன் ஆகிய மூன்றுக்கு அளித்த வரத்தின் காரணமாக அவர்கள் பல அற்புத சக்திகளை பெற்றனர். அந்த சக்திகளை கொண்டே அவர்கள் தேவர்களை சிறைபிடிக்க தொடங்கினர். இதன் காரணமாக இதனால் தேவர்கள் அவர்களுக்கு அஞ்சி மறைந்து வாழ்ந்து வந்தனர். இந்த சூழலை தேவர்கள் மகாதேவரிடம் தெரிவித்தனர்.

தேவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க, அந்த மூன்று அசுரர்களின் பாவக்குடமானது நிறைந்து அவர்களுடைய அழிவுகாலமும் வந்தது. அப்போது தான் முருகனுக்கு ஞானவேலை கொடுத்தார் அன்னை பார்வதி தேவி. அந்த ஞானவேல் கொடுக்கப்பட்ட தினத்தை தான் நாம் அனைவரும் தைப்பூச தினமாக கொண்டாடுகிறோம். அன்னை தனக்கு அளித்த ஞானவேல் கொண்டு கந்தன் அசுரவதம் புரிந்து தேவர்களை காத்தருளினார். அந்த அசுரவதம் திருச்செந்தூரில் தான் நடைபெற்றது.

தைப்பூசம் 2024 (Thaipusam 2024 Date)

இந்த தைப்பூசம் (Thaipusam Festival) திருநாள் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த வருடமும் இத்திருநாள் தை மாதத்தில் கொண்டாப்படுகிறது. ஜனவரி மாதத்தில் இத்திருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த வருடம் ஜனவரி மாதம் 25-ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படவுள்ளது.

தைப்பூசத்தின் சிறப்புகள்

  • தைப்பூசம் அன்று தான் இந்த உலகம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது.
  • சிவப்பெருமான் அவர்கள் தேவி உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி காட்சியளித்த நாள் என்றும் கூறுவர்.
  • தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசம் அன்று குருபூஜைகளும் சிறப்பாக நடைபெறும்.
  • தைப்பூசம் தினத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்து அவரை வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை.
  • மேலும் தைப்பூசம் அன்று விரதம் இருப்பதால் கணவன்-மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
  • தமிழகம் முழுவதும் தைப்பூசம் வெகுவிமர்சையாக கொண்டாப்படும். எனவே அன்று தமிழகத்தில் உள்ள முருகன் கேவில்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
  • தைப்பூசம் நாள் மிகவும் நல்ல நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. எனவே இந்த நாளில் பல நல்ல காரியங்கள் தொடங்கப்படுகிறது. அன்று எந்த காரியம் தொடங்கினாலும் அது சிறந்த பலனைக் தரும் என்பது நம்பிக்கை.
  • இந்த நன்னாளை நோக்கி இதற்கு முன்னதாகவே முருகன் பக்தர்கள் துளசி மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பழனிக்கு சென்று முருகனை தரிசிப்பது வழக்கம்.
Singapore Thaipusam
பொங்கல் வாழ்த்துக்கள்: தமிழர் திருநாள் Pongal Wishes 2024 in Tamil..!

தைப்பூசம் விரதம் (Thaipusam Viratham)

தைப்பூசம் அன்று பக்தர்கள் பல முறைகளில் விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்வர். அதனை இனி பார்க்கலாம்.

  • தைப்பூச திருநாள் அன்று பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, நெற்றியில் திருநீறு அணிந்துக்கொண்டு, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், போன்றவற்றை அன்று மாலை வரை படிக்கலாம்.
  • அப்படி இல்லாமல் வேளைக்கு செல்வோர் முருகனை காலையிலேயே வழிபட்டுவிட்டு அன்றைய நாள் முழுவதும் கந்தனை மனதில் நினைத்து “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை உச்சரித்தவாறே தங்களின் வேலைகளை செய்யலாம்.
  • தைப்பூசம் அன்று காலை மற்றும் மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருக்கலாம். அதன் பிறகு மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடலாம்.
  • தைப்பூசம் அன்று பலரும் சைவ உணவுகளை எடுத்துக்கொண்டு விரதம் இருந்து முருகனை வழிப்படுவர்.
  • அசுரர்களை வதம் செய்த நாளை தான் தைப்பூசம் என்பதால் அந்நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதால் அதிக பயன் கிடைக்கம் என்றும் நம்மிடம் உள்ள தீய சக்திகள் நீங்கும் என்பதும் ஒரு நம்பிக்கை உள்ளது.
Thaipusam Viratham

தைப்பூசம் வழிபாட்டிற்கு உகந்த நேரம் (Thaipusam Pooja Time)

இந்த 2024-ம் ஆண்டு தைப்பூசம் திருநாள் ஜனவரி 25-ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் இரவு 11.56 வரை பெளர்ணமி திதி உள்ளது. எனவே அன்றைய நாள் முழுவதையும் பெளர்ணமி திதியாக எடுத்துக் கொள்ளலாம்.

எனினும் பூசம் நட்சத்திரமானது காலை 09.14 மணிக்கு துவங்குகிறது. எனவே பெளர்ணமி திதி மற்றும் பூசம் நட்சத்திரம் ஆகியவை இணையும் நாளையே நாம் தைப்பூச திருநாளாக கொண்டாடுகிறோம். இதன் காரணமாக காலை 09.20 முதல் 10.30 வரையிலான நேரத்திலும், மாலை 06.15 முதல் 07.30 வரையிலான நேரத்திலும் தைப்பூச வழிபாட்டை (Thaipusam Valipadu Neram) மேற்கொள்வது சிறப்பானதாகும்.

தைப்பூசம் கோலம் (Thaipusam Kolam)

தைப்பூசம் திருநாள் அன்று பலர் வீடுகளில் பூஜைகள் எல்லாம் நடைபெறும் எனவே தைப்பூசம் அன்று கோலம் இடுவதற்கு ஏதுவாக சில தைப்பூசம் கோலங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

Thaipusam Kolam Model
Thaipusam Kolam Design

தைப்பூசம் வாழ்த்துக்கள் (Thaipusam Wishes in Tamil)

  • தமிழர் வாழும் நாடுகளில் தைப்பூசத்தைக் கொண்டாடாத நாடில்லை. அனைவருக்கும் இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்..!
  • முருகப் பெருமான் அருள் ஆசியுடன், இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.!

இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள்!

  • வேல் உண்டு வினையில்லை..

மயில் உண்டு பயன் இல்லை.!

குகன் உண்டு குறை இல்லை…

கந்தன் உண்டு கவலை இல்லை..!

இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்!

இப்பதிவில் தைப்பூசம் பற்றிய தகவல் கொடுக்க்பட்டுள்ளது. இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கு என நம்புகிறோம்.

தைப்பூசம் – FAQ

1. இந்த வருடம் தைப்பூசம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

இந்த வருடம் ஜனவரி மாதம் 25-ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

2. தைப்பூசம் விரதம் எத்தனை நாட்களுக்கு கடைப்பிடிக்கப்படுகிறது?

பொதுவாக தைப்பூசத்திற்கு முன்னதாக 48 நாட்கள் விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

3. எந்த நாளை நாம் தைப்பூசமாக கொண்டாடுகிறோம்?

முருகப்பெருமான் அசுரர்களை வதம் செய்த நாளை தான் நாம் தைப்பூசமாக கொண்டாடுகிறோம்.

4. தைப்பூசம் என்றால் என்ன? What is Thaipusam?

தைப்பூசம் என்பது கடவுள் முருகன் அசுரர்களை வதம் செய்து தேவர்களை காத்த நாளாகும். இதனை கொண்டாடும் விதமாக தான் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்: பொங்கல் வரலாறு..! Pongal History in Tamil..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular