Homeசெய்திகள்LPG சிலிண்டர்கள் வாங்குவதற்கு புதிய ரூல் அறிமுகம்..!

LPG சிலிண்டர்கள் வாங்குவதற்கு புதிய ரூல் அறிமுகம்..!

இன்றைய காலகட்டத்தில் LPG சிலிண்டர்கள் பயன்படுத்தும் வீடுகளே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு அணைவராலும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. இது அடிப்படை தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் தான் தற்போது இந்த எல்பிஜி சிலிண்டர்கள் வாங்குவதற்கு புதிய ரூல்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு LPG சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் மானிய விலையில் சிலிண்டர் போன்ற பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் ஒரு புதிய ரூல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ரூல் ஏப்ரல் 1-ம் தேதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்களின் கீழ் மக்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிலிண்டர்களை பெறுவதற்க்கு தான் புதிய ரூல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் படி இந்த மானிய விலையில் சிலிண்டர் திட்டத்தினை பொதுமக்கள் தொடர்ந்து பெற வேண்டும் எனில் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் KYC ஆவணங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மானிய விலையில் மானிய விலையில் சிலிண்டர்கள் வாங்குபவர்கள் மட்டுமின்றி அனைத்து LPG சந்தாதாரர்களும் KYC ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LPG cylinders
இதையும் படியுங்கள்: தளபதி 69 படத்தை இயக்கும் இயக்குனர் யார்? வெளியான முக்கிய தகவல்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular