Homeசமையல் குறிப்புகள்Kadamba Sambar Recipe: காய்கறிகள் நிறைந்த கதம்ப சாம்பார்… ஈசியான செய்முறை விளக்கம்..!

Kadamba Sambar Recipe: காய்கறிகள் நிறைந்த கதம்ப சாம்பார்… ஈசியான செய்முறை விளக்கம்..!

Kadamba Sambar Recipe: மனிதர்களின் அடிப்படை தேவைகளில் முதல் இடத்தில் இருப்பது உணவு. இந்த உணவு தான் நாம் வாழ காரணமாக இருக்கிறது. இந்த உணவில் இரண்டு வகை உள்ளது. ஒன்று சைவம் மற்றொன்று அசைவம். இந்த பதிவல் சைவ உணவு ஒன்றை பற்றி தான் பார்க்க உள்ளோம்.

சைவ உணவு என்றாலே அனைவரின் மனதிலும் முதலில் தோன்றுவது சாம்பார் தான். இந்த சாம்பார் சாதத்தில் (Kadamba Sambar Sadam Recipe) ஊற்றி உண்ணப்படும், தோசை மற்றும் இட்லி போன்ற உணவுகளுக்கு தொட்டுக்கையாகவும் சாம்பார் உண்பார்கள். இந்த சாம்பாரில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கதம்ப சாம்பார். இந்த கதம்ப சாம்பார் செய்வது (Kadamba Sambar Recipe in Tamil) எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கதம்ப சாம்பார் செய்வது எப்படி (Kadamba Sambar Recipe) Kadamba Sambar Seivathu Eppadi

இந்த கதம்ப சாம்பாரில் பல வகையான காய்கரிகள் சேர்க்கப்படும். காய்கறிகளில் உள்ள அனைத்து சத்துக்களும் நம் உடலுக்கு கூடுதல் சக்தியை தரும். உணவே மருந்தாக உண்டு வந்த நம் முன்னோர்கள் இந்த கதம்ப சாம்பார் மூலம் ஊட்டச்சத்துக்களை குழந்தைகளுக்கு தந்து வளர்த்தனர்.

இந்த சுவைமிருந்த கதம்ப சாம்பார் செய்வது எப்படி (Kadamba Sambar Seivathu Eppadi) என்பதையும் அதை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் தேவையான காய்கறிகள் (Kadamba Sambar Vegetables) என் என்பதை பற்றியும் கீழ் காண்போம்.

தேவையான பொருட்கள் (Kadamba Sambar Ingredients)

  • துவரம் பருப்பு – 100 கிராம்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • வரமிளகாய் – 2
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • கத்திரிக்காய் – 4
  • முருங்கைக்காய் – 2
  • அவரைக்காய் – 5
  • பூண்டு – 5பல்
  • மஞ்சள் தூள்
  • மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
  • தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • புளி கரைசல் – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கருவேப்பிலை – சிறிதளவு

கதம்ப சாம்பார் செய்முறை (How to Make Kadamba Sambar)

  • முதலில் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் துவரம் பருப்பு போட வேண்டும். அதனுடன் சீரகம், பூண்டு, மிளகு தூள் மற்றும் பெருங்காயம் சேர்க்க வேண்டும். 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
  • கத்திரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், கேரட் ஆகியவற்றை நன்றாக சுத்தமாக கழுவி நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு நறுக்கிய காய்கறிகளை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
Kadamba Sambar Vegetables
  • பிறகு அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், சாம்பார் பொடி, தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  • காய்கறி வெந்ததும் அதனுடன் வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து சிறிதளவு புளி கரைசலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம் பெரிய வெங்காயம், கருவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • காய்கரிகள் வெந்து சாம்பார் நன்றாக கொதி வந்த பிறகு தாளித்த பொருட்களை சேர்க்கவும். இப்போது சுவையான சூடான கதம்ப சாம்பார் தயார் (Kadamba Sambar in Tamil).
Kadamba Sambar Recipe: காய்கறிகள் நிறைந்த கதம்ப சாம்பார்… ஈசியான செய்முறை விளக்கம்..!

சுவையான சத்துள்ள கதம்ப சாம்பார் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் (Kadamba Sambar Recipe) பார்க்கலாம்.

Type: Dish

Cuisine: Tamil Nadu

Keywords: Kadamba Sambar Recipe, kadamba Sambar

Recipe Yield: 5

Preparation Time: PT5M

Cooking Time: PT20M

Total Time: PT25M

Recipe Ingredients:

  • Duvaram dal – 100 grams
  • Mustard – 1 tbsp
  • Cumin – 1 tbsp
  • Chilli – 2
  • Big Onion – 1
  • Tomato – 2
  • Eggplant – 4
  • Drumstick – 2
  • Bhankai – 5
  • Garlic – 5 cloves
  • Turmeric powder – 2 tbsp
  • Chilli powder – 2 tbsp
  • Taniyad powder – 2 tbsp
  • Salt – required quantity
  • Tamarind solution – little
  • Oil – Required amount
  • Fenugreek – little

Recipe Instructions: முதலில் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் துவரம் பருப்பு போட வேண்டும். அதனுடன் சீரகம், பூண்டு, மிளகு தூள் மற்றும் பெருங்காயம் சேர்க்க வேண்டும். 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். கத்திரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், கேரட் ஆகியவற்றை நன்றாக சுத்தமாக கழுவி நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நறுக்கிய காய்கறிகளை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதனுடன் மிளகாய் தூள், தனியா தூள், சாம்பார் பொடி, தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும். காய்கறி வெந்ததும் அதனுடன் வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து சிறிதளவு புளி கரைசலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம் பெரிய வெங்காயம், கருவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கரிகள் வெந்து சாம்பார் நன்றாக கொதி வந்த பிறகு தாளித்த பொருட்களை சேர்க்கவும். இப்போது சுவையான சூடான கதம்ப சாம்பார் தயார்.

Editor's Rating:
4.5
மேலும் படிக்க: Kuthiraivali Pongal Recipe: இத ஒரு டைம் செஞ்சு பாருங்க..! அப்புறம் இட்லி தோசை எல்லாம் மறந்துடுவீங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular