Homeஆன்மிகம்கார்த்திகை தீப திருநாள்..! சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?

கார்த்திகை தீப திருநாள்..! சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?

கார்த்திகை மாதம் வந்தாலே நம் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். வீடுகளில் மட்டுமல்லாமல் கோவில்களிலும் விளக்குகள் ஏற்றுவார்கள். அன்று சிவன் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடைபெறும். சிவபெருமானுக்கு சொக்கன் என்ற பெயரும் உள்ளதால் சொக்கப்பனை என்று அழைக்கப்பட்டது. சங்க காலத்தில் இருந்தே கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் இந்த பதிவில் (Chokkapanai Meaning in Tamil) சொக்கபனை ஏன் கொளுத்துகிறார்கள் என பார்க்கலாம்.

பூலோக கற்பகவிருட்சம்

Chokkapanai

சொக்கப்பனை கொளுத்துவதற்கு பனைமர ஓலை வைத்து தான் கொளுத்துவார்கள். வேறு எந்த மரத்திற்கு இல்லாத தனி சிறப்பு பனை மரத்திற்கு உண்டு. பனை மரத்தின் அடி முதல் நுனி வரை உள்ள அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயன்படும். அதனால் நாம் இருக்கும் வரை பனை மரம் போல அனைவருக்கும் உதவியாக இருக்க வேண்டும். அதன் மூலம் நாம் முக்தி அடைய முடியும் என்றும் சொர்க்க பனை அல்லது சொக்கப்பனை சிவாலயங்களில் கொளுத்துகிறார்கள்.

பனை மரத்தின் ஓலை பச்சையாக இருந்தாலும் எரியக்கூடிய தன்மை உண்டு. கற்பக விருட்சமாக பனை தழைத்து நின்றிருக்கிறது. இந்த பனை மரத்தை தேவமரம் என்று அழைப்பார்கள்.

சிவாலயங்களில் சொக்கப்பனை

அடிமுடி தெரியாத வண்ணம் சிவப்பெருமான் விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் காட்சியளித்ததை நினைவூட்டும் விதமாக இந்த சொக்கப்பனை கொளுத்தப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக கொளுத்தப்படும் சொக்கப்பனையில் இருந்து கிடைக்கும் சாம்பலை வயல்களில் தூவினால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை கூம்பு என்றால் என்ன? What is Karthigai Koombu?

கார்த்திகை கூம்பு என்பது பனை மரத்தை வெட்டி வந்து கோவிலின் முன் நடுவார்கள். பின் பனை ஓலைகளை சுற்றி அடுக்கி வைத்து கூம்பு போன்று அடுக்கி வைப்பார்கள். பிறகு அதனை கொளுத்திவிடுவார்கள்.

திருவண்ணாமலை சொக்கப்பனை

Karthigai Deepam அன்று மகாதீபம் திருவண்ணாமலையில் ஏற்றுவது வழக்கம். அன்றைய தினம் மலையில் மகாதீபம் ஏற்றப்படுவதால் அங்கு சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இல்லை.

மேலும் படிக்க: கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் 2023..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular