Homeஆன்மிகம்கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் 2023..! Karthigai Deepam Wishes in Tamil

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் 2023..! Karthigai Deepam Wishes in Tamil

முன்னுரை

தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த கார்த்திகை மாதம் எட்டாவது மாதமாக தமிழ் நாட்காட்டியில் உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். இந்த கார்த்திகை மாதம் சிவபெருமான், முருகபெருமான் மற்றும் விஷ்ணு பகவானுக்கு பிடித்த மாதமாக பார்க்கப்படுகிறது.

இந்த கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை சிவ ஆலயங்களில் சிவபூஜை செய்வது வழக்கம். திருக்கார்திகை அன்று புகழ்பெற்ற திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும். இதனை காண்பதற்கு பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் வருவார்கள். இதனால் தமிழக அரசு 6832 சிறப்பு பேருந்து வசதிகள் செய்துள்ளது.

இந்த கார்த்திகை திருநாளில் மக்கள் மாலை நேரத்தில் வீடுகளில் விளக்கு ஏற்றுவார்கள். அன்றைய தினம் மக்கள் தங்கள் வீடுகளில் பக்கதில் உள்ள சிவ ஆலயம் சென்று அகல் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.

அன்றைய தினம் தங்கள் வீடுகளில் விளக்கேற்றும் போது சிவபெருமானையும், முருகப்பெருமானையும் வணங்கி சகல செல்வங்களும் கிடைக்க வணங்குவார்கள். இந்த பதிவில் நாம் நம் உறவுகளுடன் இந்த கார்த்திகை தீப திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட இனிய கார்த்திகை தீப வாழ்த்துகள் படங்களை Karthigai Deepam Wishes HD Images in Tamil பதிவிட்டுள்ளோம். அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்.

Table of Contents

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் 2023

Karthigai Deepam wishes

அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மளிரட்டும் தீபத்திருநாளை கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் Iniya Karthigai Deepam Valthukkal.

கார்த்திகை தீபம் திருநாள் வாழ்த்துக்கள்: Karthigai Deepam Wishes in Tamil

Karthigai Deepam Quotes in Tamil

சகல சுகங்களையும் இந்த தீபத் திருநாள் தங்களுக்கு வழங்கட்டும். அனைவருக்கும் Karthigai Deepam Wishes.

Karthigai Deepam Vazhthukkal 2023

Karthigai Deepam Vazhthukkal

ஏற்றும் தீப ஒளியினில் வீடுகளை மட்டும் அல்ல இதயங்களையும் வெளிச்சமாக்குவோம். அனைவருக்கும் Karthigai Deepam NalVazhthukkal.

Karthigai Deepam Quotes in Tamil 2023

Thiruvannamalai Deepam

அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் தீபங்களால் சுத்தம் செய்து, இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும். அனைவருக்கும் Karthigai Deepam Vazhthukkal.

இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

Happy Karthigai Deepam wishes

தீமையின் அருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும். அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.

Iniya Karthigai Deepam Valthukkal in Tamil 2023

Iniya Karthigai Deepam Valthukkal

நட்சத்திர ஒளியில் வானம் நிறைந்திருப்பது போல் தீப ஒளியில் இல்லம் நிறையட்டும். அனைத்து உறவுகளுக்கும் இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.

இனிய கார்த்திகை தீபம் : Thiru Karthigai Deepam 2023

karthigai Viratham Irupathu Eppadi

அனைவரின் வாழ்க்கையிலும் துன்பங்கள் நீங்கி இம்மண்ணுலகில் புது இன்பங்கள் துளிரட்டும். karthigai Deepa Vazhthukkal

karthigai Deepam Kavithaigal in Tamil 2023

karthigai Deepam Kavithaigal in Tamil

அன்பு என்னும் ஒளி ஏற்றி இணைந்தே கொண்டாடுவோம். Thiru Karthigai Deepam வாழத்துக்கள்.

கார்த்திகை தீபம் கவிதைகள்

Karthigai Deepam

தீபத்திருநாளை கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும் karthigai Deepam வாழ்த்துக்கள்.

karthigai Deepam 2023

Karthigai Viratham Palangal in Tamil

திருவண்ணாமலை சிவனின் திருவருள் பெற்று Thiru Karthigai வாழ்த்துக்கள்.

திருவண்ணாமலை தீபம்: Thiruvannamalai Maha Deepam 2023

திருவண்ணாமலையில் மாலையில் மகாதீபம் ஏற்றபடுவது வழக்கம். இது காலையில் பரணி தீபம் ஏற்றிய பிறகு மாலையில் மலையில் இந்த தீபம் ஏற்றப்படும். இதில் சிவபெருமான் அக்னி பிழம்பாக மலையில் நின்றார் என்பது ஐதீகம். அதனால் இத்தீபம் 2668 அடி உயரத்தில் உள்ள திருவண்ணாமலையில் உள்ள மலையில் ஏற்றப்படுகிறது.

இந்த மலையில் தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் விளக்கேற்றுவார்கள். இதில் 3000 கிலோ நெய்யும், 1000 மீட்டர் காட துணியும் கொண்டு விளக்கேற்றப்படுகிறது.

மேலும் படிக்க: சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?

கார்த்திகை விரதம்: karthigai Viratham Irupathu Eppadi

கார்த்திகை மாதத்தில் முருகபெருமான் பிறந்ததாள் அவருக்கு கார்த்திகேயன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. திருக்கார்த்திகைக்கு முதல் நாள் பரணி நட்சத்திரத்தில் நண்பகலுக்கு மேல் அதாவது இரவு முதல் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் மறுநாள் கார்த்திகை அன்று காலையில் எழுந்து நீராடி முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றிவிட்டு வரலாம். அன்று முழுவதும் முருகன் மந்திரம் சொல்வது, ஸ்கந்த புராணம் சொல்வது சிறந்தது.

உடல் நிலை காரணமாக கட்டாயம் உணவு எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் பால், பழம் போன்றவை சாப்பிடலாம்.

மேலும் படிக்க: கார்த்திகை பொரி செய்வது எப்படி?

கார்த்திகை விரதம் பலன்கள்: Karthigai Viratham Palangal in Tamil

  • கார்த்திகை அன்று விரதம் எடுப்பது மிகவும் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. 12 ஆண்டுகள் தொடர்ந்து கார்த்திகை விரதம் எடுப்பவர்களுக்கு முருகப்பெருமானின் முழு ஆசீர்வாதமும் கிடைக்கப்பெறுவார்கள் என்பது ஐதீகம்.
  • கார்த்திகை அன்று விரதம் எடுப்பவர்கள் ஏழை எளியவர்களுக்கு அன்று ஒருநாள் மட்டும் உணவு வாங்கி கொடுத்தால் முன்ஜென்ம பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கப்பெறுவார்கள்

கார்த்திகை தீபம் எந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்: Karthikai Antru Entha Ennaiyil Vilakketra Vendum

தீபம் ஏற்றும் போது நாம் பயன்படுத்தும் எண்ணெய்யை (Karthigai Deepam Oil) பொருத்து பலன்களை பெறலாம்.

  • நல்லெண்ணை அதாவது எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நம்மை பிடித்துள்ள எல்லாப் பீடைகளும் மறைந்து போதும்.
  • நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நம் இல்லத்தில் சகல சந்தோஷங்களும் கிடைக்கும்.
  • வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
  • விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றினால் புகழ் கிடைக்கும்.
  • சமையலுக்கு பயன்படுத்தும் கடலை எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய் போன்றவற்றை தீபம் ஏற்ற பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இந்த எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற பாவங்கள் வந்து சேரும்.

கார்த்திகை அன்று விளக்கேற்றும் முறைகள்

கார்த்திகை தீபம் அன்று (Karthigai Deepam Andru Vilakku Etrum Muraigal) என்பது முக்கியமான ஒன்று. காரணம் விளக்கேற்றுவதற்கு சில விதிக்கள் உள்ளன.

  • கார்த்திகை-க்கு முதல் நாள் வீடு மற்றும் பூஜை அறைகளை சுத்தம் செய்ய வேண்டும். மாறாக, திருக்கார்த்திகை அன்று சுத்தம் செய்யக் கூடாது.
  • நம்மிடம் விளக்கேற்ற நிறைய அகல் விளக்குகள் இருந்தாலும். புதிய அகல் விளக்குகள் வாங்கி விளக்கேற்றுவது சிறந்தது.
  • கார்த்திகை அன்று நட்சத்திரங்கள் அடிப்படையில் 27 விளக்குகள் ஏற்றவேண்டும். சிலர் கார்த்திகை தொடர்ந்து மூன்று நாட்கள் விளக்குகள் ஏற்றுவார்கள். மூன்று நாட்கள் 27 விளக்குகள் ஏற்றாவிட்டாலும் வாசலில் 5 விளக்குகள், பூஜை அறையில் 5 விளக்குகள் என்ற கணக்கில் ஏற்றலாம்.
  • karthigai vilakku ஏற்றும் போது வாசலில் ஏற்றிவிட்டு பிறகு பூஜை அறையில் ஏற்ற வேண்டும். பூஜை அறையில் ஏற்றிய விளக்கு மூலம் வெளியில் ஏற்றக் கூடாது.
  • Karthigai Vilakku Etrum Neram திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதை வைத்து வீடுகளில் தீபம் ஏற்றுவார்கள். திருவண்ணாமலையில் மாலையில் 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும். அதன்பிறகு மாலை 6.05 க்கு பிறகு விளக்கேற்றலாம்.
  • வீடுகளின் வாசல், கூடம், வராண்டா, படுக்கையறை, மாடிப்படி போன்ற இடங்களில் விளக்குகளை ஏற்றலாம்.
  • வாசலில் விளக்கு அதிகபட்சமாக 30 நிமிடங்கள் எரிந்தால் போதுமானது. அதன் பிறகு மற்ற இடங்களில் உள்ள விளக்குகள் எரிகின்ற வரை இருந்தால் போதும். அடிக்கடி எண்ணெய் ஊற்ற வேண்டியதில்லை.
மேலும் படிக்க: விளக்கு ஏற்றும் முறைகள்..!

கார்த்திகை தீபம் பற்றிய – FAQ

1. கார்த்திகை தீபத் திருநாள் என்றால் என்ன?

கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
இது கார்த்திகை பிரம்மோத்ஸவம் என்று அறியப்படுகிறது.

2. 2023-ல் கார்த்திகை தீபம் எப்போது?

நடப்பாண்டில் கார்த்திகை தீபம் (Thiru Karthigai date 2023) வரும் நவம்பர் 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.

3. கார்த்திகை அன்று வீட்டில் எவ்வாறு விளக்கேற்ற வேண்டும்?

கார்த்திகை திருநாளான்று நவகிரகங்கள் 9, ராசிபலன்கள் 12, நட்சத்திரங்கள் 27 என்ற கணக்கில் விளக்கேற்ற வேண்டும்.

4. கார்த்திகை தீபம் அன்று எந்த கோயில் சென்று வழிபடலாம்?

கார்த்திகை மாதம் பொதுவாக சிவபெருமான், முருகனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அன்று சிவ ஆலயம் சென்று வழிபடலாம்.

5. கார்த்திகை தீபம் எந்தெந்த மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது?

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.

6.கார்த்திகை அன்று எந்த திசையை நோக்கி விளக்கேற்ற வேண்டும்?

கார்த்திகை அன்று கிழக்கு திசையை நோக்கி விளக்கேற்ற வேண்டும்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular