Homeஆன்மிகம்Karungali Maram: கருங்காலி மரத்தின் அற்புதங்கள்..!

Karungali Maram: கருங்காலி மரத்தின் அற்புதங்கள்..!

Karungali Maram: கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த கருங்காலி மாலை பற்றி வைரல் ஆகி கொண்டு வருகிறது. உண்ணமையில் கருங்காலி மாலை கருங்காலி மரத்தில் இருந்து தான் செய்யப்படுகிறதா என்றும் கருங்காலி மரத்தின் சிறப்புகளையும் பார்ப்போம். தற்போது பிரபலங்கள் ஏதாவது புதிதாக செய்யதால் அது ட்ரெண்டிங் ஆகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் சினிமா பிரபலங்கள் ஒரு சிலர் கழுத்தில் போட்டுக் கொண்ட கருங்காலி மாலை பற்றிதான் சில கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில் அவர்கள் அணிந்திருப்பது கருங்காலி மாலையா (karungali malai) அதனை அணிந்துக்கொண்டால், நேர்மறையான எண்ணங்கள் தோன்றுமா, கெட்டது விலகிடும், கடவுள் அருள் கிடைக்கும் போன்ற கருத்துக்களும் கூறப்பட்டு வருகின்றன.

நாம் பல வகையான மரங்களை பார்த்திருப்போம், அவற்றை பற்றி கேள்விபட்டிருப்போம். ஏன் வீடுகளில் கூட மரங்கள் வளர்ப்போம். ஆனால் அரசிடம் அனுமதி பெற்று சில மரங்களை வளர்க்க முடியும் வெட்ட முடியும். வேப்ப மரம், ஆலமரம், தேக்கு மரம், பாக்கு மரம், தென்னை மரம் போன்ற மரங்களை நாம் காலங்காலமாக பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய மரங்களில் ஒன்று தான் இந்த கருங்காலி மரம்.

இந்நிலையில் ஒருசிலர் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகள், மாலைகள், பலகை, பலவிதமான பொருட்கள் என அனைத்தும் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் இந்த மரம் அதிர்ஷ்டமான மரமா என்று இந்த பதிவில் (Karungali Maram in Tamil) பார்க்கலாம்.

கருங்காலி மரம் – Karungali Tree

மரங்களில் வைரம் பாய்ந்தது பொதுவாக பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். அனால் இந்த மரத்தில் வைரம் பாய்ந்தால அது கருப்பு நிறத்தில் மாறிவிடும். எனே தான் இதனை “கருங்காலி மரம்” என அழைக்கிறார்கள். இந்த மரங்கள் முட்கள் நிறைந்தவையாக காணப்படுகிறது. இந்த வகை மரங்கள் அதிகமாக வெப்பம் மிகுந்த நாடான ஆப்பிரிக்க காடுகளில் தான் அதிகமாக இருக்கும். இந்த மரம் வறட்சியை தாங்கி வளரக் கூடிய மரங்களில் ஒன்று. ஆனால் இதனுடைய பூர்வீகம் தென்னிந்தியா மற்றும் இலங்கை என்று கூறப்படுகிறது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வடமத்திய மாகணத்திலும் தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கருங்காலி மரங்கள் காணப்படுகின்றன. இந்த வகை மரங்கள் மிகவும் அரிதான மற்றும் அழிந்து வரும் மரங்களில் ஒன்றாக உள்ளது.

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கருங்காலி மரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட உலக்கை கொண்டு தான் நெல் குத்தி அந்த அரிசியை தான் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்கள். காரணம் அவ்வளவு மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது அந்த கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட உலக்கை.

கருங்காலி மரத்தின் அமைப்பு – Karungali Maram

Karungali Maram

இந்த மரத்தின் நடுப்பகுதி கடினமாகவும், அடர்த்தியாகவும், அடிப்பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த மரத்தின் இலைகள் சிறிய சிறிய கூட்டுலைகளாக இருக்கும். ஒரு சில மரங்கள் அதன் வயதிற்கேற்ப பழுப்பு நிறத்தில் மற்றும் அடர்பழுப்பு நிறத்தில் இருக்கும்.

நல்ல வயதான வைரம் பாய்ந்த மரம் மட்டும் தான் கருப்பு நிறத்தில் இருக்கும். கருங்காலி மரத்தின் பட்டைகள் வரை நல்ல கருப்பு நிறத்தில் இருக்கும்.

மருத்துவக்குணங்கள் – karungali tree benefits in Tamil

இந்த மரம் (karungali marathin payangal) மிக பழமையான மற்றும் தடிமனான, அடர்த்தியான மரமாக பார்க்கப்படுகிறது. இந்த மரத்தில் செய்யப்படும் பொருட்கள் நல்ல கடினமாக இருக்கும். சித்தமருத்துவத்தில் துவர்ப்பு தன்மைக்காக கருங்காலி பட்டைகளை பயன்படுத்துவார்கள். இந்த மரம் நாவல் மரம் போன்ற துவர்ப்பு தன்மை கொண்ட மரமாக உள்ளது. இந்த மரம் இருக்கும் இடத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரம் வரை அதன் ஆற்றல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மரம் அதிகமான நேர்மறை மற்றும் அதே அளவு எதிர்மறை ஆற்றலை கொண்ட மரம் என்பதால் இந்த மரத்தை வீட்டில் வளர்க்க முடியாது.

ஒருவரின் எண்ண ஓட்டத்திற்கேற்ப இந்த மரத்தின் ஆற்றல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கருங்காலி மரத்தின் பட்டையை பொடியாக்கி, அதனை பல்பொடி செய்வார்கள், இந்நத மரத்தின் பொடியை தூளாக்கி வெந்நீரில் போட்டு அதனை கஷாயமாக குடிப்பார்கள். இந்த பட்டையின் பொடி நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

கருங்காலி மரத்தின் வேர் உடல்வலி, நீரிழிவு, குடல் புழு போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் பட்டைகளை வெந்நீரில் போட்டு குளித்து வந்தால் உடல் வலி சரியாகிவிடும் என்று கூறுவார்கள். இந்த மரத்தின் பிசின் போன்றவைகளும் கூட மருத்துவ குணம் கொண்டது.

ஜோதிட ரீதியாக கருங்காலி மரம்

Karungali Maram

இந்த மரம் பிரபஞ்ச ஆற்றலை பெறக் கூடிய மரமாக பார்க்கப்படுகிறது. இந்த கருங்காலி மரத்தை அன்மீகம் சார்ந்து பார்க்கப்படுவதால் இந்த மரத்தை அனைவரும் வணங்கி வருகிறார்கள். முக்கியமாக இந்த மரம் கடினமாக இருப்பதால் இந்த மரத்தில் தான் கடவுள் சிலைகள் செய்யப்படுகிறது. காரணம் இந்த மரம் சற்று கடினமாக இருப்பதால் தான்.

ஜோதிட ரீதியாக ஜாதகத்தில் ஒருவருக்கு செவ்வாயினுடைய ஆதிக்கம் உடையவர்கள் இந்த கருங்காலியால் செய்யப்பட்ட பொருட்களை அணிந்துக்கொண்டாலோ அல்லது பயன்படுத்தினாலோ அவர்களுக்க செவ்வாயின் பாதிப்பு குறையும் என்று கூறப்படுகிறது. இந்த மரம் முருகன் கடவுளுக்கு உகந்ததாக பார்க்கப்படுகிறது. இதனால் விருச்சிகம், மேஷம், மிதுன ராசிகாரர்கள் இதனை அணிந்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இருந்த போதும் ஒவ்வொருடைய ஜாதகத்தின் அமைப்பு வேறு என்பதால் அவர்கள் ஜோதிடர்ளின் கருத்துக்களை பெற்றப்பிறகு இந்த அணிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: கருங்காலி மாலை பற்றி ஆச்சிரியமூட்டும் தகவல்கள்..!

Karungali Tree – FAQ

1. கருங்காலி மாலை யார் யார் அணியலாம்?

கருங்காலி மாலை ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் அணியலாம்

2. கருங்காலி மாலை ஒரிஜினல் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? How to find karungali malai is original?

உண்மையான கருங்காலி மாலை அடர்த்தியான மற்றும் அதிக எடையுடன் அடர் கருப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். அதன் மேற்பரப்பு விரிசல் மற்றும் கீறல்கள் இல்லாத தனித்துவமானவடிவத்துடன் மென்மையாக மெருகூட்டப்பட்டிருக்கும்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular