Homeசெய்திகள்விண்வெளியில் இருந்து ஒரு வரலாற்றுக் காட்சி..! பசுமையாக மாறிய பாலைவனம்..!

விண்வெளியில் இருந்து ஒரு வரலாற்றுக் காட்சி..! பசுமையாக மாறிய பாலைவனம்..!

இயற்கையை யாரால் தான் கணிக்க முடியும்? தற்போது மாறிவரும் பருவக்காலங்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என நாம் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் சவூதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் மக்கா மற்றும் மதீனா (Makka Madina) ஆகிய இரண்டிற்கும் இடையே பரந்த பாலைவனமாக நிலப்பரப்பில் பச்சை பசேலன மாறி காண்போரை பிரமிக்க வைத்துள்ளது என்றே கூறலாம்.

இந்த மாற்றம் குறிப்பாக சவூதி அரேபியாவின் மேற்கு நாடுகளில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. மேற்கு நாடுகளில், (makka madina recent desert images) அதிகப்படியான நீர் காரணமாக இது வறண்ட மண்ணுக்கு உணவளித்து புல் மற்றும் தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது என்று அந்நாட்டு மக்கள் ஒருசிலர் கூறி வருக்கின்றனர்.

சவூதியில் பெய்த கனமழை இந்த பாலைவனப்பகுதிகளுக்கு வாழ்வளித்து பார்ப்பதற்கே ரமியமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த பாலைவனம் ஒரு காலத்தில் பார்ப்பதற்கு வறண்டு போய் காட்சியளித்தன. ஆனால் தற்போது இந்த பாலைவனம் பார்ப்பதற்கு பிரமிப்பாக உள்ளது என அனைவரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Makka Madina

இந்த பாலைவன அழகான காட்சிகளை நாசாவின் (makka madina after rain recent desert images) செயற்கைக்கோள்கள் படம் பிடிக்கப்பட்டதாகவும், மழைக்குப் பிறகு எடுக்கப்பட்ட இந்த படங்களை நாசா பகிர்ந்துள்ளது. இந்த பாலைவனத்தில் புதிதாக வளர்ந்த புற்களை ஒட்டகங்கள் உண்பது போல காட்சி உள்ளது. மேலும் பாலைவனத்தில் இது போன்ற காட்சிகள் காணக்கிடைக்காத ஒன்றாக உள்ளது என்றும், பாலைவனத்திற்கு மழை வாழ்வழித்தது என்று ஒரு சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த பதிவை பலர் பகிர்ந்தும், கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

மேலும் படிக்க: ஆமா இந்த ரோடு எங்க போய் முடியும்..? சாலை பற்றிய ஆச்சரியமான தகவல்…
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular