Homeசெய்திகள்மர்மங்கள் நிறைந்த ஆவிகள் இருக்கும் மலை… நள்ளிரவில் நடைபெறும் சிறப்பு பூஜைகள்…

மர்மங்கள் நிறைந்த ஆவிகள் இருக்கும் மலை… நள்ளிரவில் நடைபெறும் சிறப்பு பூஜைகள்…

இந்த உலகில் பல அழகான அதிசியங்கள் நிறைந்துள்ளன. அதேபோல் பல பயங்கரமான மர்மங்களும் நிறைந்துள்ளன. அந்த வகையில் கயாவில் உள்ள மர்மமான மலையை (Ghost Mountain in Gaya) பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளாேம். இங்குள்ள ஒரு மலையில் சுவாரசியமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ராம்சிலா மலையில் இருந்து சுமார் 10 கிரோ மீட்டர் தூரம் சென்றால் அங்கு ப்ரீட்ஷிலா மலை இருக்கும். இந்த இடத்தில் நம் முன்னோர்களுக்கு முக்தி மற்றும் மோட்சம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. எனவே இந்த இடத்தை மோக்ஷதம் எனவும் கூறுவர்.

இந்த மலைக்கு கீழ் பிரம்ம குண்டம் உள்ளது. விபத்துக்களில் சிக்கி அகால மரணம் அடைந்தவர்கள் ஆவிகள் இந்த பூமியில் இருக்கும் என நம்பப்படுகிறது. அதுபோன்று முக்தி அடையாமல் இந்த பூமியில் இருக்கும் ஆவிகளை முக்தி அடைய செய்வதற்காக இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அவ்வாறு பூஜைகள் நடைபெறும் போது இந்த மலையை சுற்றிலும் வாழும் ஆவிகள் முக்தி அடையும் என நம்பப்படுகிறது.

கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற இந்த ஊரின் அரசி அஹில்யா பாய் 1787 ஆம் ஆண்டு இந்த மலையின் (Gaya Hill) உச்சியில் இறப்பின் கடவுளான யமனின் கோவிலை கட்டினார். ஒரு காலத்தில் வேட்டையாடிய ஒரு உயிரின் ஆவியை அமைதிப்படுத்த இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக தான் இந்த கோவில் முக்தி பெறுவதற்கான பூஜைகள் செய்யப்படுகின்றன.

Gaya Ghost Mountain

இந்த மலைக்கு பூத ஷீலா மற்றும் பேய் மலை (Ghost Mountain) என்று கூட இந்த மலைக்கு மக்கள் மத்தில் பெயர் உண்டு. இறந்தவர்களுக்காக மலையில் பூஜைகள் செய்யப்படுவதனால் இந்த மலையில் இன்றும் பேய்கள் வாழ்வதாகவும், அதன் பேய்கள் நள்ளிரவுக்கு பிறகு இங்கு வருவதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக நள்ளிரவு நேரத்தில் இங்கு சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறுகிறது.

மேலும் படிக்க: Thummal Sagunam: தும்மல் நல்ல சகுனமா.. இல்லை கெட்ட சகுனமா..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular