Homeசெய்திகள்ரம்ஜான் எதிரொலி..! Swiggy நிறுவனத்தில் விற்கப்பட்ட பிரியாணிகளின் எண்ணிக்கை..! இத்தனை லட்சமா?

ரம்ஜான் எதிரொலி..! Swiggy நிறுவனத்தில் விற்கப்பட்ட பிரியாணிகளின் எண்ணிக்கை..! இத்தனை லட்சமா?

இந்தியாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதாவது கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்யும் வாங்கும் வழக்கம் அதிகமாக பிரபலமானது. ஆனால் தற்போது ஊரடங்கு முடிந்து வருடங்கள் கடந்தாலும் இந்த ஆன்லைன் மூலம் உணவு பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவது அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.

இதுப்போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிகமாக இருந்தாலும் அவற்றில் மிகவும் பிரபலமான நிறுவனம் என்றால் அது Swiggy தான். அதிக அளவிலான மக்கள் உணவுகளை ஆர்டர் செய்து பெறுவது இந்த ஆப் மூலம் தான். இந்த நிலையில் தான் தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவலை Swiggy நிறுவனம் (Swiggy Ramzan Month Biryani sales) வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் இந்த ரம்ஜான் மாதத்தில் இந்திய மக்கள் எந்த உணவை அதிகமாக விரும்பி உண்டனர் என்பது குறித்த தகவல்களை SWIGGY நிறுவனம் (Swiggy Ramadan Month Biryani Sales) தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு உள்ளது.

அதாவது இந்த ரம்ஜான் மாதத்தில் மட்டும் ஏறத்தாழ 60 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது எண்ணிக்கை வழக்கமான மாதங்களை ஒப்பிடும்போது 15 சதவிகிதம் அதிகம் அகும். ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த தகவல் (Swiggy Ramadan Biryani Sales) மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

Swiggy Ramadan Biryani Sales
இதையும் படியுங்கள்: Ramadan wishes in Tamil 2024: ரம்ஜான் வாழ்த்துக்கள் 2024..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular