Homeசெய்திகள்1300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்..! எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா?

1300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்..! எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா?

தமிழர்களின் கட்டிடக்கலை எப்போதும் சிறப்பாக தான் இருந்து வருகிறது. பழங்காலங்களில் கட்டப்பட்ட கோவில்களை இந்த நவீன காலகட்டத்தில் உள்ள தொழில்நுட்பங்களைக் கொண்டு கூட அவ்வளவு எளிதாக கட்டிவிட முடியாது. அந்த அளவிற்கு பல விதமான தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி அந்த காலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக பல கோவில்களை கூறலாம். பழங்காலத்தில் பல தெய்வங்களுக்கான கோவில்கள் கட்டப்பட்டு இருந்தாலும் அந்த காலம் முதலே கடவுள் சிவன் மீது உள்ள பக்தி சற்று அதிகமாக தான் உள்ளது. இது பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள சிவன் கோயில்களில் மூலம் நன்றாக தெரிகிறது. இதுப்போன்ற ஒருக் கோயிலை தான் இப்பதிவில் நாம் பார்க்கவுள்ளோம்.

இந்த கோயில் சுமார் 1300 வருடம் பழமையான கோயிலாக (Old Sivan Temple) உள்ளது. இதுக்குறித்து இப்போது பார்க்கலாம். இந்த கோயில் மிகவும் பழமையான சிவன் கோவில்களில் (Palaya Sivan Kovil In Pudukkottai) ஒன்றாக உள்ளது. மேலும் இந்த கோவிலை மலையால் எழுப்பட்ட முதல் சிவன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோவில் (Old Sivan Temple In Pudukkottai) தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த கோயிலானது புதுக்கோட்டை சோழீஸ்வரர் கோயில் (Pudukkottai Choleswarar Temple) என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் முதலில் சாத்தன்பூதி முத்தரையர் நிர்மாணிக்கப்பட்டு அதன் பின்னர் விஜயாலய சோழர்களின் மேம்படுத்தப்பட்ட கோயில் ஆகும்.

Pudukkottai Choleswarar Temple

இந்த கோவிலில் (Pudukkottai Old Sivan Temple) வழிபாடு செய்வதன் மூலம் பஞ்சபூத தலங்களை வழிபாடு செய்வதன் பலனை பெறமுடியும் என்ற ஐதீகமும் உள்ளது. மேலும் பக்தர்கள் விரதம் இருந்து இந்த கோயிலுக்கு (Palaya Sivan Kovil) வந்து இங்கு எழுந்தருளியுள்ள தில்லைநாயகி வணங்கி அவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வணங்கினால் மன சலனங்கள் நீங்கும் என்று இன்று வரை மக்களால் நம்பப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: சபரிமலை பங்குனி மாத பூஜை..! ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular