Homeதொழில்நுட்பம்OnePlus 12 Series: விலை இவ்ளோதானா..! அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் அறிமுகம்..!

OnePlus 12 Series: விலை இவ்ளோதானா..! அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் அறிமுகம்..!

OnePlus 12 Series போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த் தகவலை இப்பதிவில் பார்க்கவுள்ளோம். அதற்கு முன் இதுக்குறித்த சிறிய முன்னுரையை பார்க்கலாம். இந்த காலத்தில் அனைவராலும் அதிக அளவில் விரும்படுவது செல்போன்கள் தான். போன்கள் மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இக்காலத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் போன் உள்ளது. எனவே போன் தயாரிக்கும் நிறுவனங்களும் அதிகரித்துவிட்டது. மேலும் பல வகையான போன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தியும் வருகிறது.

போன் தயாரிக்கும் டெக் நிறுவனங்கள் பல உள்ளன. இந்த நிறுவனங்களில் பிரபலமான போன் தயாரிப்பு நிறுவனமாக இருப்பது தான் ஒன் பிளஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் பலரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஒன் பிளஸ் 12 சீரியஸ் (OnePlus 12 series) ஸ்மார்ட்போன்கள் 23.01.2024 முதல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

இந்த மாடல் போன் Smooth Beyond Belief என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய மாடலான OnePlus 12 மற்றும் OnePlus 12R ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

OnePlus 12 மாடலில் உள்ள சிறப்பம்சங்கள்

OnePlus 12 டிஸ்பிளே (OnePlus 12 Display)

இந்த புதிய மாடல் OnePlus 12 மாடல் போனில் 2K 120 Hz ProXDR உடன் LTPO டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவானது 4500 nits பீக் பிரைட்னஸ் அளிக்கவல்லது.

அதுமட்டுமின்றி HDR10+, HDR vivid, Dolby Vision, மற்றும் DisplayMate A+ போன்ற இன்னும் சில சிறப்பு அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் Aqua Touch எனும் சிறப்பு அம்சத்தை கூடுதலாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது டிஸ்பிளே-வில் அளித்துள்ளது.

இந்த Aqua Touch ஸ்க்ரீன் மூலம் மழை நேரங்களில் அல்லது ஸ்க்ரீனில் நீர் பட்டிருந்தாலோ அல்லது உங்கள் கைகளில் ஈரம் பட்டிருந்தல் கூட சுலபமாக படுத்தலாம்.

OnePlus 12 கேமரா (OnePlus 12 Camera)

இந்த மாடல் மொபைல்களுக்கு 4th Gen Hasselblad கேமரா சிஸ்டமை ஒன்பிளஸ் நிறுவனம் பொருத்தியுள்ளது. மேலும் சோனியின் புதிய LYT-808 சென்சார் கொண்ட 50 மெகா பிக்சல் மெயின் கேமரா, 48 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு கேமரா, 64 மெகா பிக்சல் 3X Periscope Telephoto கேமராக்களை இந்த மாடல் போன்கள் கொண்டுள்ளது. இந்த சிறப்பம்சங்கள் காரணமாக இந்த மாடல் போன்களில் எடுக்கம் புகைப்படங்கள் தெளிவாக இருக்கும்.

OnePlus 12 பேட்டரி (OnePlus 12 Battery)

ஒன்பிளஸ் 12 மொபைலில் 5,400 mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகவும் விரைவாக சார்ஜ் செய்யலாம். எந்த அளவுக்கு என்றால் வெறும் 24 நிமிடங்களில் 100% சார்ஜிங் செய்யலாம். இதற்காக 100W Charging on Smart Rapid சார்ஜ் மோட் அளிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த சிறப்பம்சம் மூலமாக ஒயர்லஸ் சார்ஜிங் செய்யலாம். ஒயர்லஸ் சார்ஜிங் முறையில் வெறும் 55 நிமிடங்களில் முழு சார்ஜிங் செய்ய முடியும். மேலும் 4 ஆண்டுகளுக்கு தினமும் முழு சார்ஜிங் செய்தலும் பேட்டரி ஹெல்த் 80% வரை நீடித்திருக்கும் என்று ஒன்பிளஸ் அறிமுக நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Oneplus 12 Launch Date in India: 23.01.2024

Oneplus 12 Price: ரூ.64,999 முதல்

OnePlus 12 Series
இதையும் படியுங்கள்: Poco C65: 8,400 ரூபாயில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்…

Features of OnePlus 12

டிஸ்பிளே6.82 இன்ச் 2K OLED LTPO
ரியர் கேமரா யூனிட்50MP Sony LYT808 OIS+ 48MP IMX581+ 64MP omnivision OV64B OIS Periscope zoom lens
செல்பி கேமரா32MP Sony IMX615 சென்சார்
பேட்டரி5400mAh
சார்ஜிங்100W ஒயர்டு சார்ஜிங், 10W ரிவர்ஸ் ஒயர்லஸ், 50W ஒயர்லஸ்
ஸ்டோரேஜ் 12+256 GB, 16+512 GB
RAMLPDDR5x RAM
OSAndroid 14
விலைரூ.64,999 முதல்

இப்பதிவில் நாம் OnePlus நிறுவனம் தற்போது புதிய மாடல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த தகவலை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: Honor X9b: இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய மாடல் Honor போன்..!

FAQ – OnePlus 12 Series

1. OnePlus 12 Series – ன் விலை?

OnePlus 12 Series விலை ரூ.64,999 முதல் தொடங்குகிறது.

2. OnePlus 12 Series-ல் கொடுக்கப்பட்டுள்ள பேட்டரி?

OnePlus 12 Series-ல் 5400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

3. OnePlus 12 Series-ல் எந்த வகையான OS பயன்படுத்தப்பட்டுள்ளது ?

Android 14

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular