Homeஆன்மிகம்Ramayanam Story in Tamil: அயோத்தியை ஆண்ட ராமர் பிறப்பு முதல் இராவணன் வதம் வரை..!

Ramayanam Story in Tamil: அயோத்தியை ஆண்ட ராமர் பிறப்பு முதல் இராவணன் வதம் வரை..!

இந்து கடவுள்களில் ஒருவரான பெருமாளின் பத்து அவதாரங்களில் ஒன்று தான் ஸ்ரீ ராம அவதாரம். ராம அவதாரம் பற்றி (Ramayanam Full Story) பல இதிகாசங்கள், புராணக்கதைகள் போன்றவை தமிழ் மொழியில் உள்ளன. தமிழ் மொழியில் உள்ள புகழ்பெற்ற நூல்களில் கம்பர் எழுதிய கம்பராமாயணம் (Ramar Story in Tamil) ஒன்று ஆகும்.

வடமொழியில் வால்மீகி எழுதிய ராம காவியத்தை தழுவி கம்பர் தமிழில் எழுதினார். இதுவே கம்பராமாயணம் எனப்படுகிறது. இந்த கம்பராமாயணத்தில் ராமர் பிறப்பு முதல் இராவண வதம் வரை 6 காண்டங்கள் உள்ளன. ராமாயணத்தின் முக்கிய கதை அம்சமானது அதர்மத்தை தவறி தீய வழி செய்பவர் அரசனாகவே இருந்தாலும் தண்டிக்கப்படுவார் என்பதாகும்.

அதர்மங்கள் செய்யும் இராவணனை வீழ்த்துவதற்காக பெருமாள் அவதாரம் ஆன ராமர் பிறந்தார் என கூறப்படுகிறது. இந்த பதிவில் ஸ்ரீராமர் பிறப்பு முதல் இராவண வதம் வரை கூறும் ராம காவியம் (Ramar Story in Tamil) பற்றி பதிவிட்டுள்ளேம். ராமனின் பெருமையை கூற பல கதைகள், காவியங்கள் மட்டுமின்றி தற்போது அயோத்தியில் இராமர் கோவில் கூட கட்டப்பட்டு வருகிறது. இராமர் காவியம் பற்றி தற்போது விரிவாக காண்போம்.

கம்பராமாயணம் (Ramayanam Full Story)

வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை கம்பர் மொழிபெயர்த்து தமிழில் எழுதினார். இதனால் கம்பராமாயணம் (Kamba Ramayanam) ஒரு வழிநூல் ஆகும். இது ராம காவியம் (Ramavataram) எனவும் அழைக்கப்படுகிறது. இருப்பினும் கம்பர் இந்த காவியத்தில் வடமொழி சொற்களை நீக்கி தமிழ் மொழியில் தனக்கே உரித்தான பாணியில் கம்பராமாயணத்தை இயற்றியுள்ளார். கம்பராமாயணத்தில் 6 காண்டங்கள் (Kamba Ramayanam Padal), 123 படலங்கள் மற்றும் 10,569 பாடல்கள் உள்ளன.

Ramavataram

இந்த ஆறு காண்டங்களில் முதல் காண்டம் ராமர் பிறப்பு, இரண்டாவது காண்டம் ராமர் மற்றும் சீதை திருமணம், மூன்றாவது காண்டம் ராமர் வனவாசம் செல்லுதல், நான்காவது காண்டம் சீதையை ராவணன் கவர்ந்து செல்லுதல் மற்றும் ராமன் கிஷ்கிந்தை செல்லுதல், ஐந்தாவது காண்டம் அனுமனின் திறன்கள் பற்றியது மற்றும் ஆறாவது காண்டம் ராவண வதம் பற்றியும் கூறுகின்றது. இந்த பதிவில் Ramayanam Tamil -ல் பார்க்கலாம்.

1. பால காண்டம் (Bala Ramayanam In Tamil)

கம்பராமாயணத்தில் முதல் காண்டத்தில் ஸ்ரீ ராமனின் பிறப்பு பற்றியும் அவரின் இளம் வயது பற்றியும் கூறுகிறது. அரசர் தசரதருக்கும் அரசி கோசலைக்கும் மகனாக பெருமாளின் அவதாரமான ஸ்ரீராமர் அயோதியில் பிறந்தார். தசரதருக்கும கைகேயி மற்றும் சுமித்திரை ஆகியோருக்கு பரதன், இலக்குவன், சத்துருக்கனன் ஆகியோர் மகன்களாக பிறந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசர் தசரதரின் அரவனைப்பில் அரண்மனையில் வழர்கின்றனர்.

பிரம்மரிஷி வசிஷ்டர் வழிகாட்டுதலின் கீழ் ஸ்ரீ ராமர் சகோதரர்களுடன் ஆரம்பக் கல்வியை ஆசிரமத்திலும் குருகுலத்திலும் முடித்தார். இவரே ராமரின் முதல் குரு ஆவார். இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர் தன்னுடைய யாகத்திற்குக் காவலாக அழைத்துச் செல்கின்றார். அங்கு விசுவாமித்திரர் ஸ்ரீ ராமருக்கு அசுரர்களை வதம் செய்வதற்கான தெய்வீக ஆயுதங்களை வழங்குகிறார். அதன் பிறகு விசுவாமித்திரரின் யாகத்தினை அழிக்க வந்த தாடகை எனும் அரக்கியை இராமன் கொல்கிறார். எனவே விசுவாமித்திரர் ராமரின் இரண்டாவது குரு.

அதன் பிறகு ராமனும் இலக்குவனனும் விசுவாமித்திரருடன் மிதிலைக்கு செல்கின்றனர். மிதிலை போகும் வழியில் பெருமாலின் அவதாரமான இராமனின் கால்தூசு பட்டு கல்லாக இருந்த அகலிகை உயிர்பெறுகிறாள். ஸ்ரீ ராமரால் சாபவிமோச்சனம் பெற்ற அகலிகையை அவருடைய கனவரான கௌதம முனிவருடன் சேர்த்துவிட்டு மூவரும் மிதிலைக்குச் செல்கின்றனர்.

2. அயோத்திய காண்டம்

கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டம் தான் இரண்டாவது காண்டம் ஆகும். இந்த காண்டத்தில் (Ram Setu Story) மிதிலையில் சீதைக்கு சுயம்வரம் நடக்கின்றது. இந்த சுயம்வரத்தில் ஸ்ரீ ராமர் சிவதனுசை நாண் ஏற்றி உடைத்தார் என்கிறது ராமாயணம். இதன் பிறகு ஸ்ரீ ராமருக்கும் சீதா தேவிக்கும் திருமணம் நடைபெறுகிறது. அதேபோல் ராமனின் சகோதரர்கள் பரதன், இலக்குவன், சத்துருக்கனன் ஆகியோருக்கும் சீதையின் சகோதரிகள் மாண்டவி, ஊர்மிளை, சுதகீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடைபெறுகிறது.

Ramayanam Full Story in Tamil

திருமணம் முடிந்தவுடன் அனைவரும் அயோத்தி வருகின்றனர். அரசர் தசரதர் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய விரும்புகிறார். இதனை தெரிந்து கொண்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் மந்தரை எனும் கூனி பரதனின் தாயான கைகேயிடம் சென்று அவளுடைய மனதினை மாற்றுகிறாள். எனவே கைகேயி அரசர் தசரதரிடம் ராம் 14 வருடங்கள் வனவாசம் செல்ல வேண்டும் என்றும் பரதன் நாடாள வேண்டும் என்றும் இரண்டு வரம் கேட்கிறாள்.

தசரதர் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக ராமர் வனவாசத்திற்கு செல்ல செல்கிறார். ராமன் அவருடைய மனைவி சீதை மற்றும் இலக்குவன் ஆகிய மூவரும் 14 வருடங்கள் வணவாசம் செல்கின்றனர். ராமனை பிரிந்த துயரில் தசரதர் மரணம் அடைகிறார். அரசருக்கு இறுதி சடங்குகளை செய்துவிட்டு பரதன் ராமனை சந்திக்க செல்கிறான்.

3. ஆரண்ய காண்டம்

வனத்தில் பல முனிவர்களையும், ராமர் மீது பற்று வைத்துள்ள குகனையும் சந்திக்கின்றனர். ராமன், சீதை மற்றும் இலக்குவன் மூவரும் குகனின் படகு மூலம் ஆற்றைக் கடக்கின்றனர். குகன் ராமன் மீது வைத்துள்ள அன்பை கண்டு ராமர் குகனை தன் சகோதரனாக ஏற்று கொள்கிறார். பரதன் ராமரை சந்தித்து மீண்டும் நாடு திரும்பி அரசால வேண்டும் என வேண்டுகிறான். ஆனால் ராமர் தந்தையின் வாக்கை காப்பாற்ற வனம் செல்கிறார். ராமனின் பாதுகைகளை வைத்து ராமர் அயோத்தி வரும் வரை அரசால்வேன் என்று பரதன் கூறி ராமரின் பாதாகைகளை தலையில் சுமந்து நாடு திரும்புகிறான்.

Kamba Ramayanam

ஸ்ரீ இராமர் காட்டில் அகத்தியர், விராதன், சரபங்கன், சடாயு ஆகியோர்களைச் சந்திக்கிறார். அவர்களின் மூலமாக அரக்கர்களைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும் தெரிந்து கொள்கிறார்.

ஒரு நாள் ராமன் கண்ட இராவணனின் தங்கை சூர்ப்பனகை ராமர் மீது விருப்பம் கொள்கிறார். ஆனால் ராமன் ஏகபத்தினி விரதன் என்பதால் சூர்ப்பனகையின் விருப்பத்தை மறுக்கிறான். இலக்குவன் சூர்ப்பனகையின் மூக்கை அருக்கிறான். இதனால் ராமன் மீதும் சீதையின் மீதும் சூர்ப்பனகை மீதும் கோவம் கொள்கிறாலள்.

சூர்ப்பனகை அவளின் அண்ணனான இராவணனிடம் சென்று இராமனின் மனைவி சீதையைப் பற்றியும் அவளுடைய அழகினை பற்றியும் கூறுகிறாள். இதனால் இராவணன் சீதையின் மீது மோகம் கொள்கிறான். இலங்கையின் அரசனான ராவணன் மாய தங்கமான அனுப்பி ராமன் மற்றும் இலக்குவனனை சீதையிடம் இருந்து பிரித்து, சீதையை கவர்ந்து செல்கிறான்.

4. கிட்கிந்தா காண்டம்

இராவணனிடம் சீதையை மீட்க சடாயு போராடுகிறது. இராவணன் ஜடாயுவின் இறக்கையை வெட்டுகிறான். சீதையை தேடி வந்த ராமர் மற்றும் இலக்குவனிடம் உண்மையை தெரிவித்த பிறகு சடாயு மரணம் அடைகிறது. ராமனும் இலக்குவனும் சீதையை தேடி கிட்கிந்தைக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் அனுமனைச் சந்திக்கிறார்கள். அனுமன் சுக்கிரீவன் என்பவரை ராமன் மற்றும் இலக்குவனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

சுக்ரீவனின் சகோதரன் வாலி அவரின் மனைவியை கவர்ந்து சென்று விட்டான். எனவே ராமன் வாலி வதம் செய்து சுக்கிரீவனின் மனைவியையும் அவருடைய அரசையும் மீட்டு தருகிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் சுக்ரீவன் ராமனுக்கு உதவி செய்கிறார். வாலியின் மகன் அங்கதன் தலைமையில் சீதையை தேடிய வானர கூட்டம் இலங்கையை நோக்கி செல்கின்றனர். ஆனால் இலங்கைக்கு செல்லும் வழியில் கடல் உள்ளதால் அனைவரும் வழியின்றி இருக்கின்றனர். அப்போது அனுமன் அவருடைய திறனை உணர்ந்து விஸ்வரூபம் எடுக்கிறாா்.

5. சுந்தர காண்டம் (Sundara Kanda)

சீதையை தேடி இலங்கைக்கு அனுமன் பரந்து விரிந்திருக்கும் கடல் கடந்து சென்றார். இலங்கையில் இராவணன் சீதையை அசோகவனத்தில் சிறை வைத்திருந்தான். ராமனின் தூதனாக அங்கு சென்ற அனுமான் சீதையிடம் ராமனின் கணையாழியை (மோதிரத்தைக்) அடையாளமாக கொடுத்தார். சீதையை இலங்கையில் இருந்து மீட்டு செல்வதாக அனுமன் கூறுகிறார். ஆனால் சீதை அதனை மறுக்கிறாள்.

Ram Sita Story

ராமர் இல்லாத போது ராவணன் சீதையை வலுக்கட்டாயமாக கவர்ந்து சென்றான். அதேபோல் ராவணன் இல்லாதபோது, ​​அனுமன் சீதையை மீண்டும் ராமனிடம் கொண்டு சென்றான் என்ற அவப்பெயர் வராமல் இருக்கவும், சீதையை இராவணன் கவர்ந்து வந்ததற்கு பழிவாங்க ஸ்ரீ ராமர் வரவேண்டும் என்று கூறுகிறாள். அதன் பிறகு சீதையிடம் இருந்து சூடாமணியை அடையாளமாக பெற்றுக் கொள்கிறார் அனுமன்.

அனுமன் பிறகு இலங்கையின் கட்டிடங்கள் மற்றும் அசுரர்களை தாக்குகிறார். ராவணனின் அசுர வீரர்கள் தன்னை படித்து சென்று இராவணனிடம் ஒப்படைக்க அனுமதிக்கிறார். அனுமன் இராவணனிடம் ஸ்ரீ ராமனின் பெருமைகளை தைரியமாக கூறுகிறார். இராவணன் அனுமன் வாலில் தீ வைக்கிறார். அனுமன் கட்டப்பட்டிருந்த சங்கிலியில் இருந்து தப்பித்து. இலங்கையின் அனைத்து இடங்களிலும் தீயை வைக்கிறார். அதன் பிறகு இலங்கை தீவில் இருந்து புறப்படுகிறார்.

6. யுத்த காண்டம்

இலங்கையில் அசோகவனத்தில் சீதையை கண்ட இராமனிடம் அனுமன் கூறுகிறார். சீதையை மீட்பதற்காக நீலன் மற்றும் நளன் தலைமையில் வானர வீரர்கள் இலங்கைக்கு தனுஷ்கோடியில் இருந்து கற்பாலம் அமைத்து இலங்கையை சென்றடைகின்றனர். அந்த கற்கள் எல்லாம் ராமர் பெயர் எழுதப்பட்டது. இராவணன் தம்பியான வீடணன் (விபீடணன்) அமர்மன் செய்யும் இராவணனிடம் இருந்து பிரிந்து ராமனுக்கு சீதையை மீட்பதற்கு உதவ முன்வருகிறார். சீதையை விடுவிக்க கோரி அங்கதன் இராவணனிடம் தூது அனுப்புகிறார் ராமன். ராமனின் கோரிக்கையை இராவணன் மறுக்கிறான்.

Ramayanam Tamil

இராவணனின் அசுரகுல வீரர்களுக்கும் இராமன், இலக்குவன் மற்றும் சுக்கிரீவன், அனுமான், அங்கதன், ஜாம்பவான், நீலன் மற்றும் நளன் தலைமையிலான வானரங்களும் 18 மாதங்கள் போரிடுகின்றனர். இந்த போரில் இலக்குவனை இராவணனின் மகன் இந்திரஜித் நாகாஸ்திரம் கொண்டு தாக்குகிறான். இலக்குவனை காப்பாற்ற மேரு மலையில் உள்ள சஞ்சீவினி மூலிகைக் குன்றைப் பெயர்த்தெடுத்து வருகிறார் அனுமன். சஞ்சீவி மூலிகையால் இலக்குமணன், இறந்த ஆயிரக்கணக்கான வானரர்களும் உயிர்த்தெழுகின்றன.

பின்னர் நடந்த கடுமையான போரில் ராவணனின் மகன்கள் இந்திரஜித், அதிகாயன், பிரகஸ்தன், திரிசிரன், நராந்தகன் – தேவாந்தகன். தம்பி கும்பகர்ணன் மற்றும் பெரும்பாலான படைத்தலைவர்கள் வீரர்கள் உயிரிழக்கின்றனர். இறுதியாக ஸ்ரீ ராமர் ராவணனை வதம் செய்கிறார்.

வீடணனுக்கு இலங்கை அரசராக பட்டாபிசேகம் செய்து வைக்கிறார். அதன் பிறகு இலக்குவனை தீ மூட்ட செய்து அந்த தீயில் சீதை பாய்ந்து தான் கற்புள்ளவள் என்பதை உறுதி செய்தல். அதன் பிறகு மூவரும் இலங்கையில் இருந்து அயோத்தி செல்கின்றனர். அங்கு ராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அதுவே கம்பர் எழுதிய கம்பராமாயணத்தில் உள்ள கதை ஆகும்.

மேலும் படிக்க: Manaiyadi Sasthiram 2024: வளம் தர மகிழ்ச்சி பெருகும் மனையடி சாஸ்திரம் 2024..!

உத்தர காண்டம்

கம்பர் எழுதிய கம்பராமாயணத்திற்கு பிறகு ஒட்டக்கூத்தர் இறுதி காண்டமான உத்தர காண்டத்தை எழுதினார். இந்த உத்தர காண்டத்தில் ஸ்ரீ ராமர் ராவணனை வதம் செய்த பிறகு அயோத்தி சென்று பல ஆண்டுகள் மனு நெறி தவறாமல் ஆட்சி செய்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு சீதை தொடர்பான வதந்திகளை மக்களிடையே பரவியது. எனவே ராமர் ஐந்து மாத கர்ப்பிணியான சீதையை வனத்தில் விட கூறி இலக்குவனிடம் கூறுகிறார்.

வால்மீகியின் ஆசிரமத்தில் சீதைக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு லவன் மற்றும் குசன் என பெயர் வைக்கப்படுகிறது. இரு மகன்களையும் வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களின் தந்தையான ராமரிடம் ஒப்படைத்தாள். அதன் பிறகு சீதை பூமி மாதாவிடம் சென்றடைவதாக கதை முடிகிறது. இதுவே ஸ்ரீ ராமரின் முழுமையான (Sampoorna Ramayanam) கதையாக கூறப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோவில்

தற்போது கூட ராமர் போற்றும் வகையில் ராமர் கோவில் இந்தியாவில் அயோத்தியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் ஆனது ஜனவரி 22 ஆம் தேதி (Ayothi Ramar Temple Opening Date in Tamil) ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட உள்ளது. இந்த திறப்பு விழாவில் (Ramar Temple Kumbabishekam in Tamil) பிரதமர் மோடி உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் ரூ. 1800 கோடி செலவில் கட்டப்படுகிறது. இக்கோவிலின் மொத்த நிலப்பரப்பு சுமார் 2.7 ஏக்கர் ஆகும். இதில் 57,400 சதுரடியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Thaipusam 2024: தைப்பூசம் பற்றிய சிறப்பு தகவல்கள்..!

Ramar Story -FAQ

1. கம்பராமாயணத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

கம்பராமாணத்தில் மொத்தம் 10569 பாடல்கள் உள்ளன

2. கம்பரை ஆதரித்தவர் யார்?

கம்பன் காவியம் பாடப்பட்ட போது கம்பரை ஆதரித்த வள்ளல் சடையப்ப வள்ளல் ஆவார்.

3. ராமன் சகோதரர்னாக ஏற்றுக் கொண்டவர்கள் யார்?

குகன், சுக்கிரீவன் மற்றும் வீடணன் ஆகிய மூவரையும் ராமன் தனது சகோதரர்களான ஏற்றுக்கொண்டார்.

4. ராமனுக்கும் ராவணனுக்கும் போர் எத்தனை மாதங்கள் நடைபெற்றது?

ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே போர் 18 மாதங்கள் நடைபெற்றது.

5. சீதையின் சகோதரிகள் பெயர் என்ன?

சீதையின் சகோதரிகள் மாண்டவி, ஊர்மிளை, சுதகீர்த்தி ஆவர்.

6. ராமர் மற்றும் சீதையின் புதல்வர்கள் பெயர் என்ன?

ராமர் மற்றும் சீதையின் புதல்வர்கள் லவன் மற்றும் குசன் ஆவர். வால்மீகியின் ஆசிரமத்தில் சீதைக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இரு மகன்களையும் வளர்த்த சீதை சில வருடங்கள் கழித்து அவர்களுடைய தந்தையான இராமரிடம் ஒப்படைத்தாள்.

7. கம்பராமாயணத்தில் முதல் மற்றம் இருத்தி பாடல்கள் எது?

கம்பராமாயணத்தில் முதல் பாடல் கடவுள் வாழ்த்து மற்றம் இருத்தி பாடல் விடைகொடுத்த பாடல் ஆகும்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular