Homeவிளையாட்டுபுதிய சாதனையை படைத்தார் ஜடேஜா..!

புதிய சாதனையை படைத்தார் ஜடேஜா..!

உலகின் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பது தான் கிரிக்கெட். இதில் இந்திய அணியின் விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகவும் நன்றாகவும் இருக்கும். இந்திய அணியின் வீரர்களும் தங்களுடைய சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தொடர்ந்து பல சாதனைகளையும் புரிந்து தான் வருகின்றனர்.

இந்த வரிசையில் தற்போது நம் இந்திய அணியின் வீரரான ரவீந்திர ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளார். இதுக்குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ரவீந்திர ஜடேஜா இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற வரலாற்று சாதனையை (Ravindra Jadeja New Record) இவர் படைத்துள்ளார். இவர் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இவர் இந்த சாதனையை (Ravindra Jadeja Record) படைத்துள்ளார்.

இந்த வரிசையில் அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளுடன் முதல் இடத்திலும் அவரை தொடர்ந்து அஷ்வின் 347 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் மேலும் கபில்தேவ் 219 நான்காவது இடத்திலும் உள்ளனர். தற்போது 200 விக்கெட்டுகளுடன் ஜடேஜா ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

Ravindra Jadeja Record

மேலும் இதுவரை 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா மொத்தமாக 280 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜடேஜாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் சகவீரர்களும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: பல வருட சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular