Homeசெய்திகள்ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்..! அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி..!

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்..! அறிவிப்பை வெளியிட்டது ரிசர்வ் வங்கி..!

வழக்கமாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் மாதத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறையாக தான் இருக்கும். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் தற்போது ஞாயிற்று கிழமை வங்கிகள் செயல்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மக்கள் பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் பலருக்கும குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பினை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் அரசு தொடர்பான வணிகத்தைக் கையாளும் அனைத்து வங்கிகளும் அதன் கிளைகளை ஞாயிற்றுக் கிழமையான மார்ச் 31ஆம் தேதி திறந்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த 2023-2024-ம் நிதியாண்டுக்கான அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதற்காகதான் மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும் (All Banks is Open On Sunday) என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கையானது இந்த நடப்பு நிதியாண்டின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் வங்கிச் சேவைகள் முழுமையாக கிடைக்கும் என்று பொதுமக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தெரியபடுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி (Reserve Bank) வலியுறுத்தியுள்ளது.

Banks is Open On Sunday

மக்கள் அனைவருக்கும் வாரந்தோறும் பணி இருந்து கொண்டுதான் உள்ளன. எனவே நம்மில் பலரும் விடுமுறை நாளான ஞாயிற்று கிழமைகளில் வங்கிகள் செயல்பட்டால் (Banks is Open On Sunday) நன்றாக இருக்கும் என்று எண்ணி இருப்போம். அதுப்போன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழந்துள்ளது. இந்த நிதியாண்டின் கடைசி நாள் ஞாயிற்று கிழமை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: இந்த திட்டம் மூலம் விண்ணப்பித்தால் கேஸ் சிலிண்டர் விலை 500 மட்டுமே..! என்ன திட்டம்?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular