Homeசெய்திகள்புதிய சாதனை படைத்த இஷா அம்பானி..! மகிழ்ச்சியில் முகேஷ் அம்பானி..!

புதிய சாதனை படைத்த இஷா அம்பானி..! மகிழ்ச்சியில் முகேஷ் அம்பானி..!

உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் தான் முகேஷ் அம்பானி. இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார். இவருக்கு இந்தியா முழுவதும் பல நிறுவனங்கள் உள்ளது. மேலும் இந்திய அளவில் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்று தான் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இந்த நிறுவனத்தின் ரீடைல் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) நிறுவனம் 2024-ம் நிதியாண்டின் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

2024-ம் ஆண்டிற்கான காலாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்துள்ள நிலையில் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி தற்போது முடிந்த இந்த காலாண்டில் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபமாக ரூ.2,698 கோடியை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் ரூ.2,415 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் 11.7% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் குறிப்பிடத்தக்க, நிறுவனத்தின் வருடாந்திர லாபம் முதன் முறையாக ரூ.10,000 கோடி என்ற மைல்கல்லைக் கடந்து தற்போது சாதனைப் படைத்துள்ளது.

கடந்த ஆண்டு இஷா அம்பானி தலைமயிலான ரிலையன்ஸ் ரீடைல் (Reliance Retail Ltd) நிறுவனத்தின் மொத்த வருவாய் (Reliance Retail Ltd Income) ரூ.230,931 கோடியாக இருந்தது. இந்த 2024 முழு நிதியாண்டைப் பொறுத்தவரையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் (Reliance Retail Co) மொத்த வருவாய் ரூ.273,079 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் வருவாயோடு ஒப்பிடும்போது சுமார் 40000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

Reliance Retail Ltd Income
இதையும் படியுங்கள்: இஷா அம்பானியின் வீட்டை 500 கோடி கொடுத்து வாங்கிய பிரபல நடிகை..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular