Homeவிளையாட்டுசச்சினின் 48 வருட சாதனையை முறியடித்த இளம் வீரர்... யார் அவர்?

சச்சினின் 48 வருட சாதனையை முறியடித்த இளம் வீரர்… யார் அவர்?

கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை தன் கைவசம் வைத்திருப்பவர் தான் Sachin Tendulkar. இவரின் பல சாதனைகளை இன்றளவும் முறியடிக்க முடியவில்லை. ஆனால் இன்று Cricket World Cup தொடரின் 35-வது லீக் போட்டி இன்று நடைப்பெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி 401 குவித்தது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரான ரச்சின் ரவீந்திரா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 94 பந்துகளில் 108 ரன்களை குவித்தார் இதில் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரும் அடங்கும். இந்த சதம் உலகக் கோப்பை தொடரில் இவரின் 3-வது சதமாகும். இவரின் வயது தற்போது 23 ஆகும். இந்த சதத்தை அடித்ததன் மூலம் ரச்சின் உலகக் கோப்பை தொடரில் குறைந்த வயதில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதன் மூலம் இவர் இதற்கு முன், 1996-ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தனது 25 வயதுக்கு முன்பாக, உலகக் கோப்பை தொடரில் 2 சதங்களை அடித்திருந்தார், இதுவே சாதனையாக இருந்தது. இந்நிலையில், 27 ஆண்டுகள் கழித்து சச்சினின் சாதனையை Rachin Ravindra முறியடித்துள்ளார்.

 Rachin Ravindra

அதுமட்டுமின்றி சச்சினின் மற்றொரு சாதனையை ரச்சின் சமன் செய்துள்ளார். 1996-ம் ஆண்டு World Cup தொடரில் சச்சின் 532 ரன் குவித்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த 25 வயதுக்கு உட்பட்ட வீரர் என்ற சாதனையினை படைத்தார். இதனை இன்றைய போட்டியில் ரச்சின் சமன் செய்துள்ளார். அடுத்த போட்டியில் சச்சினின் அதிக ரன் குவித்த இளம் வீரர் என்ற சாதனையையும் ரச்சின் முறியடிப்பார் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயரை இணைத்தே, இவருக்கு ரச்சின் என அவரது பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular