Homeசெய்திகள்90 நாட்கள் ஊரடங்கு நடவடிக்கையா? பறவைக் காய்ச்சல் எதிரொலி…

90 நாட்கள் ஊரடங்கு நடவடிக்கையா? பறவைக் காய்ச்சல் எதிரொலி…

கேரள மாநிலத்தில் இயங்கியவரும் சில கோழிப் பண்ணைகளில் உள்ள கோழி, வாத்து போன்ற பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் (Paravai Kaichal) பாதிப்பு உள்ளது. எனவே தமிழகம், கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகளில் 90 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எடத்துவா மற்றும் செருதானா போன்ற கிராமங்களில் செயல்பட்டு வரும் சில கோழி பண்ணைகளில் அதிக அளவிலான வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன. அதன் பிறகு இறந்த வாத்துக்களை ஆய்வு செய்ததில் அவற்றிற்கு H5N1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு (Paravai Kaichal News) ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பறவைகளுக்கான இந்த பாதிப்பு தெரிய வந்த பிறகு அந்த மாநிலத்தில் பறவை காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவக்கூடும் என்பதால் தமிழ்நாடு – கேரள மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் நீலகிரி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு கோழி, வாத்து, முட்டை போன்றவற்றை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேரளாவில் இருந்து வரும் மற்ற வாகனங்கள் அனைத்திற்கும் கிருமி நாசினி தெளித்த பிறகு தான் அனுமதிக்கப்பட்டுகிறது.

நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் இது குறித்து கூறியது என்னவென்றால், கேரளாவிற்கு அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில எல்லைகளில் பரவைக் காய்ச்சல் தொற்று பறவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது (Paravai Kaichal News in Tamil). அதன் அடிப்படையில் கோழி, வாத்து போன்ற பறவை இனங்கள், அதன் முட்டைகள் மற்றும் அதன் எச்சம் (கழிவுகள்) போன்றவற்றை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Paravai Kaichal News in Tamil

பறவைக் காய்ச்சல் கிருமிகள் 90 நாட்களுக்கு பிறகு தான் முழுமையாக அழியும் என்பதால், இதுபோன்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் 90 நாட்களுக்கு தொடரும் எனவும், பாதிப்பு அதிகமாக இருந்தால் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: நீலகிரியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த மேஃபிளவர்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular