Homeதொழில்நுட்பம்காதலர் தினத்தை முன்னிட்டு ஐபோன் 15-க்கு அதிரடி ஆஃபர்..! மிஸ் பண்ணிடாதிங்க..!

காதலர் தினத்தை முன்னிட்டு ஐபோன் 15-க்கு அதிரடி ஆஃபர்..! மிஸ் பண்ணிடாதிங்க..!

இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் தங்களின் துணைக்கு நல்ல பரிசு அளிக்க வேண்டும் என்று பல திட்டங்களை தீட்டி வருவர். அதிலும் பல ஐபோன் வாங்கி பரிசளித்த விரும்புவர். ஆனால் அனைவராலும் ஐபோனை பரிசாக கொடுக்க முடியாது.

இந்நிலையில் தான் அவர்களுக்கு உதவும் வகையில் ஐபோன் 15 மொபைலுக்கு அதிரடி ஆஃபர்கள் (Special Offer In iPhone 15) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடியை Flipkart நிறுவனம் தான் அறிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த தகவலின் படி பிளிப்கார்ட் நிறுவனமானது ஐபோன் 15 உள்ளிட்ட பிரபலமான பல ஸ்மார்ட் போன்களில் மீது பெரும் தள்ளுபடியை வரவிருக்கு காதலர் தினத்தை முன்னிட்டு அளிக்கிறது. அதுமட்டுமின்றி பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் கூடுதல் தள்ளுபடிகளைப் பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.

இதில் முக்கியமாக அறிவிப்பு என்றால் அது ஐபோன் 15 (iPhone 15 Offer) மாடல் மீது கொடுக்கப்பட்டுள்ள தள்ளுபடி தான். இந்த தள்ளுபடி விலையில் ஐபோன் 15 மொபைல் காதலர் தினத்தை முன்னிட்டு அதன் அறிமுக விலையில் இருந்து 12,000 வரை குறைந்த தள்ளுபடியில் வாங்கும் சலுகையை தற்காலிகமாக பிளிப்கார்ட் கொண்டு வந்துள்ளது.

இந்த தள்ளுபடியானது காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9-ம் தேதி முதல் பிப்ரவரி 15 வரை இந்த ஐபோன் 15 சீரிஸ் மொபைல் வாங்க விருப்பும் பயனர்கள் Flipkart மூலம் ரூ.65,999 முதல் வாங்கலாம். இதன் விலையில் வங்கி சலுகைகள் எதுமின்றி நேரடியாக ரூ.11,901 தள்ளுபடி அடங்கும்.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் HDFC கார்டைப் பயன்படுத்தி இந்த மொபைலை வாங்குவதன் மூலம் 4000 ரூபாயைச் சேமிக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தள்ளுபடி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளதால், வாடிக்கையாளர்கள் மற்றும் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

iPhone 15 Offer
இதையும் படியுங்கள்: Infinix Smart 8 Series: வெறும் ரூ. 7,099-ல் ஐபோன் அம்சத்துடன் அறிமுகம்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular