Homeஆன்மிகம்உங்களுக்கு தெரியுமா? பூஜை அறையில் வைத்து வணங்க கூடாத சுவாமி படங்கள்..!

உங்களுக்கு தெரியுமா? பூஜை அறையில் வைத்து வணங்க கூடாத சுவாமி படங்கள்..!

ஒவ்வொரு வீட்டிலும் சாமி படங்களை வைத்து பூஜை செய்வதற்காக தனியாக ஒரு இடம் இருக்கும். அனைவராலும் எல்லா நேரங்களிலும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாது, அனால் வீட்டில் உள்ள பூஜை அறையின் முன் நாம் தேவைகளை வேண்டிக்கொள்ளாம். பூஜை அறையில் உள்ள சாமி படங்களை பார்க்கும் போது நம் மனதில் அமைதியும், வீட்டில் சந்தோஷமும் இருக்க வேண்டும். அதனால் வீட்டில் எந்த சுவாமி உருவப்படங்களை வைக்க வேண்டும், எந்த சுவாமி உருவப்படங்களை வைக்கக்கூடாது என சில ஆன்மீக சாஸ்திர கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

வீட்டின் பூஜை அறையில் வைக்கக்கூடாது சுவாமி படங்கள்

  • நவகிரகங்களின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யக் கூடாது.
  • நாம் செய்யும் நன்மை மற்றும் தீய செயலுக்கு பலன்கள் மற்றும் தண்டனைகள் தரும் கடவுளாக கருதப்படும் சனீஸ்வர பகவான் உருவப்படத்தை பூஜை அறையில் வைத்து வணங்க கூடாது.
  • சிவபெருமானின் உருவமாக கருதப்படும் நடராஜர் ருத்ர தாண்டவம் ஆடுவது போன்ற படத்தை Veetin Poojai Araiyil Vaika Kudathu.
  • கோபமாக இருக்கும் காளி தேவி மற்றும் சிவபெருமான் மற்றொரு அவதாரமாக கருதப்படும் கால பைரவர் சுவாமி படத்தை வைத்து வணங்க கூடாது.
Veetin Poojai Araiil Vaika kudaatha Swami Padam
  • கடவுள் படம் மிகவும் ஏழ்மையான தோற்றத்தில் இருக்கும் உருவப்படத்தை வீட்டில் வைக்க கூடாது. அதாவது மொட்டை மற்றும் கோவணத்துடன் இருக்கும் முருகனின் ஆண்டி படத்தையும், தலைக்கு மேல் வேல் உள்ள முருகன் படத்தையும் Poojai Araiyil வைத்து வணங்க கூடாது.
  • தவம் செய்வது போன்ற முனிவர்கள் படம் மற்றும் தலைவிரி கோலங்களில் உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.
  • நாக உருவம் போன்ற படங்கள், கொடூர பார்வையுடன் கோபமாக உள்ள கடவுளின் உருவப்படங்கள், உடைந்த சாமி சிலைகள் மற்றும் கிழிந்த உருவப்படங்கள் போன்றவற்றை வீட்டில் வைக்க கூடாது.
  • இறந்து போன நமது முன்னோர்கள் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைக்க கூடாது. அவர்களின் படத்தை எப்போதும் தெற்கு திசை பார்த்தே வைக்க வேண்டும்.

இதுபோன்ற தெய்வங்கள், முனிவர்கள் படங்கள் மற்றும் இறந்து போனவர்கள் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைத்து வணங்க கூடாது. ஆது மட்டும் இல்லாமல் தெய்வப்படங்களை தெற்கு திசையை நோக்கி வைக்க கூடாது. வீட்டின் பூஜை அறை கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும் வணங்குபவர்கள் தெற்கில் நின்று வடக்கு திசையை நோக்கியவாரு கடவுளை வணங்கவேண்டும்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular