Homeசெய்திகள்ஹோலி பண்டிகை அன்று நிகழ இருக்கும் அதிசயம்..! என்ன தெரியுமா?

ஹோலி பண்டிகை அன்று நிகழ இருக்கும் அதிசயம்..! என்ன தெரியுமா?

இந்த மாதம் ஒரு பெரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது. அது என்னவென்றால் முழு சந்திர கிரகணம். 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் நடைபெறபோகிறது. வரும் மார்ச் 25-ம் தேதி தான் இந்த சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதில் நாம் கவனிக்கவேண்டியது இந்த கிரகணம் ஹோலி பண்டிகளை அன்று வருகிறது.

ஹோலி பண்டிகையை நாம் வண்ணங்களின் திருவிழா என்று அழைக்கிறோம். இந்த திருநாளானது தெய்வங்களான ராதை மற்றும் கிருஷ்ணரின் அன்பைக் கொண்டாடும் விதமாகவும், தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கும் பண்டிகையாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த கிரகணமானது இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் ஒரு முக்கியமான வான நிகழ்வு ஆகும். மேலும் இந்த கிரகண நாளானது ஜோதிடம் மற்றும் வானியல் ஆகிய இரண்டிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகவும் உள்ளது.

சந்திர கிரகணம் என்பது ஒரு பௌர்ணமி நாளின் போது சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையில் பூமி வரும் நிகழ்வு தான் இந்த சந்திர கிரகணம். இந்த கிரகண நேரத்தில் பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் எனவே சந்திரனின் ஒருப்பகுதி இருளாக இருக்கும் இதை தான் நாம் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். நாம் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க இயலாது. ஆனால் சந்திர கிரகணம் அப்படி இல்லை இதை வெறும் கண்களால் பார்க்கலாம்.

Lunar Eclipse 2024

இந்த வருடம் இரண்டு சந்திர கிரகணம் (Lunar Eclipse) மற்றும் இரண்டு சூரிய கிரகணங்கள் நிகழவுள்ளது. அதில் ஒன்று தான் வரும் 25-ம் தேதி நிகழவுள்ளது. இது 100 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் முழு சந்திர கிரகணம் (Lunar Eclipse 2024) ஆகும். இந்த கிரகணமானது காலை 10.23 முதல் மாலை 3.02 மணிவரை உள்ளது. இந்த கிரகணம் (Santhira Grahanam) இந்தியாவில் காணப்படாது என்பதால் இந்த கிரகணத்தின் போது கோயில் நடைகள் சார்த்தப்படாது மற்றும் அன்று நடைபெறவுள்ள ஹோலி பண்டிகையும் பாதிக்கப்படாது.

இதையும் படியுங்கள்: குக் வித் கோமாளியின் புதிய நடுவராக பிரபல தமிழ் படத்தின் கதாநாயகன்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular