Homeசெய்திகள்ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி..! தமிழக அரசு அதிரடி..!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி..! தமிழக அரசு அதிரடி..!

தமிழக அரசு பொதுமக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு(TN Ration Shop New Update In Tamil) அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில், ரேஷன் அரிசி கடத்தல் ஓரளவிற்கு குறைந்துள்ளதே தவிர முழுமையாக சரிசெய்யவில்லை. இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்க கூடிய அரிசி கிடைக்காமல் போய்விடுகிறது. இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

அதுமட்டுமல்லாமல் மாத கடைசியில் பொதுமக்கள் வாங்காத பொருட்களையும் பொதுமக்கள் வாங்கியது போல ரேஷன் கடை ஊழியர்கள் பதிவு செய்து, கள்ளச்சந்தையில் விற்பனை செய்துவிடுவதாகவும் புகார்கள் எழுந்தது. இந்த அரிசி கடத்தலில் இடையில் புரோக்கர்கள் இருப்பதாகவும் புகார்கள் வந்தது.

இதுபோன்ற புகார்கள் எழுந்த நிலையில் உணவுத்துறை அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அவ்வபோது ஆய்வுகளும் நடத்தப்பட்டது.

இதனால் தமிழக அரசு இலவச புகார் எண்களை அறிவித்துள்ளது. அதன்படி ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்கல் போன்ற புகார்களை நீங்கள் கேள்விட்டால் (TN ration shop helpline number) உடனடியாக கட்டணமில்லா 1800 599 5950 இந்த எண்ணிற்கு அழைத்து புகார்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கோடை காலம் தொடங்கிவிட்டால் பொதுமக்களின் நலன் கருதி அனைத்துப் பொருட்களையும் ஒரே தவணையில் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

TN Ration Shop New Update In Tamil

சில சமயங்களில் ரேஷன் கடைகளில் இருப்பு இல்லை என்றும், உங்கள் அட்டைக்கு இந்த பொருட்கள் வழங்கப்படமாட்டது என்று கூறினால், அதனை உறுதிப்படுத்தும் விதமாகவும், உங்கள் அட்டையில் உள்ள உறுப்பினர்களுக்கு ஒதுக்கிய பொருட்கள், முந்தைய பரிவர்தணைகள் போன்றவற்றை அறிந்துக்கொள்வதற்காக டிஎன்இபிடிஎஸ் என்ற மொபைல் ஆப்-ஐ உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் முறைகேடுகளை தடுக்க முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: இனி ரேஷன் கடைகளில் பாமாயில் கிடையாது..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular