Homeவேலைவாய்ப்பு செய்திகள்அரசு வேலையில் சேர வேண்டுமா? TNPSC வேலை வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!

அரசு வேலையில் சேர வேண்டுமா? TNPSC வேலை வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!

TNPSC Group 1 Recruitment 2024: தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை செளியிட்டுள்ளது. TNPSC ன் இந்த அறிவிப்பின் படி பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு தேவையான கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNPSC Group 1 வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி உதவி ஆணையர் – 21 பணியிடங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் – 08 பணியிடங்கள் என மொத்தமாக 29 பதவிக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு TNPSC -ன் அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in இணையதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது (TNPSC Official Website).

(i) உதவி ஆணையர்:

Assistant Commissioner பதவி விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டத்துடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக/தலைவராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து நிர்வாக அதிகாரி/ஆய்வாளர்/தலைமை எழுத்தர்/மேலாளர்/கண்காணிப்பாளராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

(ii) மாவட்ட கல்வி அலுவலர்:

District Educational Officer பதவி விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

TNPSC Job Notification in Tamil -ல் குறிப்பிட்டுள்ளபடி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 32 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 42. மேலுள்ள கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகக்காணல் நடைபெறும். அதன் பிறகு காலியாக உள்ள பதவிகளுக்கு தகுதியான நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

TNPSC Group 1 velai vaippu 2024 ன் படி காலி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 56,100 – 2,05,700/- தரப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Job Vacancy -க்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 23.04.2024 முதல் 22.05.2024 ஆம் தேதிக்குள் உங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் apply.tnpscexams.in இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

TNPSC குரூப் 1 காலி பணியிடம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அதிகாரபூர்வ அறிவிப்பை (Tamil Nadu Public Service Commission (TNPSC) Official Notification) முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும்.

அரசு வேலையில் சேர வேண்டுமா? TNPSC வேலை வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!

TNPSC குரூப் 1 ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை (TNPSC Group 1 Recruitment 2024) வெளியிட்டுள்ளது.

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-23

Posting Expiry Date: 2024-05-22

Employment Type : FULL_TIME

Hiring Organization : Tamil Nadu Public Service Commission (TNPSC)

Organization URL: www.tnpsc.gov.in

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, 37PJ+5RH, Park Town, Tamil Nadu Public Service Commission Rd, V.O, C. Nagar, Chennai, Tamil Nadu, 600003, India

Experience Required: 72 Months

மேலும் படிக்க: மாதம் 30,000/- சம்பளத்துக்கு SAMEER நிறுவனத்தில் மத்திய அரசு வேலை… நேர்காணலுக்கு செல்ல உடனே தயாராகுங்கள்…
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular