Homeவிளையாட்டுODI போட்டிகளில் அதிக ரன்களை குவித்த Top 10 இந்திய வீரர்கள்

ODI போட்டிகளில் அதிக ரன்களை குவித்த Top 10 இந்திய வீரர்கள்

உலக அளவில் அதிக ரசிகர்களை வைத்துள்ள விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான், இது நாம் அறிந்த ஒன்றே. கிரிகெட் 16-ம் நூற்றாண்டு முதலே தொடங்கியது என்றாலும் 1721 முதல் தான் இந்தியாவில் விளையாடப்பட்டுள்ளது. அதிலும் ஒரு நாள் போட்டிகள் 1974-ம் ஆண்டு தான் தொடங்கியது.

இந்தியாவில் 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதுவரையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சையத் அபித் அலி முதல் தற்போது உம்ரான் மாலிக் வரை, இதுப்போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். இவர்களில் நம் அறிந்த Sunil Gavaskar தொடங்கி Sachin, Ganguly , Dravid, Krishnamachari Srikkanth, Kapil Dev என பலர் இருந்துள்ளனர்.

1974-ம் ஆண்டு One Day International போட்டிகள் தொடங்கியது முதல் இதுவரை Indian Team கிட்டத்தட்ட 1029 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இப்போட்டிகளில் 539 போட்டிகளில் வெற்றியும், 438 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது, மற்றும் 9 போட்டிகள் டையில் முடிந்த நிலையில், 43 போட்டிகளுக்கு முடிவு இல்லாமல் இருந்துள்ளது. தற்போது இப்பதிவில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து முதல் 10 இடங்களை பிடித்துள்ள இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்.

ODI Top 10 வீரர்கள்

1.சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar)

Sachin Tendulker

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 18426 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இவர் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் மொத்தம் 463 போட்டிகளில் 452 Innings விளையாடியுள்ளார். இந்த இன்னிங்ஸில் 41 முறை தனது விக்கெட்டை இழக்காமல் (Not Out) விளையாடியுள்ளார். மற்றும் இவர் அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்த பிறகும் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதில், 2016 பவுண்டரிகளும், 195 சிக்ஸர்களும் அடித்துள்ளார். மேலும் 49 சதமும், 96 அரைசதமும் அடித்து சாதனை படைத்துள்ளார். இன்றுவரை முதல் இடத்தை தக்கவைத்தள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

2. விராட் கோலி (Virat Kohli)

Virat Kohli in India

இந்திய அணியின் முக்கிய வீரராக உள்ள விராட் கோலி 2-ம் இடத்தை பிடித்துள்ளார். இவர் 2008 முதல் தற்போது வரை விளையாடிவருகிறார். இவர் 287 போட்டிகளில் 275 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். இதுவரை இவர் எடுத்துள்ள மொத்த ரன்கள் 13437 ஆகும். ஒரு நாள் போட்டியில் அதிகபட்கமாக 183 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் 48 சதங்களும், 69 அரைசதங்களும் அடித்துள்ளார். இவற்றில் 1255 பவுண்டரிகளும், 148 சிக்ஸர்களும் அடங்கும்.

3. சௌரவ் கங்குலி (Sourav Ganguly)

Sourav Ganguly Indian Player

Sourav Ganguly முன்னாள் இந்திய கிரிகெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இவர் 1992-2007 வரை ODI கிரிக்கெட்களில் விளையாடியுள்ளார். கங்குலி மொத்தமாக 308 போட்டிகளில் 297 இன்னிங்ஸ் விளையாடி 11221 ரன்களை குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ரன்கள் 183 ஆகும். மொத்தமாக இவர் 22 சதங்களும், 71 அரைசதங்களையும் ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ளார். இவற்றில் 1104 பவுண்டரிகளும்,189 சிக்ஸர்களும் அடங்கும்.

4. ராகுல் திராவிட் (Rahul Dravid)

Rahul Dravid

ராகுல் திராவிட் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர். தற்போது இவர் பயிற்சியாளராக இருந்து வருகிறார். 1996-2011 காலக்கட்டத்தில் 340 போட்டிகளில் 314 இன்னிங்ஸ் விளையாடி 10768 ரன்களை எடுத்துள்ளார். இவர் ஒரு நாள் போட்டியில் எடுத்த அதிக ரன்கள் 153 ஆகும். மொத்த போட்டிகளில் 12 சதங்களும், 82 அரைசதங்களையும் ODI-ல் அடித்துள்ளார். இவற்றில் 942 பவுண்டரிகளும், 42 சிக்ஸர்களும் அடங்கும்.

5. மகேந்திரசிங் தோனி (Mahendra Singh Dhoni)

MS Dhoni

இந்திய அணியின் முக்கிய வீரராகவும் முன்னாள் கேப்டனும் ஆன மகேந்திரசிங் தோனி 2004-ம் ஆண்டு முதல் 2019 வரை ஒருநாள் கிரிக்கெட் பேட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் 347 போட்டிகளில் 294 இன்னிங்ஸில் விளையாடி மொத்தம் 10599 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டியில் இவருடைய அதிகபட்க ரன்கள் 183*, மற்றும் 9 சதங்களும், 73 அரைசதங்களும் அடித்துள்ளார். இவற்றில் 809 பவுண்டரிகளும், 222 சிக்ஸர்களும் அடங்கும்.

6. ரோகித் சர்மா (Rohit Sharma)

Rohit Sharma Indian caption

தற்போதைய இந்திய அணியின் கேப்டனாக Rohit Sharma உள்ளார். ரசிகர்களால் கிட் மேன் என அழைக்கப்படுகிறார். இவர் 2007 முதல் தற்போது வரை 257 போட்டிகளில் 249 இன்னிங்ஸில் விளையாடியுள்ளார். இதுவரை எடுத்துள்ள மொத்த ரன்கள் 10510 ஆகும். ODI-ல் இவருடைய அதிகபட்க ரன்கள் 264, மற்றும் 31 சதங்களும், 54 அரைசதங்களும் அடித்துள்ளார். இவற்றில் 971 பவுண்டரிகளும், 312 சிக்ஸர்களும் அடங்கும்.

7. முகமது அசாருதீன் (Mohammad Azharuddin)

Mohammad Azharuddin Indian Player

முகமது அசாருதீன் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருந்துள்ளார். இவர் 1984-ம் ஆண்டு முதன்முதலாக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி, தன் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இன்றளவும் இந்த சாதனையை வேறு யாராலும் முறியடிக்க முடியவில்லை. இவர் 1985-2000 வரை ODI கிரிக்கெட்களில் மொத்தமாக 334 போட்டிகளில் 308 இன்னிங்ஸ் விளையாடி 9378 ரன்களை குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ரன்கள் 153* ஆகும். மேலும் இவர் 7 சதங்களும், 58 அரைசதங்களையும் ODI போட்டிகளில் அடித்துள்ளார். இவற்றில் 622+ பவுண்டரிகளும், 77+ சிக்ஸர்களும் அடங்கும்.

8. யுவராஜ் சிங் (Yuvraj Singh)

Yuvraj Sing

Yuvraj Singh முன்னாள் இந்திய கிரிகெட் அணியின் முக்கிய வீரராக இருந்துள்ளார். 2000-2017 வரை ODI கிரிக்கெட்களில் விளையாடி நல்ல வரவேற்பை பெற்றவர் ஆவார். இவர் 301 போட்டிகளில் 275 இன்னிங்ஸ் விளையாடி 8609 ரன்களை குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இவரின் அதிகபட்சமாக 150 ரன்கள் வரை அடித்துள்ளார். மேலும் இவர் 14 சதங்களும், 52 அரை சதங்களையும் ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ளார். இவற்றில் 896 பவுண்டரிகளும், 153 சிக்ஸர்களும் அடங்கும்.

9. வீரேந்தர் சேவாக் (Virender Sehwag)

Virender Sehwag

Sehwag இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் ODI கிரிக்கெட் போட்டிகளில் 1999-2013 வரை விளையாடியுள்ளார். மொத்தம் 241 போட்டிகளில் 235 இன்னிங்ஸ் விளையாடி 7995 ரன்களை குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ரன்கள் 219. மேலும் இவர் 15 சதங்களும், 37 அரைசதங்களையும் ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ளார். இவற்றில் 1092 பவுண்டரிகளும்,131 சிக்ஸர்களும் அடங்கும்.

10. ஷிகர் தவான் (Shikhar Dhawan)

Shikhar Dhawan

Dhawan இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக உள்ளவர். ஆனால் இந்த வருடம் ODI கிரிக்கெட்டில் இடம் பெறவில்லை. இவர் 2010-2022 வரை ODI கிரிக்கெட்களில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு வரை மொத்தமாக 167 போட்டிகளில் 164 இன்னிங்ஸ் விளையாடி 6793 ரன்களை குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ரன்கள் 143. மேலும் இவர் 17 சதங்களும், 39 அரைசதங்களையும் ஒரு நாள் போட்டிகளில் அடித்துள்ளார். இவற்றில் 842 பவுண்டரிகளும், 79 சிக்ஸர்களும் அடங்கும்.

ODI தரவரிசை பட்டியல்

Top 10 scorers in World Cup
தரவரிசை
வீரர் பெயர்
வருடம்
ரன்கள்
போட்டிகள்
அதிக ரன்கள்
1 சச்சின் டெண்டுல்கர் 1989-2012 18426 463 200*
2 விராட் கோலி 2008-2023 13437 287 183
3 சௌரவ் கங்குலி 1992-2007 11221 308 183
4 இராகுல் திராவிட் 1996-2011 10768 340 153
5 மகேந்திரசிங் தோனி 2004-2019 10768 347 183*
6 ரோகித் சர்மா 2007-2023 10510 257 264
7 முகமது அசாருதீன் 1985-2000 9378 334 153*
8 யுவராஜ் சிங் 2000-2017 8609 301 150
9 வீரேந்தர் சேவாக் 1999-2013 7995 241 219
10 ஷிகர் தவான் 2010-2022 6,793 167 143
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular