Homeசெய்திகள்கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள தபால் பெட்டி..! என்னடா பன்னி வச்சிருக்கீங்க..!

கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள தபால் பெட்டி..! என்னடா பன்னி வச்சிருக்கீங்க..!

இன்றைய காலகட்டத்தில் தகவல் தொடர்பிற்காக பல தொழில்நுட்ப முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் முதன் முதலில் தகவல் தொடர்பிற்கு கடைபிடிக்கப்பட்ட முறை என்றால் அது தபால் முறை தான். இப்போது பல வகையான புதிய தொழில்நுட்ப இந்த காலக்கட்டத்திலும் தபால் முறைக்கு என்று தனி அங்கீகாரம் இருந்துதான் வருகிறது.

மேலும் இந்த காலத்திலும் கடிதங்களை தபால் மூலம் அனுப்பும் வாடிக்கையாளர்கள் இருக்க தான் செய்கின்றனர். இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை அளிக்கும் வகையில் தான் பல நிகழ்வுகள் தொர்ந்து அரங்கேறிவருகிறது. அந்த வகையில் தான் ஒன்றுதான் கடலுக்கு அடியில் தபால் பெட்டி (Post Box in Underwater) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டியில் உங்களுடைய கடிதத்தை போடவேண்டும் என்றால் கடலுக்கு அடியில் நீந்தி சென்றுதான் போடவேண்டும். இது ஒரு சுவாரஸ்யமான பயணமாக இருக்கும். இந்த தபால் பெட்டி ஜாப்பானின் சுசாமி பே என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது கரையில் இருந்து சுமார் 10 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பெட்டியில், உங்களுடைய கடிதத்தை போடவேண்டும் என்றால் நீந்தி சென்றுதான் போடவேண்டும். இந்த தபால் பெட்டியில் போடப்படும் கடிதங்களுக்காகவே தண்ணீரால் பாதிக்காத தபால் அட்டைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த தபால் அட்டையில் ஆயில் பெயிட் மூலம் நாம் எழுத விரும்புவதை எழுதவேண்டும்.

Post Box in Underwater

அதன் பிறகு இதற்காக பணிபுரிபவர்கள் இந்த கடிதங்களை எடுத்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைப்பர். இந்த தபால் பெட்டியை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 2002 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இந்த தபால் பெட்டி இடம்பெற்றது. இந்த தபால் பெட்டியில் (Underwater Post Box) நாள் ஒன்றுக்கு சுமார் 1000 முதல் 1,500 வரை தபால் அட்டைகள் போடப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: புதிதாக 2 வானிலை ரேடார்கள் அமைக்கப்படும்..! மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் தகவல்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular