Homeதொழில்நுட்பம்UPI Full Form in Tamil: யுபிஐ பற்றிய தெளிவான மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்..!

UPI Full Form in Tamil: யுபிஐ பற்றிய தெளிவான மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்..!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. அதிக அளவிலான மக்கள் ஆன்லைன் முறையில் தான் பணம் செலுத்துகின்றனர். இந்த UPI- விரிவாக்கம் Unified Payments Interface என்பதாகும். இதற்கான விளக்கத்தை எளிமையாக பணத்தை பரிமாறி கொள்ளும் வசதி கூறலாம். இந்திய அரசினால் கொண்டு வரப்பட்ட நிதிச் சேவை தான் இந்த யுபிஐ. இதுப்பற்றி (UPI Full Form in Tamil) நாம் இப்பதிவில் தெளிவாகப் பார்க்கலாம்.

இந்த முறையானது பணப் பரிமாற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று விட்டது என்று தான் கூறவேண்டும். UPI என்பது ஒரு செயலி மட்டுமில்லை. இது ஒரு தொழில்நுட்ப வசதி ஆகும்.

நம்மில் பலரும் பல வங்கிகளில் கணக்கு வைத்திருக்கலாம். எனவே நாம் கணக்கு வைத்துள்ள வங்கியின் செயலியை தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த ஒரு பண பரிமாற்ற செயலியையும் நாம் பயன்படுத்தலாம்.

பல பணபரிமாற்ற செயலிகள் உள்ள அதனை நாம் பதிவிறக்கம் செய்து, ஒருவரின் வங்கி கணக்கை இணைத்துவிட்டால் போதுமானது. அதன் பிறகு நாம் UPI சேவையை பயன்படுத்தலாம். இந்த யுபிஐ பண பரிமாற்றம் பற்றி பலருக்கு தெரிந்து இருந்தாலும் சிலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை என்பது தான் உண்மை. எனவே இப்பதிவில் நாம் UPI பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

யுபிஐ என்றால் என்ன (What is UPI)

யுபிஐ என்பது பணத்தை விரைவாக பரிவர்த்தனை செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். இது ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த யுபிஐ சேவையானது இதற்கு முன்னர் இருந்து செயல்பாட்டில் உள்ள IMPS என்னும் தொழில்நுட்பத்தினை அடித்தளமாக கொண்டு இயங்குகிறது. இந்த சேவையை பெறவேண்டுமெனில் ஒரு வங்கியானது தம்மை இதில் பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை NPCI என அழைக்கப்படும் (National Payments Corporation of India) அரசு அமைப்பு மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

அதற்கு பின்னர் Unified Payments Interface சேவையை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்க நினைக்கும் வங்கிகள் தனது வங்கிக்கான செயலியை முதலில் வெளியிட வேண்டும். மேலும் இந்த சேவையை வங்கிகள் அனைத்தும் தனி செயலியாகவோ அல்லது இதற்கு முன்னர் உள்ள mobile banking செயலிகளுடன் இணைத்தும் வெளியிடலாம்.

நாம் இந்த சேவையை பயன்படுத்த புதிய கணக்கு தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் முன்னர் பயன்படுத்தும் வங்கிக் கணக்கையே உபயோகிக்கலாம். மேலும் இந்த சேவையின் மூலம் 24 மணி நேரமும் உடனடியாகப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

இதற்கு முன்னர் பணத்தை பரிமாற்றுவதற்கு IMPS, RTGS, NEFT பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த முறையில் வங்கியானது open-ஆக இருக்கும் போது மட்டும் தான் பணத்தை transfer செய்ய முடியும். அதுமட்டுமின்றி இன்னும் பல ரூல்ஸ் இருந்தது.

UPI எவ்வாறு வேலை செய்கிறது

UPI-ஐ பயன்படுத்த வங்கி கணக்கின் விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வாடிக்கையாளரின் மெய்நிகர் முகவரி (mail id) மூலம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். இது நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு ஸ்மார்ட்போன் மூலம் பணத்தை ஒருவருக்கு அனுப்பவோ அல்லது மற்றவர்களிடமிருந்து பணத்தை பெறவோ பயன்படுகிறது.

இதில் UPI முறையில் பண பரிவர்த்தனையானது உங்களுடைய குளோபல் அட்ரஸ் என்று அழைக்கப்படும் நம்முடைய கைப்பேசி எண் அல்லது ஆதார் எண் மற்றும் லோக்கல் அட்ரஸ் எனப்படும் மெய்நிகர் முகவரி ஆகியவற்றின் அடிப்படையில் நடக்கிறது.

UPI பயன்கள் (UPI Benefits)

UPI தொழில்நுட்பத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் நம்முடைய தொலைபேசி மூலம் பணத்தை செலுத்தலாம். இந்த UPI முறையானது ஏற்கனவே உள்ள IMPS எனும் தொழில்நுட்பத்தை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டுல்லதால் எந்த விதமான கட்டணமும் கிடையாது.

Unified Payments Interface

  • இந்த செயலியின் மூலம் நாம் பணப்பறிமாற்றம் செய்வதற்கு ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வடிக்கையாளரின் முகவரி அதனை VPA என்று அழைப்பார்கள் ஆகியவை தேவைப்படுகிறது.
  • இந்த VPA (Virtual Private Address)-ஆனது வங்கிக்கணக்கு எண் போல கடினமாக இருக்காது. மிகவும் எளிதாக நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரி போல இருக்கும். எடுத்துகாட்டாக abcd@sbi இதுபோல் இருக்கும்.
  • BHIM மூலம் UPI குறியீடும் வங்கிகள் மூலம் MPIN குறியீடும் தரப்படுகிறது. இந்த UPI குறியீடானது 4-6 எண்களை கொண்டதாக இருக்கும். மேலும் பண பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு இது உபயோகப்படுகிறது.
UPI Full Form
இதையும் படியுங்கள்: Honor X9b: இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய மாடல் Honor போன்..!

UPI-Pin மற்றும் M-Pin

  • UPI- PIN மற்றும் M-Pin இரண்டும் வேறு என்பதில் முதலில் தெளிவு வேண்டும். UPI-Pin என்பது 4 முதல் 6 இலக்கம் வரை உள்ள குறியீடு ஆகும். இந்த எண் BHIM பயன்பாட்டில் நாம் முதல் முறையாக பதிவு செய்யும்போது உருவாக்கப்படும். இந்த குறியீட்டை நாம் UPI பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு பயன்படுத்தலாம்.
  • MPIN என்ப‌து வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது. மேலும் இந்த MPIN குறியீடு பணப்பரிமாற்றங்களுக்கான ஒரு கடவுச்சொல் என்றும் குறிப்பிடலாம். இவை இரண்டையும் நம் தேவை மற்றும் பயன்பட்டிற்கு ஏற்ப பயன்படுத்தலாம்.

UPI பயன்படுத்த என்ன தேவை

  • இந்த UPI பணபரிவர்த்தனை முறையை பயன்படுத்த முதலில் நாம் அக்கௌன்ட் ஹோல்டர் ஆக இருக்க வேண்டும்.
  • மிகவும் முக்கியமான ஒன்று உங்களுடைய தொலைபேசி எண்ணானது வங்கி கணக்குடன் லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும். ATM Card/Debit Card/Credit Card வைத்திருக்க வேண்டும்.
  • Google Pay (Gpay), PhonePe, Paytm, BHIM App மற்றும் பல ஆப்கள் UPI மூலம் பணம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.

இப்பதிவில் நாம் யுபிஐ குறித்த தகவல்களை பார்த்துள்ளோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: UPI பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! இத செயலைனா உங்க UPI ID Block தான்..!

UPI Full Form – FAQ

1. UPI-ன் விரிவாக்கம் என்ன?

UPI-ன் விரிவாக்கம் Unified Payments Interface

2. யுபிஐ என்றால் என்ன?

யுபிஐ என்பது பணத்தை விரைவாக பரிவர்த்தனை செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம் ஆகும் இதனை ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு என்றும் அழைக்கப்படுகிறது.

3. UPI-Pin என்றால் என்ன?

UPI-Pin என்பது 4 முதல் 6 இலக்கம் வரை உள்ள குறியீடு ஆகும். இந்த எண் BHIM பயன்பாட்டில் நாம் முதல் முறையாக பதிவு செய்யும்போது உருவாக்கப்படும். இந்த குறியீட்டை நாம் UPI பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு பயன்படுத்தலாம்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular