Homeதொழில்நுட்பம்UPI Pay: பட்டன் போன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்...!

UPI Pay: பட்டன் போன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம்…!

இந்தியாவில் இன்று பலரும் Smart Phone-களை பயன்படுத்த தொடங்கி விட்டோம். ஆனாலும் இன்றும் Feature Phone என அழைக்கப்படும் கீபேட் கொண்ட செல்போன்களை பயன்படுத்துபவர்களும் அதிக அளவில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த வகையான பட்டன் போன்களைப் பயன்படுத்தும் மக்கள் UPI போன்ற Online Payment Method-களை பலரால் பயன்படுத்த முடிவதில்லை. எனவே கீபேட் செல்போன்களை பயன்படுத்துபவர்களும் இந்த UPI பயன்பாட்டை உபயோகிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இந்த வகையான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் UPI- 123 Pay என்ற சேவையை தொடங்கி வைத்தார். அதுமட்டுமின்றி இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்கள் சாதாரண கீபேட் செல்போன்களை மட்டுமே பயன்படுத்திவருகின்றனர்.

எனவே அவர்களும் டிஜிட்டல் நவீனமயத்தில் Online Payment Methed-களில் பங்கேற்கும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது என Reserve Bank of India ஆளுநர் Shaktikanta Das கூறினார்.

இந்த சேவையை சாதாரண போன் வைத்திருக்கும் பொதுமக்கள் பயன்படுத்த வங்கி கணக்குடன் தங்களது செல்போன் எண்ணை இணைக்க வேண்டும். அதன் பின் இந்த செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும், பின்பு டெபிட் கார்டு எண்ணை உள்ளீடு செய்யவும், அதன் பிறகு யுபிஐ பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்க வேண்டும். அதன்பிறகு நாம் பரிவர்த்தனை செய்யலாம்.

UPI 123 Pay

UPI- 123 Pay சேவையில் பணம் அனுப்பும் முறைகள் (UPI-123 Pay Remittance Methods)

  • கீபேட் போன்களுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் பணம் அனுப்பலாம்.
  • IVR- Interactive Voice Call எண்ணுக்கு கால் செய்து அதில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவருடைய வங்கி எண் போன்ற தகவல்களை பதிவு செய்தும் பணம் அனுப்பலாம்.
  • RBI கொடுத்திருக்கும் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தும் பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த UPI- 123 Pay சேவையின் பணம் அனுப்புவது மட்டுமின்றி கேஸ் பில், மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றையும் செய்யலாம். வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம், ஸ்மார்ட்போன்களில் Scan & Pay செய்யப்படும் இடங்களிலும் கூட இந்த சேவை மூலம் Scan செய்து பரிவர்த்தனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி குறித்த விவரங்களை விரிவாக தெரிந்துகொள்ள விரும்பினால் பயனர்கள் www.digisaathi.info என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடலாம். டிஜிட்டல் பணம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு 14431 மற்றும் 1800 891 3333 என்ற எண்ணை அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular