Homeசெய்திகள்அமெரிக்கா செல்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..!

அமெரிக்கா செல்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவிலிருந்து பலர் தொழில் காரணமாகவும் வேறு சில காரணங்களால் பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அதிலும் அதிக அளவிலான மக்கள் செல்லும் இடங்களில் முக்கிய இடத்தை பிடிப்பது தான் அமெரிக்கா. இங்கு மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் அமெரிக்காவிற்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தான் தற்போது இவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி ஆமெரிக்கா விசா கட்டணத்தை பலமடங்கு உணர்த்தியுள்ளது (America Visa Price Increase). இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கட்டணத்தில் இருந்து 69.5 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு அமெரிக்க அரசுக்கு கணிசமான வருமானத்தைத் தரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கட்டண உயர்வு மட்டுமல்ல, அடுத்த ஆண்டு முதல் H-1B விசாவுக்கான பதிவுக் கட்டணம் 10 அமெரிக்க டாலர் என்பதில் இருந்து 215 அமெரிக்க டாலராக உயர்த்தப்படும். இந்த விசா கட்டண உயர்வு (USA Visa Price Increased) ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் வெளிநாட்டினரை அமெரிக்க நிறுவனங்களில் பணியமர்த்தும் நடவடிக்கையான எச். 1 பி விசா படிவ கட்டணம் (USA visa cost) 38,000-மாக இருந்தது. அனால் தற்போது இது 64,000-மாக மாறியுள்ளது. முதலீட்டாளர்களுக்கான இபி 5 விசா கட்டணம் 3 லட்சத்தில் இருந்து 9 லட்சமாகவும் மற்றும் எல்.1 விசா கட்டணம் 38,000-த்தில் இருந்து 1.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பல மக்களை அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. மேலும் இவை அனைத்தும் வருகின்ற ஏப்ரல் 1 அன்று அமலுக்கு வரவுள்ளது.

America Visa Price Increase
இதையும் படியுங்கள்: தோனியின் பல வருட சாதனையை முறியடித்தார் விராட் கோலி..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular