Homeதொழில்நுட்பம்செல்போன் தொலைந்து விட்டதா? ஈஸியா கண்டுபிடிக்கலாம் IMEI நம்பர் இருந்தால்..!

செல்போன் தொலைந்து விட்டதா? ஈஸியா கண்டுபிடிக்கலாம் IMEI நம்பர் இருந்தால்..!

ஒவ்வொரு போனிலும் இருக்க கூடியது தான் IMEI நம்பர். இந்த ஐஎம்இஐ எண் என்பது 15 இலக்க நம்பர் கொண்ட, போனின் சர்வதேச குறியீட்டு எண் ஆகும். நமது Mobile தொலைந்து போனால் அதனை கண்டுபிடிக்க போனின் IMEI தெரிய வேண்டும். அதனை வைத்து நமது போன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியும் அதனால் இந்த நம்பர் மிகவும் முக்கியமானது ஆகும்.

IMEI என்றால் என்ன? What is IMEI Number in Tamil

International Mobile Equipment Identity (IMEI). 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தான் IMEI Number முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. போலியான தயாரிப்புகளில் இந்த நம்பர் தவறாக இருக்கும். IMEI -ல் இருக்கும் 15 இலக்க நம்பரானது செல்போன் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது மற்றும் எந்த நெட்வொர்க்கில் தற்போது இணைந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க உதவும் எண் ஆகும். இதன் மூலம் Phone இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது மட்டுமில்லாமல் முடக்கவும் முடியும்.

IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி? How to Find IMEI Number in Tamil

இந்த ஐஎம்இஐ எண்ணானது செல்பாேன் பேட்டரியின் உள்பக்கத்தில் எழுதி இருக்கும் மற்றும் பழைய மாடல் போனாக இருந்தால் சிம் போடும் இடத்தில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். மொபைல் போனில் *#06# டைப் செய்வதன் மூலம் நாம் இந்த IMEI எண்ணை தெரிந்து கொள்ளலாம். Android மற்றும் IOS மொபைல்களில் Settings மூலம் நீங்கள் IMEI பார்க்கலாம். Android போனில் Settings>About Phone செல்வதன் மூலமும், iOS மொபைலில் Settings>General>About செல்வதன் மூலம் ஐஎம்இஐ எண்ணை பார்க்கலாம்.

Phone IMEI Number

மொபைல் போன் காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ கண்டுபிடிக்க காவல்துறையிடம் புகார் தெரிவிக்க வேண்டும். புகாரில் போனின் IMEI Number -ஐயும் எழுதி கொடுக்க வேண்டும். அதன் பிறகு போலிசார் Crime Branch பிரிவில் புகாரை பதிவு செய்து மொபைல் போனின் ஐஎம்இஐ நம்பரை Track செய்து போனை கண்டுபிடிப்பார்கள்.

தொலைந்த மொபைலை பிளாக் செய்யலாம்

திருட்டு போன் Mobile Phone -ஐ கண்டறிவதற்காக மத்திய அரசின் அதிகாரபூர்வ ceir.gov.in இணையதள பக்கத்திற்கு சென்று IMEI எண்ணை பதிவிடுவதன் மூலம் போனை பிளாக் செய்யலாம்.

Step -1

How to Find Phone

மத்திய அரசின் இணையதளத்திற்கு சென்று Block Stolen/Lost Mobile என்பதை Click செய்யவும்.

Step -2

Track My Phone

அதன் பிறகு உங்கள் பெயர், புதிய மொபைல் எண், பழைய மொபைல் எண், ஐஎம்இஐ நம்பர், மொபைல் கம்பெனின் பெயர், மொபைல் மாடல் போன்றவற்றை பதிவிடவும்.

Step -3

IMEI Tracker

மொபைல் தொலைந்த இடம், நேரம், நாள், காவல்துறையில் செய்த புகார் பதிவு எண் போன்றவற்றை பதிவு செய்யவும்.

Step -4

IMEI Number Check

உங்களை பற்றிய விவரங்களை பதிவிடவும். உங்கள் பெயர், அடையாள ஆவணம், முகவரி போன்றவற்றை பதிவிட்ட பிறகு Submit என்பதை Click செய்யவும்.

இதன் மூலம் திருட்டு போன அல்லது தொலைந்து போன மொபைலை பிளாக் செய்யலாம். இந்தி பதிவு செய்த பிறகு உங்களுக்கு ஒரு Request Number கொடுக்கப்படும் அதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular