Homeஆன்மிகம்Vastu Shastra: வீடு கட்ட போறீங்களா அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!

Vastu Shastra: வீடு கட்ட போறீங்களா அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!

Vastu Shastra பற்றி இப்பதிவில் பார்க்க உள்ளோம். அதற்கு முன்பு வாஸ்து சாஸ்திரம் குறித்த ஒரு முன்னுரையை பார்க்கலாம். புதிய வீடு கட்டதொடங்குவது என்றால் பலருக்கு நினைவில் வருவது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து பார்க்காமல் யாரும் வீடு கட்டுவதே இல்லை. இவற்றை பாரம்பரியமாக நாம் கடைபிடித்து வருகிறோம். இவற்றை கடவுள் நம்பிக்கை என்று பலர் கூறுவார்கள், சிலர் மூட நம்பிக்கை என்று கூட சிலர் கூறுவார்கள். ஆனால் நம் முன்னோர்கள் எந்த ஒரு விசயத்தையும் காரணம் இல்லாமல் கடைப்பிடிக்கவில்லை. அனைத்து செயல்களுக்கு பின்னும் அறிவியல் காரணங்கள் இருக்கதான் செய்கிறது. அதுபோல தான் இந்த வாஸ்து சாஸ்திரமும் அறிவியல் காரணங்களுடன் தான் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. எனவே அதுகுறித்த தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra)

இயற்கை ஆற்றல்கள் மற்றும் கோள்கள் போன்ற இன்னும் பல ஆற்றல்களின் ஐந்து வகையான கூறுகளை சமநிலைப்படுத்தும் திசை அறிவியல் தான் வாஸ்து சாஸ்திரம் ஆகும். மேலும் வருடம் முழுவதும் மாறும் வானிலை, கலை மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து சிறந்த வழிகாட்டுதலை தருவது தான் வாஸ்து சாஸ்திரம்.

இந்த முறையை சரியாக பின்பற்றி வீடுகளை கட்டினால் வீட்டில் மகிழ்ச்சி மேம்படும் மற்றும் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கைகளும் மக்களிடையே உள்ளது. மேலும் வாஸ்து பார்த்து வீடு கட்டுவதால் நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை நடக்கும், வீட்டில் மகிழ்ச்சி தங்கும் என்பது வழிவழியான தொடரும் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் வாஸ்து சாஸ்திரம் பற்றி கூற வேண்டுமானால் வாஸ்து என்பது வாழும் வீட்டை குறிக்கிறது மற்றும் சாஸ்திரம் என்பது முன்னோர்கள் மற்றும் எல்லாம் அறிந்தவர்கள் கூறும் போதனைகளை குறிக்கிறது. இந்த வாஸ்து சாஸ்திரம் ஒரு பாரம்பரிய மற்றும் பண்டைய அறிவியல் முறை ஆகும். இது பலருக்கு வீடு கட்டுதல் மற்றும் கட்டிய வீட்டை மாற்றியமைத்தல் போன்ற செயல்களில் பயன்படுத்தப்படுகிறது.

வீட்டிற்கான வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra for Home)

வீடு கட்டும் போது வாஸ்து சாஸ்திரத்தின் (Veedu Vastu Shastra in Tamil) படி வீடானது சதுரம் அல்லது செவ்வக வடிவம் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் வீட்டில் உள்ள அறைகள் அனைத்தும் மிகவும் சுத்தமாகவும் காற்றோட்டத்துடனும் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி தங்கள் வீட்டினை எப்போது தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் உள்ள அறைகளின் மூலைகளும் இருண்டு இருக்காமல் பிரகாசமாக இருக்க வேண்டும்.

மேலும் வீட்டின் மையமானது சரியாக இருக்க வேண்டும். இது தான் மிகவும் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள கதவுகளானது உள்ளே திறக்கும்படி அமைந்திருக்க வேண்டும். வீட்டில் உடைந்த பொருட்கள் இருந்தால் அதனை பயன்படுத்த கூடாது அப்புறப்படுத்திவிட வேண்டும்.

படுக்கை அறைக்கான வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra for Bedroom)

Vastu Shastra for Bedroom

வாஸ்து சாஸ்திர முறைகள் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரிய முறையாக உள்ளது. இந்த பாரம்பரிய விதிகளின்படி நாம் அனைவரும் தூங்குவதற்கு ஏற்ற திசை என்றால் அது தெற்கு திசை தான். அதாவது, நாம் தூங்கும்போது தலை பகுதியானது தெற்கு திசை நோக்கியும் கால்பகுதியானது வடக்கு திசையை நோக்கியும் இருக்க வேண்டும்.

வாஸ்து சாஸ்திர முறைகளின் படி வீட்டில் உள்ள படுக்கையைறையை தென்மேற்கு மூலையில் அமைப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி மேலே கூறியவாறு நாம் தூங்கும்போது தலை பகுதி தெற்கு அல்லது கிழக்கு திசை நோக்கியவாறும், கால்கள் வடக்கு அல்லது மேற்கு திசையை நோக்கியவாறும் இருப்பது மிகவும் சிறந்தது.

படிக்கும் அறைக்கான வாஸ்து சாஸ்த்திரம் (Vastu Shastra for Study Room)

Vastu Shastra for Study Room

வீட்டில் படிக்கும் அறையை மேற்குதிசையில் அமைக்க வேண்டும். மேலும் அந்த அறையில் வாஸ்து சாஸ்திரப் படி நாற்காலியை கிழக்கு நோக்கி போட வேண்டும். அப்படி இல்லை என்றால் வடக்கு நோக்கியும் நாற்காலியைப் போட்டு படிக்கலாம் இதுவும் நல்ல பயனை தரும். மேலும் படிக்கும் அறையின் வண்ணம் மஞ்சள் நிறத்தில் இருப்பது சிறப்பாக இருக்கும். மேலும் படிக்கும் நாற்காலியை நாம் சுவரை ஒட்டிப் போட வேண்டும்.

சமையல் அறைக்கான வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra for Kitchen)

Vastu Shastra for Kitchen

வீட்டின் முக்கியமான பகுதி என்றால் அது சமையலறை தான். எனவே சமையலறையை பொருத்த வரை வாஸ்து சாஸ்திரத்தை கடைப்பிடிக்க வேண்டும். சாஸ்திரப்படி, வீட்டின் தென்கிழக்கு திசையில் தான் சமையல் அறை அமைய வேண்டும். ஏனெனில் தென்கிழக்கு திசை என்பது தான் அக்னிக்கு உரிய திசையாக கருதப்படுகிறது. எனவே அக்னி மூலை என்று அழைக்கப்படும் தென்கிழக்கு திசையில் தான் சமையல் அறையை அமைக்க வேண்டும்.

இந்த திசையில் சமையல் அறை கட்ட இயலவில்லை எனில் அதற்கு மாற்றாக வடமேற்கு திசையில் சமையல் அறையை கட்டலாம். முக்கியமாக வீட்டின் வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் சமையல் அறை கட்டப்படாமல் இருப்பது மிகவும் நன்று.

கிட்சனில் அமைக்கும் மற்ற உபகரணங்களை எல்லாம் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

கிட்சம் ஸ்டவ்தென்மேற்கு மூலை
கிட்சம் சிங்க்வடகிழக்கு திசை
பிரிட்ஜ்தென்மேற்கு திசை
தண்ணீர் குடம் மற்றும் பியூரிஃபையர்வடகிழக்கு திசை
மின்சாதன பொருட்கள்தென்கிழக்கு மூலை
உணவுகள்அடுப்பிற்கு வலது புறம்
மற்ற மளிகை பொருட்கள்மேற்கு அல்லது தெற்கு சுவர்

சமையலறையின் நிறங்கள்

  • வாஸ்து சாஸ்திர முறைகளின் படி நம் வீட்டில் உள்ள சமையல் அறையின் நிறமானது அதிகபட்சம் வெள்ளை நிறத்தில் இருப்பது மிகவும் நல்லது. இதனால் சமையலறை தூய்மையாக இருக்கும். இதனால் வீட்டில் செல்வம் நிலைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
  • வீட்டின் சமையலறையானது மஞ்சள் நிறத்தில் இருக்கலாம். அப்படி இருந்தால் மகிழ்ச்சி மற்றும் நேர்மறை ஆற்றல்கள் அதிக அளவில் வீட்டில் நிறைந்திருக்கும்.
  • மேலும் வெளிர் நிறங்களில் இருந்தால் அன்பு மற்றும் குடும்பத்தின் ஒற்றுமை நிறைந்திருக்கும். அதுமட்டுமின்றி இளம் பழுப்பு நிறங்களில் இருந்தால் நிலையான செல்வம் இருக்கும்.
  • குறிப்பாக சமையல் அறைக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்கள் மிகவும் ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் சமையலறையில் அடர் நிறங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.

வீட்டில் உள்ள லாக்கருக்கான வாஸ்து திசை (Vastu Direction for Locker at Home)

Vastu Direction for Locker at Home
  • லாக்கரை தெற்கு திசையில் வைப்பது மிகவும் நல்லது. மேலும் அதனை திறக்கும் போது வடக்கு பார்த்து திறக்க வேண்டும். இதுபோல் வைத்தால் பண இழப்பு ஏற்படாது என்பது ஒரு நம்பிக்கை.
  • மேலும் லாக்கரை தென்மேற்கு திசையில் வைக்கலாம். அதுமட்டுமின்றி மேற்கு திசையில் வைப்பதும் மிகவும் மங்களகரமாக இருக்கும்.
  • லாக்கரின் மேல் எந்த ஒரு கணமான பொருட்களையும் வைக்க கூடாது. லாக்கரின் மீது கணமான பொருட்களை வைத்தால் அதேபோல் நம் தலையின் மீதும் சுமை இருந்துக்கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை எனவே அதை தவிர்க்கவும்.
  • தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு மூலைகளில் லாக்கரை வைக்க கூடாது. இவ்வாறு செய்தால் பணம் வீட்டில் தங்காது என்று ஒரு நம்பிக்கை உள்ளது. எனவே இந்த திசைகளில் மட்டும் லாக்கரை வைக்ககூடாது.
  • லாக்கரின் உள்ளே எப்போதும் கண்ணாடி வைத்திருப்பது மிகவும் நல்லது. எனவே இதனை நீங்கள் விரும்பினால் கடைப்பிடிக்கலாம்.

தோட்டத்திற்கான வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra for Garden)

Vastu Shastra for Garden
  • வீட்டில் தோட்டம் அமைப்பது மிகவும் நல்ல செயலாகும். இது வீட்டினை அழகுபடுத்துவதோடு நல்ல புத்துணர்ச்சியையும் தருகிறது. எனவே நாம் அனைவரும் வீட்டில் தோட்டம் அமைப்பது நல்லது.
  • நாம் அமைக்கும் தோட்டத்தை வாஸ்து சாஸ்திரம் படி அமைத்தால் அது அதிர்ஷ்டத்தைத் தேடி தரும் என்று ஒரு வழக்கம் உள்ளது. மேலும் இந்த வாஸ்துக்காக வளர்க்கப்படும் தாவரங்கள் நேர்மறையான எண்ணங்களை பரப்புகிறது. இந்த தாவரங்களில் முதல் மற்றும் முக்கிய இடத்தில் உள்ளது துளசி செடி தான்.
  • இந்த துளசி செடியை நம் வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வைத்து வளர்க்கலாம். ஆனால் தோட்டத்தின் எல்லைகளில் தாவரங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
  • வாஸ்து சாஸ்திரங்களின் படி மாமரம், வேப்பமரம் அல்லது வாழை மரம் போன்ற மரங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் தோட்டத்தின் உள்ள சுவருடன் வைத்து வளர்க்கலாம்.
  • இது போன்ற பெரிய மரங்கள் வளர்ப்பதால் இவை தோட்டத்தின் முன் பகுதியை குளிர்விப்பதோடு நேர்மறையான எண்ணங்களை வீட்டிற்கு வழங்குகின்றன. மேலும் எப்போதும் தோட்டத்தின் வடகிழக்கு பகுதியை எந்த செடியும் இல்லாமல் விடவேண்டும்.

குளியலறைக்கான வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra for Bathroom)

Vastu Shastra for Bathroom
  • வாஸ்து சாஸ்திரத்தின் படி குளியலறையானது வீட்டின் வடமேற்கு பகுதியில் இருக்க வேண்டும். மேலும் குளியலறையில் கண்டிப்பாக ஜன்னல் இருக்க வேண்டும். இந்த ஜன்னல் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையினை நோக்கி இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி கழிப்பறை கட்டும்போது தரைமட்டத்தில் இருந்து 2 அடி உயரத்தில் கட்ட வேண்டும்.
  • குளியலறையில் வைக்கப்படும் கண்ணாடிகளுக்கு வடக்கு அல்லது கிழக்கு திசைகள் சரியானதாக இருக்கும். இதனால் நேர்மறையான எண்ணங்கள் பரவும் என்று நம்பப்படுகிறது. மேலும் குளியலறைகளுக்கு பிரகாசமான வண்ணங்களை கொடுப்பது மிகவும் நல்லது.

பீரோ வைக்கும் இடம் (Vastu for Bero)

Vastu for Bero
  • நாம் அனைவரும் நம்மிடம் வரும் வரவான பணத்தை பீரோவில் தான் வைக்கிறோம். எனவே பணம் தடைபடாமல் கிடைக்கவும், பணவரவு அதிகரிக்கவும் வாஸ்து சாஸ்திர முறைப்படி பீரோவை வைக்க வேண்டும்.
  • பீரோவை எப்போதும் வடக்கு திசை அல்லது கிழக்கு திசை பார்த்துதான் வைக்க வேண்டும். இதுபோல வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் பீரோவை வைத்தால் நகை மற்றும் பணம் ஆகியவற்றை வைக்கலாம். இந்த பகுதியில கஜானா வைக்கலாம். திரும்ப திரும்ப பணம் வரும்.

இப்பதிவில் வீடு கட்டும் போது பயன்படும் வாஸ்து சாஸ்திரம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: Manaiyadi Sasthiram 2024: வளம் தர மகிழ்ச்சி பெருகும் மனையடி சாஸ்திரம் 2024..!

வாஸ்து சாஸ்திரம் – FAQ

1. படுக்கை அறையை எந்த திசையில் வைக்கலாம்?

வீட்டில் உள்ள படுக்கையைறையை தென்மேற்கு மூலையில் அமைப்பது மிகவும் சிறப்பாக இருக்கும்.

2. பீரோ எந்த இடத்தில் வைக்கலாம்?

பீரோவை எப்போதும் வடக்கு திசை அல்லது கிழக்கு திசை பார்த்துதான் வைக்க வேண்டும்.

3. லாக்கர் எந்த திசையில் வைக்கலாம்?

லாக்கரை தெற்கு திசையில் வைப்பது மிகவும் நல்லது.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular