Homeஆன்மிகம்Sri Krishna Jayanthi: கண்ணான கண்ணனுக்கு பிறந்தநாள்..

Sri Krishna Jayanthi: கண்ணான கண்ணனுக்கு பிறந்தநாள்..

பெருமாளின் பத்து அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த நாள் தான் Sri Krishna Jayanthi என்று அழைக்கப்படுகிறது. அரக்கனான கம்ச மகாராஜனை அழிப்பதற்காக பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் எடுக்கிறார். அவ்வாறு குழந்தையாக பிறக்கும் கண்ணனின் குறும்புகள் அழகாக கூறும் தினம் தான் கிருஷ்ண ஜெயந்தி ஆகும். இது கோகுலாஷ்டமி எனவும் கூறப்படுகிறது.

மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான பெருமாள் மக்களை துன்புறுத்தும் அரக்கர்களை அழிப்பதற்காக பத்து அவதாரங்கள் எடுகிறார். இந்த பத்து அவதாரங்களும் மக்களுக்கு நல்வழிகாட்டும் போதனைகள் அனைவருக்கும் தருகிறது. இந்த பத்து அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம் ஆன கண்ணன் அவதாரம் அனைவருக்கும் பிடித்த அவதாரம் ஆகும்.

சிறு குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை விரும்பும் அழகான குறும்புக்கார கண்ணனை பிடித்தவர் யார் இருப்பார்கள். இந்த குறும்புக்கார கண்ணன் பிறந்த நாளை தான் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (Sri Krishna Jayanthi in Tamil) என்று கூறுகின்றோம். கிருஷ்ண ஜெயந்தி அன்றைய தினம் அனைவர் வீடுகளிலும் என்ன செய்வார்கள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி பற்றிய வரலாற்றை பதிவிட்டுள்ளோம்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வரலாறு (Sri Krishna Jayanthi History)

மகா விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் தான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதாரம். இந்த அவதாரமும் துவார யுகத்தில் நடைபெற்றது ஆகும். ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் எடுப்பதற்கான முக்கிய நோக்கமாக கருதப்படுவது கம்ச ராஜன் அழிப்பது ஆகும். கம்சன் மக்களை துன்புறுத்தி வந்தான் அவன் அழிப்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் கம்சனின் சகோதரி தேவகிக்கும், வாசுதேவருக்கு எட்டாவது மகனாக கிருஷ்ணன் பிறந்தார். இந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi) என அழைக்கப்படுகிறது.

தங்கை தேவகிக்கும் வாசுதேவருக்கும் திருமணம் முடிந்து ஊர்வலமாக அழைத்து செய்து கொண்டிருந்தான் கம்சன். அப்போது ‘உன் தங்கைக்கு பிறக்ககும் எட்டாவது ஆண் குழந்தையால் தான் உன் உயிர் போகும்’ என்று ஒரு அசரீரி ஒலித்தது. எனவே கம்சன் தேவகி மற்றும் வாசுதேவரை சிரையில் அடைத்தான்.

தேவகிக்கு பிறந்த அனைத்து குழந்தைகளையும் கம்சன் கொன்றான். ஒரு நாள் தேவகி மற்றும் வாசுதேவன் ஆகியோருக்கு எட்டாவது மகனாக ஸ்ரீ கிருஷ்ணன் சிறைச்சாலையில் பிறந்தார் (Krishna Birthday Date) அன்றைய தினமே கோகுலாஷ்டமி ஆகும். கிருஷ்ணர் பெருமாளின் அவதாரம் என்பதால் அவர் சுய உருவம் எடுத்து உங்களின் முன் ஜன்ம பலன் காரணமாக நான் உங்கள் மகனாக பிறந்தேன் என்னை கோகுலத்தில் உள்ள நந்தகோபர் இடம் கொடுத்துவிட்டு அவருக்கு பிறந்த பெண் குழந்தையை இங்கு கொண்டு வந்து விடுங்கள் என கூறி மறைந்தார் பெருமாள். வாசுதேவர் கிருஷ்ணரை கோகுலத்தில் உள்ள நந்தகோபால் இடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக பெருமாள் சிறை காவலர்கள் அனைவரையும் மயக்கமடைய செய்தார்.

கோகுலத்தில் கண்ணனின் குரும்பு

அதன் பிறகு அங்கிருந்து கிருஷ்ணரை வசுதேவர் கோகுலத்தில் உள்ள அவர் நண்பர் நந்தகோபர் இடம் ஒப்படைத்தார். மீண்டும் வாசுதேவர் சிறைக்கு வரும்போது நந்தகோபாலர் இடம் இருந்து அவரின் பெண் குழந்தையை பெற்று கொண்டு வந்தார். மறுநாள் சிறைச்சாலைக்கு வந்த கம்சன் தேவகியின் எட்டாவது குழந்தை பெண் குழந்தைதான் என எண்ணி கொள்ள முயற்சி செய்தான். அப்போது அந்த பெண் குழந்தை துர்கா தேவி ஆக மாறி உன்னை கொல்ல பிறந்த குழந்தை வேறொரு இடத்தில் பத்திரமாக இருக்கிறது என்று கூறி மறைந்தார் தேவி.

கோகுலத்தில் யசோதை தான் கிருஷ்ணன் வளர்த்தாள். அங்கு அவர் மாடு மேய்க்கும் குறும்புக்கார கண்ணன் வாழ்ந்தார். நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணை (Butter) திருடுவது, பெண்களின் ஆடையை திருடுவது போன்ற குறும்பு தனங்களை செய்தார் கண்ணன். இருந்தாலும் கண்ணனை விரும்பாதவர் யாரும் இருக்க முடியாது.

வளர்ந்த பிறகு அவரின் மாமாவான கம்சனை கொண்ரு தாய் தேவகி மற்றும் தந்தை வாசுதேவரை விடுவித்தார். அதன் பிறகு கிருஷ்ணன் துவாரகையில் ஆட்சி செய்தார். கௌரவர்களை அழிப்பதற்காக பாண்டவர்களுக்கு உருதுணையாக இருந்தார் கிருஷ்ணன்.

அந்த பாரத உத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தார் கண்ணன் எனவே அவர் பார்த்தசாரதி என அழைக்கப்படுகிறார். இநத போரின் போது அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணனாக பெருமாள் சுயரூபம் காண்பித்து அறிவுரைகள் வழங்குவார். இதுவே பகவத் கீதை ஆகும். அதன் பிறகு வேடன் ஒருவன் எய்த அம்பு கிருஷ்ணரின் காலில் பட்டு அவர் மறைந்தார் அதனுடன் கிருஷ்ண அவதாரம் முடிவடைந்து என இதிகாசங்கள் கூறுகின்றன.

Sri Krishna Jayanthi
மேலும் படிக்க: Perumal Avatharam: திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய சிறப்பு தகவல்கள்..!

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வழிபடும் முறைகள்

  • கிருஷ்ணன் பிறந்த நாளான ஆவணி மாதத்தில் உள்ள அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நச்சத்திரத்தன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (Sri Krishna Jayanthi) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
  • அன்று அனைவரும் அவர்களின் வீட்டை சுத்தம் செய்து அலங்காரம் செய்வார்கள். அதன் பிறகு அரிசி மாவால் கோலம் இடுவார்கள்.
  • மேலும் கோலமாவை பயன்படுத்தி கிருஷ்ண பாதங்களை வீட்டு வாசல் முதல் பூஜை அறை வரை வைப்பார்கள். இவ்வாறு செய்தால் கிருஷ்ணன் அவரின் பிஞ்சு பாதத்தால் நம் வீட்டுக்குள் நடந்து வருவார் என கூறப்படுகிறது.
  • பூஜை அறையில் கிருஷ்ணர் படம் அல்லது சிலை வைத்து பூக்களால் அலங்கரிப்பார்கள் அந்த பூக்களில் துளசி இலை இருப்பது மிகவும் சிறந்தது ஆகும்.
  • மேலும் கிருஸ்ண ஜெயந்தி (Lord Krishna Jayanthi) அன்று கார சீடை, இனிப்பு சீடை, அவல், வெண்ணை, தயிர், லட்டு மற்றும் முறுக்கு போன்ற பொருட்களை பிரசாதமாக வைத்து பூஜை செய்வார்கள்.
  • கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi) அன்று குழந்தை கிருஷ்ணரை பற்றிய பஜனைகள் எல்லாம் வீடுகளிலும், பெருமாள் கோவில்களிலும் நடைபெரும்.
  • கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போடுவார்கள். அதே போல் பெண் குழந்தைகளுக்கு ராதை வேடம் போடுவார்கள்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi) அன்று இவ்வாறு கண்ணனை நினைத்து வீட்டை அலங்காரம் செய்து இணிப்புகளை வைத்து பூஜை செய்தால் ஸ்ரீ கிருஷ்ணன் நம் வீட்டுக்கு வந்து நம் அனைவருக்கும் அருள் தருவார் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Ramayanam Story in Tamil: அயோத்தியை ஆண்ட ராமர் பிறப்பு முதல் இராவணன் வதம் வரை..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular