Homeதொழில்நுட்பம்வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட் அனுப்ப பிடிக்காதவர்களுக்கு சூப்பர் அப்டேட்..!

வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட் அனுப்ப பிடிக்காதவர்களுக்கு சூப்பர் அப்டேட்..!

பிரபல சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான செயலி தான் வாட்ஸ் அப். இந்த வாட்ஸ்அப் தங்களது பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை தொடர்ந்துத அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் தான் சமீபத்தில் கூட வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள், ப்ரொஃபைல் பிக்சரை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத வகையில் ஒரு அம்சத்தை வெளியிட்டிருந்தது.

இது போன்ற பயனர்களுக்கு தேவையான பல வகையான அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் உள்ளது போல, வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் விருப்பமானவரை மென்ஷன் செய்யும் அம்சம் (Whatsapp New Update) விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அம்சங்கள் போல பல புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் தற்போது புதிய அம்சம் ஒன்று வெளியாகவுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நாம் வாட்ஸ் அப்பில் அனுப்பும் வாய்ஸ் உரையாடலை இனி டெக்ஸ்டாக மாற்றிக்கொள்ளலாம்.

Whatsapp Voice Note Update

ஆனால் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் உரையாடலை டெக்ஸ்ட் மற்றும் இந்த அம்சம் (Whatsapp New Voice Note Update) தற்போது சோதனையில் தான் இருந்து வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அப்டேட் முதலில் iOS பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிறகு Android பயனர்களுக்கும் பீட்டா வெர்சனாக கொண்டுவந்து சோதனை நடைபெற்று வருவதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. இதன் படி பார்த்தால் இந்த அம்சம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் படியுங்கள்: ருத்ராஜின் கேப்டன் பதவி குறித்து ரவிசந்திரன் அஸ்வினின் கருத்து..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular