Homeசெய்திகள்இந்தியா முழுவதும் முடங்கியது எக்ஸ் தளம்..! பயனர்கள் அதிர்ச்சி..!

இந்தியா முழுவதும் முடங்கியது எக்ஸ் தளம்..! பயனர்கள் அதிர்ச்சி..!

முன்பு டிவிட்டர் என அழைக்கப்பட்ட எக்ஸ் வலைதளம், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக உள்ளது. இந்த எக்ஸ் வலைதளத்தின் தற்போதைய உரிமையாளராக எலன் மஸ்க் உள்ளார். உலக பணக்காரர் வரிசையில் உள்ள எலன் மஸ்க் உரிமையாளராக உள்ளளார்.

சமீப காலமாக இந்த எக்ஸ் வலைதளம் பல தொழில்நுட்ப கோளாறு காரணமாக (x problem today)  பல நேரங்களில் முடங்கியுள்ளது. இதனால் இதன் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எக்ஸ் வலைதளம் இவ்வாறாக பல நேரங்களில் முடங்குவதால் பயனாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

தினமும் காலை எழுந்தவுடன் இன்று எக்ஸ் தளத்தில் என்ன சிக்கல் உள்ளதோ என்ற பயம் தான் பயனாளர்களுக்கு முதலில் வரும். அந்த வகையில் இன்று இந்தியா முழுவதும் ட்விட்டர் சேவை முழுவதுமாக முடங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி இணையதளங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகளின் நிகழ்நேரத்தின் செயலிழப்பை கண்காணிக்கும் தளமான Downdetector.in, சமூக ஊடகத் தளத்தின் உள்ள சிக்கல்களை அறிக்கையில் காட்டுகிறது.

அதன் படி இன்று இந்திய பயனர்களுக்கு இன்று எக்ஸ் தளம் ஏதோ தவறாகிவிட்டது, மீண்டும் முயற்சிக்கவும். எனக் காட்டப்படுகிறது. ஆனால் எக்ஸ் தளம்  (x valai thalam mudakkam) தனது தவறை தொடர்ந்து ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் என்ன காரணம் என்றும் இதுவரை தெரியவில்லை. இதனால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதனால் இன்று காலை 10.41 மணி முதல் எக்ஸ் வலைதளம் முடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் பயனர்கள் எக்ஸ் தளத்தில் (x technology issue)  சிக்கல்களை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

x problem today
மேலும் படிக்க: திடீரென முடங்கியது எக்ஸ் வலைதளம்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular