Homeசமையல் குறிப்புகள்எப்போதும் போல இல்லாம... இப்படி ஒரு முறை மசாலா அரைச்சு Fish Fry செஞ்சு பாருங்க......

எப்போதும் போல இல்லாம… இப்படி ஒரு முறை மசாலா அரைச்சு Fish Fry செஞ்சு பாருங்க… அடிக்கடி செய்வீங்க..!

நம்மில் பலரது வீட்டில் வாரத்தில் ஒரு நாளாவது மீன் சமைப்பது வழக்கமாக இருக்கும். இந்த மீனை வைத்து குழம்ப வறுவல் என்று பல விதமாக இந்த மீனை சமைத்து நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் மீன் வறுவல் என்றால் ஒரே முறையில் தான் செய்து இருப்போம். இது சுவையாக இருந்தாலும், ஒரே சுவையில் சாப்பிடுவது நமக்கு கண்டிப்பாக அலுத்து இருக்கும். எனவே நாம் இப்பதிவில் புதிய சுவையில் மசாலா அரைத்து சுவையான Green Masala Fish Fry செய்வது எப்படி என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

கிரீன் மசாலா மீன் வறுவல் செய்வது எப்படி (How to Make Green Masala Fish Fry in Tamil)

தேவையான பொருட்கள்

  • மீன் – அரை கிலோ
  • சின்ன வெங்காயம் – 12
  • பச்சை மிளகாய் – 7
  • கொத்தமல்லி – 1 கையளவு
  • புதினா – 1 கையளவு
  • இஞ்சி – 1 சிறிய துண்டு
  • பூண்டு – 6-8 பல்
  • மிளகு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • எலுமிச்சை – 1/2
  • சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

கிரீன் மசாலா மீன் வறுவல் செய்முறை (Green Masala Fish Fry Recipe in Tamil)

  • கிரீன் மசாலா மீன் வறுவல் செய்ய முதலில் அரை கிலோ மீனை எடுத்து நன்கு கழுவிக் வைத்துக்கொள்ளவும்.
  • இப்போது மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து அதனை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது நாம் அரைத்து வைத்துள்ள விழுதை மீனோடு சேர்க்கவும். அதோடு மேலே எலுமிச்சை சாறு, சில்லி ப்ளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, குறைந்தது 1 மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
  • மீன் நன்றாக ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் ஒரு நாண் ஸ்டிக் பேனை எடுத்து அதை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் நன்றாக சூடான பிறகு அதில் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக வைத்து மிதமான தீயில் பெரித்து எடுக்க வேண்டும்.
  • இதேப் போல அனைத்து மீன் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான க்ரீன் மசாலா மீன் வறுவல் தயார். இதன் சுவை நாம் எப்போதும் சமைக்கும் மீன் போல இல்லாமல் கூடுதல் சுவையுடன் அனைவருக்கும் பிடித்தாற்போல இருக்கும்.
Green Masala Fish Fry Recipe in Tamil

நாம் இப்பதிவில் எப்போது போல இல்லாமல் புதிய சுவையில் மசாலா அரைத்து க்ரீன் மசாலா மீன் வறுவல் செய்வது எப்படி (Green Masala Fish Fry Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.

எப்போதும் போல இல்லாம... இப்படி ஒரு முறை மசாலா அரைச்சு Fish Fry செஞ்சு பாருங்க... அடிக்கடி செய்வீங்க..!

நாம் இப்பதிவில் புதிய சுவையில் மசாலா அரைத்து சுவையான Green Masala Fish Fry செய்வது எப்படி என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

Type: Side Dish

Cuisine: India

Keywords: Green Masala Fish Fry, Green Masala Fish Fry Recipe

Recipe Yield: 2

Preparation Time: PT1H10M

Cooking Time: PT20M

Total Time: PT1H30M

Recipe Ingredients:

  • Fish – half kg
  • Onions – 12
  • Green Chillies – 7
  • Coriander – 1 handful
  • Mint – 1 handful
  • Ginger – 1 small piece
  • Garlic – 6-8 cloves
  • Pepper – 1/2 tsp
  • Cumin – 1/2 tsp
  • Lemon – 1/2
  • Chilli flakes – 1 tbsp
  • Curry leaves – 1 bunch
  • Salt – required quantity
  • Oil – required amount

Recipe Instructions: கிரீன் மசாலா மீன் வறுவல் செய்ய முதலில் அரை கிலோ மீனை எடுத்து நன்கு கழுவிக் வைத்துக்கொள்ளவும். இப்போது மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து அதனை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நாம் அரைத்து வைத்துள்ள விழுதை மீனோடு சேர்க்கவும். அதோடு மேலே எலுமிச்சை சாறு, சில்லி ப்ளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, குறைந்தது 1 மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும். மீன் நன்றாக ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் ஒரு நாண் ஸ்டிக் பேனை எடுத்து அதை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாக சூடான பிறகு அதில் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக வைத்து மிதமான தீயில் பெரித்து எடுக்க வேண்டும். இதேப் போல அனைத்து மீன் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான க்ரீன் மசாலா மீன் வறுவல் தயார். இதன் சுவை நாம் எப்போதும் சமைக்கும் மீன் போல இல்லாமல் கூடுதல் சுவையுடன் அனைவருக்கும் பிடித்தாற்போல இருக்கும்.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: இந்த வீக் எண்ட்ல… சிக்கன் மட்டன்கு பதிலா ஒரு முறை இப்படி Fish Biryani செஞ்சு பாருங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular