Homeவிளையாட்டுCanada Candidates Chess Series: தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர்..!

Canada Candidates Chess Series: தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர்..!

தமிழக வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் வென்று சாதனைகளை படைப்பது தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் தான் தற்போது FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

கனடாவில் FIDE கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டிகள் (2024 FIDE Candidates Chess Tournament) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் 17 வயதான குகேஷ் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் 2024 FIDE கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை (FIDE Candidates Chess Champion) வென்று அவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்த் இந்த பட்டத்தை வென்றுள்ளார். மேலும் அவருக்கு பிறகு இந்த பட்டத்தை வென்ற 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்துள்ளார்.

இந்தப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் (Gukesh) அமெரிக்காவின் நகமுரா எதிர்கொண்டு விளையாடினார். மேலும் இந்த ஆட்டம் டிராவில் முடிய இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் குகேஷ் 9 புள்ளிகள் பெற்று இருந்தார். நகமுரா 8.5 புள்ளிகள் பெற்று இருந்தார். இதன் முடிவில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் அவர் பெற்றார். அந்த போட்டியில் சீனாவில் டிங் லிரெனை குகேஷ் எதிர்க்கொள்ளவுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்றதன் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.

FIDE Candidates Chess Champion

இவருக்கு பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: 250 வது ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் முக்கிய வீரர்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular