Homeசமையல் குறிப்புகள்ரெஸ்டாரண்டில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலேயே சிக்கன் ரைஸ் செய்வது எப்படி?

ரெஸ்டாரண்டில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலேயே சிக்கன் ரைஸ் செய்வது எப்படி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு துரித உணவு தான் சிக்கன் பிரைடு ரைஸ். இந்த உணவு தற்போது உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் கிடைக்கிறது. சொல்லப்போனால் சிறிய தள்ளுவண்டி கடை முதல் பெரிய பெரிய ரெஸ்டாரண்டுகள் வரை அனைத்து கடைகளில் இந்த உணவு கிடைக்கிறது.

இது துரித உணவு என்பதால் இதனை அடிக்கடி உண்ணுதல் உடலுக்கு நல்லதல்ல. ஆனால் எப்போதாவது உண்ணலாம் என்று சிலர் கூறுவர். ஆனால் இதனை அடிக்கடி உண்ணுதல் உடலுக்கு மிகவும் தீங்கானது. எனினும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாக இந்த சிக்கன் ரைஸ் தான் உள்ளது. எனவே இதனை அடிக்கடி கடைகளில் வாங்கி உண்பதை விட நம் வீடுகளிலேயே செய்து உண்ணலாம். இதனால் உடலுக்கும் எந்த வித பிரச்சனையும் ஏற்படாது. இப்போது நாம் இப்பதிவில் கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் நம் வீட்டிலேயே சிக்கன் ரைஸ் செய்வது எப்படி (How To Make Hotel Chicken Rice in Tamil) என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

சிக்கன் ரைஸ் செய்வது எப்படி (How To Make Chicken Fried Rice in Tamil)

தேவையான பொருட்கள் (Chicken Rice Ingredients)

  • சாதம்- 1 கப்
  • பொரித்த சிக்கன்- 1/2 கப் (எலும்பில்லா சிக்கன் 65)
  • பெரிய வெங்காயம் – 1
  • முட்டை – 2
  • பச்சைமிளகாய் – 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் டீஸ்பூன்
  • தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்
  • சோயா சாஸ் – 1/2 ஸ்பூன்
  • மிளகு தூள் – சுவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவையான அளவு

சிக்கன் ரைஸ் செய்முறை (Chicken Rice Recipe in Tamil)

  • சிக்கன் ரைஸ் செய்வதற்கு முதலில் ஒரு அகலமான கடாயை எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது அதனை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.
  • அந்த எண்ணெய் நன்கு சூடான பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இப்போது அந்த வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் அதனோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  • இவை நன்கு வதங்கிய உடன் அடுப்பின் தீயை குறைத்து வைத்துக்கொள்ளவும். அதில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி 5 நிமிடங்கள் நன்றாக பெரிக்கவும்.
  • பின்னர் அதனுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பொரித்த சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். இந்த நேரத்தில் அதனுடன் டொமேடோ சாஸ் மற்றும் சோயா சாய் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறிவிடுங்கள்.
  • இப்போது உதிரி உதிரியாக வடித்து ஆற வைத்துள்ள ஒரு கப் சாதத்தை சேர்த்து கிளறவும். பின்னர் உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகு தூள் சேர்த்து கிளறி ஓரிரு நிமிடங்களில் இறக்கினால் ஹோட்டல் ஸ்டைலில் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் (Roadside Chicken Fried Rice Recipe in Tamil) தயார்.
Roadside Chicken Fried Rice Recipe in Tamil

நாம் இப்பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிக்கன் ரைஸ் செய்வது எப்படி (Chicken Rice Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.

ரெஸ்டாரண்டில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலேயே சிக்கன் ரைஸ் செய்வது எப்படி?

இப்பதிவில் கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் நம் வீட்டிலேயே சிக்கன் ரைஸ் செய்வது எப்படி என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

Type: Appetizer

Keywords: Chicken Fried Rice, Chicken Rice

Recipe Yield: 2

Preparation Time: PT10M

Cooking Time: PT20M

Total Time: PT30M

Recipe Ingredients:

  • Rice- 1 cup
  • Fried chicken- 1/2 cup (boneless chicken 65)
  • Big Onion – 1
  • Egg – 2
  • Green Chillies – 2
  • Ginger garlic paste – quarter teaspoon
  • Tomato sauce – 1 spoon
  • Soya sauce – 1/2 spoon
  • Pepper powder – as per taste
  • Oil – required amount

Recipe Instructions: சிக்கன் ரைஸ் செய்வதற்கு முதலில் ஒரு அகலமான கடாயை எடுத்துக்கொள்ளவும். இப்போது அதனை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். அந்த எண்ணெய் நன்கு சூடான பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது அந்த வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் அதனோடு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இவை நன்கு வதங்கிய உடன் அடுப்பின் தீயை குறைத்து வைத்துக்கொள்ளவும். அதில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி 5 நிமிடங்கள் நன்றாக பெரிக்கவும். பின்னர் அதனுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பொரித்த சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். இந்த நேரத்தில் அதனுடன் டொமேடோ சாஸ் மற்றும் சோயா சாய் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறிவிடுங்கள். இப்போது உதிரி உதிரியாக வடித்து ஆற வைத்துள்ள ஒரு கப் சாதத்தை சேர்த்து கிளறவும். பின்னர் உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகு தூள் சேர்த்து கிளறி ஓரிரு நிமிடங்களில் இறக்கினால் ஹோட்டல் ஸ்டைலில் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் (Roadside Chicken Fried Rice Recipe in Tamil) தயார்.

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: Chettinad Chicken Gravy Recipe: செம்மையான செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular