Homeசமையல் குறிப்புகள்ஜில் ஜில்னு சூப்பரான சாத்துக்குடி ஜூஸ்..! இந்த வெயிலுக்கு இப்படி செஞ்சு பாருங்க..!

ஜில் ஜில்னு சூப்பரான சாத்துக்குடி ஜூஸ்..! இந்த வெயிலுக்கு இப்படி செஞ்சு பாருங்க..!

கோடை காலத்தில் நம் உடல் அதிக அளவில் வெப்பமடையும். இதனால் பல விதமான உடல் உபாதைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வர அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுபோன்ற நேரங்களில் நாம் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நம் உடல் பிரச்சனைகள் எதும் ஏற்படாது. இந்த கோடையில் நம் உடலை ஆரோக்கியமாகவும், இந்த கோடையில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கவும் உதவும் ஒரு ஜூஸ் வகையை தான் நாம் இப்பதிவல் பார்க்கவுள்ளோம். அது நம்மில் பலருக்கும் பிடித்த சாத்துக்குடி ஜூஸ் தான். இதனை வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி (How to Make Sathukudi Juice in Tamil) என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

சாத்துக்குடி ஜூஸ் செய்வது எப்படி (How to Make Sathukudi Juice)

தேவையான பொருட்கள் (Sathukudi Juice Ingredients)

  • சாத்துக்குடி – 4
  • லெமன் – அரை பழம்
  • சர்க்கரை – சுவைக்கேற்ப
  • புதினா – 1 கைப்பிடி
  • தண்ணீர் – தேவையான அளவு
  • உப்பு – சிறிதளவு
  • ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு

சாத்துக்குடி ஜூஸ் செய்முறை (Sathukudi Juice Recipe in Tamil)

  • முதலில் நாம் எடுத்து வைத்துள்ள சாத்துக்குடி பழங்களை நன்றாக கையில் வைத்து அழுத்தவும். இப்படி செய்யும் போது இந்த பழத்தில் உள்ள தளவர்வாக மாறும்.
  • இப்போது பழத்தை இரண்டாக வெட்டி அதில் உள்ள ஜூஸை கொட்டைகளை நீக்கி விட்டு பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் புதினா இலைகளை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் பிழிந்து விதை நீக்கி வைத்துள்ள சாத்துக்குடி ஜூஸ் மற்றும் எலுமிச்சை ஜூஸ் இரண்டையும் சேர்க்கவும்.
  • பின்னர் அதோடு சுவைக்கு ஏற்ப சர்க்கரை மற்றும் வெட்டி வைத்துள்ள புதினா இலைகளையும் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த கலவையில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையில் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  • இந்த கலவையை ஒன்றாக சேரும்படி நன்கு கலக்கியதும், அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து சுமார் அரை மணி நேரம் குளிர்ச்சிப் படுத்தினால், அதன் பிலேவர்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, சூப்பரான சர்பத் தயாராகிவிடும். இப்போது தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகளை சேர்த்து பருகவும்.
Sathukudi Juice Seivathu Eppadi

நாம் இப்பதிவில் இந்த கோடையில் நம் உடல் வெப்பம் ஆவதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள உதவும் சாத்துக்குடி ஜூஸ் செய்வது எப்படி (Sathukudi Juice Seivathu Eppadi) என்பது குறித்து பார்த்துள்ளோம்.

ஜில் ஜில்னு சூப்பரான சாத்துக்குடி ஜூஸ்..! இந்த வெயிலுக்கு இப்படி செஞ்சு பாருங்க..!

இந்த கோடையில் நம் உடல் வெப்பம் ஆவதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள உதவும் சாத்துக்குடி ஜூஸ் செய்வது எப்படி என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

Type: Juice

Cuisine: Tamil Nadu

Keywords: Sathukudi Juice, Sathukudi Juice Recipe

Recipe Yield: 4

Preparation Time: PT10M

Cooking Time: PT10M

Total Time: PT20M

Recipe Ingredients:

  • Sathikudi – 4
  • Lemon – half a fruit
  • Sugar – as per taste
  • Mint – 1 handful
  • Water – required quantity
  • Salt – little
  • Ice cubes – as needed

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: Nellikai Mor Recipe: அடிக்கும் வெயிலுக்கு உடலுக்கு சத்து மிகுந்த நெல்லிக்காய் மோர்…
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular