Homeசமையல் குறிப்புகள்Sweet Pongal Recipe in Tamil..! ஈஸியா சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி..!

Sweet Pongal Recipe in Tamil..! ஈஸியா சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி..!

Sweet Pongal செய்வது எப்படி என்பது குறித்து இப்பதிவில் பார்க்கவுள்ளோம். அதற்கு முன்பு பொங்கல் பண்டிகை குறித்துப்பார்க்கலாம். தமிழகத்தில் வருடம் முழுவதும் பலவிதமாக பண்டிகைகள் கொண்டாடப்பட்டுதான் வருகிறது. எனினும் அனைத்து பண்டிகைகளையும் விட தமிழக மக்களால் அதிக அளவில் கொண்டாடப்படும் பண்டிகை தான் பொங்கல் திருநாள். இந்த பொங்கல் திருநாள் இப்பண்டிகை அறுவடை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் வருடம் முழுவதும் உழவர்களின் அறுவடைக்கு உதவும் சூரிய பகவானுக்கு நன்றி கூறும் விதமாக தான் இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த பொங்கல் பண்டிகையானது போகி பண்டிகையுடன் சேர்த்து மொத்தம் 4 நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் மற்றும் 3-ம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகையின் போது நாம் பல விதமான ஸ்வீட்ஸ் மற்றும் உணவுப்பொருட்கள் செய்வர். அந்த உணவுப் பொருட்களில் முக்கிய உணவு என்றால் அது பொங்கல் (Sweet Pongal) தான். பொங்கல் பலரும் விரும்பி உண்ணும் உணவாகவும் உள்ளது. அதிலும் சக்கரை பொங்கல் என்றால் செல்லவே தேவையில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

இந்த சக்கரை பொங்கல் பாரம்பரிய உணவாகவும் உள்ளது. கடவுளுக்கு படைப்பதற்கு கூட அதிக அளவில் சக்கரை பொங்கல் தான் தேர்வுசெய்யப்படுகிறது. இந்த பாரம்பரிய உணவு பலருக்கு நன்றாகவே செய்ய தெரியும் எனினும் சிலருக்கு அதனை எவ்வாறு செய்வது என்பதில் சில சந்தேகங்கள் இருக்கலாம். அதற்க்காக தான் நம் இனையதளத்தில் சுவையான சக்கரை பொங்கல் (Sakkarai Pongal Recipe) எளிய முறையில் எவ்வாறு செய்வது என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

Table of Contents

சக்கரை பொங்கல் செய்முறை (How To Cook Pongal Recipe)

தேவையான பொருட்கள்: Sweet Pongal Recipe Ingredients

பொருட்கள் அளவு
பச்சரிசி1 கப்
வெல்லம்1 கப்
பாசி பருப்பு1/4 கப்
நெய்1/4 கப்
முந்திரி15
திராட்சை15
ஏலக்காய்2
உப்பு1 பின்ச்
தண்ணீர்5 கப்

செய்முறை (Sweet Pongal in Pressure Cooker)

Step 1: பாசிபருப்பை வருத்தல்

Sweet Pongal

முதலில் கடாயில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து பாசிபருப்பை வறுக்கவும்.

Step 2: அரிசி மற்றும் பருப்பை வேகவைத்தல்

Chakkarai Pongal

இப்போது அரிசி மற்றும் பருப்பை சேர்த்து நன்றாக கழுவி பானையில் சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் தண்ணீரையும் சேர்த்து நன்கு வேகவிடவும்.

Step 3: வெல்லம் கரைத்தல்

Sweet Pongal Recipe

இந்த பொருட்கள் வேகும் நேரத்தில் நாம் வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். அதன் பிறகு அதனை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

Step 4: வெல்ல கரைசலை சேர்த்தல்

Sakkarai Pongal Recipe

சாதம் நன்கு வெந்தபிறகு சாதம் மற்றும் பருப்பை நன்கு மசித்து விடவும். இப்போது அடுப்பு தீ மிதமானதாக இருக்க வேண்டும். தற்போது இந்த கலவையில் வெல்லக்கரைசலை சேர்க்கவும். நன்கு கைவிடாமல் கிளரவும்.

Step 5: உலர் பழங்களை வறுத்தல்

Dry Fruit fry

இதன் பிறகு ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சை ஆகியவற்றினை பொன்னிறமாக வறுக்கவும்.

Step 6: நெய் சேர்த்து இறக்குதல்

Sakkarai Pongal

இந்த வறுத்த உலர்பலங்களை அரிசி மற்றும் வெல்லக்கலவையில் சேர்க்கவும். சிறிது சிறிதாக நெய் ஊற்றி கிளறவும். இறுதியாக 1 பின்ச் பச்சை கற்பூரம் சேர்த்து கிளறினால். சுவையான சக்கரை பொங்கல் தயார்.

இதையும் படியுங்கள்: முந்திரி பாதாம் கட்லி ஈஸியா செய்து அசத்துங்க..!

செய்முறை (Sweet Pongal in Pressure Cooker)

Step 1: பாசி பருப்பை வருத்தல்

முதலில் கடாயில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து பாசிபருப்பை வறுக்கவும்.

Step 2: அரிசி மற்றும் பருப்பை வேகவைத்தல்

Pongal Recepie

இப்போது அரிசி மற்றும் பருப்பை சேர்த்து நன்றாக கழுவி குக்கரில் சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் தண்ணீரையும் சேர்த்து 4 முதல் 5 விசில் வரை விடவும்.

Step 3: வெல்லம் கரைத்தல்

இந்த பொருட்கள் வேகும் நேரத்தில் நாம் வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். அதன் பிறகு அதனை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

Step 4: வெல்ல கரைசலை சேர்த்தல்

Pongal

5 விசில் வந்த பிறகு சாதம் மற்றும் பருப்பை நன்கு மசித்து விடவும். இப்போது அடுப்பு தீ மிதமானதாக இருக்க வேண்டும். தற்போது இந்த கலவையில் வெல்லக்கரைசலை சேர்க்கவும். நன்கு கைவிடாமல் கிளரவும்.

Step 5: உலர் பழங்களை வறுத்தல்

sweet pongal recipe

இதன் பிறகு ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சை ஆகியவற்றினை பொன்னிறமாக வறுக்கவும்.

Step 6: நெய் சேர்த்து இறக்குதல்

Tasty Pongal

இந்த வறுத்த உலர்பலங்களை அரிசி மற்றும் வெல்லக்கலவையில் சேர்க்கவும். சிறிது சிறிதாக நெய் ஊற்றி கிளறவும். இறுதியாக 1 பின்ச் பச்கை கற்பூரம் சேர்த்து கிளறினால். சுவையான சக்கரை பொங்கல் தயார்.

இதையும் படியுங்கள்: எளிமையான முறையில் பிளம் கேக் செய்வது எப்படி..?

இப்பதிவில் சக்கரை பொங்கல் எளிய முறையில் எவ்வாறு செய்வது என்பது பற்றி கூறியுள்ளோம் என்று நம்புகிறோம்.

Sweet Pongal Recipe in Tamil

எளிமையாக பொங்கல் (Sweet Pongal Recipe) செய்வது எப்படி என்பது குறித்த விளக்கம் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Cuisine: Tamil Nadu

Keywords: Sweet Pongal, Sakkarai Pongal Recipe

Recipe Yield: 5

Preparation Time: PT10M

Cooking Time: PT30M

Total Time: PT40M

Recipe Ingredients:

  • Rice 1 Cup
  • Jaggery 1 cup
  • Moong Dal 1/4 Cup
  • Ghee 1/4 cup
  • Cashews 15
  • Grapes 15
  • Cardamom 2
  • 1 Pinch of Salt
  • Water 5 Cup

Editor's Rating:
4.5

சக்கரை பொங்கல் – FAQ

1. பொங்கல் செய்ய வெல்லம் எந்த அளவில் எடுக்க வேண்டும்?

பொங்கல் செய்ய 1 கப் அரிசிக்கு 1 கப் வெல்லம் என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2. பொங்கல் நன்கு வேக எத்தனை விசில் வைக்க வேண்டும்?

பொங்கல் நன்கு வேகவைக்க 5 முதல் 6 விசில் விடலாம். இது அரிசிக்கு ஏற்றார்போல் மாறுபடும்.

3. 1 கப் அரிசிக்கு எத்தனை கப் தண்ணீர் விட வேண்டும்?

1 கப் அரிசிக்கு 5 கப் வரை தண்ணீர் சேர்க்கலாம்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular