Homeதொழில்நுட்பம்iQOO Z9 5G: பலரும் எதிர்பார்த்த அம்சங்களுடன் இந்தியாவில் புதிய மொபைல் அறிமுகம்..!

iQOO Z9 5G: பலரும் எதிர்பார்த்த அம்சங்களுடன் இந்தியாவில் புதிய மொபைல் அறிமுகம்..!

இந்தியாவில் தொடர்ந்து பல விதமான ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தான் வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது மற்றொரு ஸ்மார்ட் போன் (iQOO Z9 5G New Phone Launch in India) அறிமுகமாகியுள்ளது. இந்த போன் பலரும் எதிர்பார்த்த அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. iQOO Z9 5G போன்கள் தான் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் போன்களில் கொடுக்கப்படும் கேமரா போன்ற சில அம்சங்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர் என்று தான் கூறவேண்டும்.

இந்த நிறுவனமானது இந்த iQOO Z9 5G மாடல் ஸ்மார்ட் போன்களை இதற்கு முன்னர் அறிமுகமான Realme 12+ 5G , Samsung Galaxy F15 5G போன்ற போன்களுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. iQOO Z9 5G போன் இரண்டு விதமாக வெளியாகியுள்ளது. ஒரு மாடல் 8 GB RAM, 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகமாகியுள்ளது. இந்த மாடல் போனின் விலை (iQOO Z9 5G Phone Price) ₹19,999 ஆகும். மேலும் 8 GB RAM மற்றும் 256 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ₹21,999 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மொபைல் 6.6-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் 120Hz ரெப்ரெஷ் ரேட் , 1,800 nits பிரைட்னெஸ் மற்றும் 300Hz தொடு திறன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான OS-ல் வெளியாகியுள்ளது.

IQOO Z9 மாடல் ஸ்மார்ட்போன் 50MP சோனி IMX882 கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் போன்றவற்றை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது 5,000mAh பேட்டரியுடன் வெளியாகியுள்ளது. இந்த போன் (iQOO Z9 5G New Phone) சார்ஜிகிற்கு டைப்-சி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

iQOO Z9 5G New Phone  Price

இந்தியா முழுவதும் இந்த போன் இன்று தான் வெளியாகி உள்ளது. இந்த iQOO Z9 5G போனானது Amazon India மற்றும் iQOO ஆகிய ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது இரண்டு வண்ணங்களில் வெளியாகி உள்ளது. அது பிரஷ்டு கிரீன் மற்றும் கிராபீன் ப்ளூ ஆகும். இந்த iQOO Z9 5G போன் ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: Whatsapp New Update: ஒரு வருடத்திற்கு முன்பு உள்ள மெசேஜை கூட ஒரு நொடியில் பார்க்கலாம்..! அது எப்படி?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular