Homeசமையல் குறிப்புகள்Deepavali Special Sweet..! முந்திரி பாதாம் கட்லி ஈஸியா செய்து அசத்துங்க..!

Deepavali Special Sweet..! முந்திரி பாதாம் கட்லி ஈஸியா செய்து அசத்துங்க..!

தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசு, புத்தாடை மற்றும் பலகாரங்கள் தான். தீபாவளிக்கு செய்யும் பலகாரங்கள் என்றாலே அது தனிசிறப்பு காரணம் நம் வீட்டில் செய்வதால் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்படும். இந்த வருடம் வரும் தீபாவளிக்கு எப்பொழுதும் செய்யும் லட்டு, சீனி உருண்டை, அதிரசம், தேங்காய் பர்பி- க்கு மாற்றாக இந்த முறை முந்திரி பாதாம் கட்லி செய்து அசத்துங்க.

இதை தயார் செய்வதற்கு குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் இருந்தால் போதும். தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொண்டால் உடனடியாக செய்து முடித்துவிடலாம்.

தேவையான பொருட்கள்

  • முந்திரி – 200 கிராம்
  • பாதாம்-100 கிராம்
  • சர்க்கரை-300 கிராம்
  • ஏலக்காய்- 2
  • நெய் தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

செய்முறை

step1:

Kaju Katli Sweet

முந்திரி மற்றும் பாதாம் இரண்டையும் மிக்சி சாரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த முந்திரி மற்றும் பாதாம் தூளை ஒரு மாவு சல்லடை அல்லது வடிகட்டியை பயன்படுத்தி சலித்து வைத்துக் கொள்ளவும். ஏனென்றால் அப்போது தான் சிறு சிறு முந்திரி பாதாம் துண்டுகள் இல்லாமல் மாவு கிடைக்கும்.

step2:

Munthiri Badam katli

அடுத்தப்படியாக அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை எடுத்து அதில் எடுத்து வைத்துள்ள சர்க்கரை மற்றும் அதற்கு தேவையான தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும். உதாரணமாக நாம் இப்போது 300 கிராம் சர்க்கரை எடுத்துள்ளோம் அதற்கு 75 மி.லி தண்ணீர் ஊற்ற வேண்டும். நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

step3:

Cashew Katli

இதில் 2 ஏலக்காயை பொடி செய்து போட்டுக் கொள்ளவும். சர்க்கரை பாகு நன்கு கொதித்து ஒரு அளவு விரல்களில் ஒட்டும்படியாக இருந்தால் போதும். அதில் நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள முந்திரி பாதாம் மாவை இதில் சேர்த்து நன்கு கிளறவும். மாவு சேர்க்கும் போது அடுப்பு குறைந்த தீயில் இருக்க வேண்டும்.

step4

Cashew Katli

மாவு சேர்த்த பின் கைவிடாமல் மெதுவாக கிளற வேண்டும். அப்போதுதான் கட்டி விடாமல் மென்மையாக ஒரே அளவில் இருக்கும். இவ்வாறு கிளறும்போது தேவையான அளவு நெய் சேர்த்து கிளற வேண்டும். சிறது சிறிதாக நெய் சேர்த்து கடாயில் ஒட்டாமல் கிளற வேண்டும்.

step5

Patham Munthiri Katli Recipe in Tamil

கடாயில் மாவு ஒட்டாமல் திரண்டு வந்தவுடன் அதை எடுத்து நெய் தடவிய தட்டில் அல்லது பட்டர் பேப்பரில் போட்டு நன்கு கரண்டியால் சமமாக பரப்பவும். ஒரு அளவுக்கு சூடு ஆறியதும் அதன் மேல் சில்வர் பேப்பர் வைத்து கட்டையால் சமமாக சப்பாத்திக்கு தேய்பது போல் தேய்க்க வேண்டும்.

step6

Cashew Barfi

இப்போது ஒரு நெய் தடவிய கத்தியை வைத்து உங்களுக்கு விருப்பமான டைமணணட், சதுரம் போன்ற வடிவங்களில் வெட்டிக் கொள்ளலாம். தற்போது தீபாவளிக்கு சுவையான முந்திரி பாதாம் கட்லி ரெடி.

குறிப்பு: பாதாம் சேர்காமல் இதே செய்முறைகளை பயன்படுத்தி முந்திரி மட்டும் வைத்து முந்திரி கட்லி செய்யலாம்.

Cashew Badam Kaju Katli Recipe in Tamil

தீபாவளிக்கு செய்யும் பலகாரங்கள் என்றாலே அது தனிசிறப்பு காரணம் நம் வீட்டில் செய்வதால் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்படும். இந்த வருடம் வரும் தீபாவளிக்கு எப்பொழுதும் செய்யும் லட்டு, சீனி உருண்டை, அதிரசம், தேங்காய் பர்ஃபி க்கு மாற்றாக இந்த முறை முந்திரி பாதாம் கட்லி செய்து அசத்துங்க.

Type: Desserts

Cuisine: Indian

Keywords: Munthiri Paadam Katli in Tamil,

Preparation Time: PT15M

Cooking Time: PT30M

Total Time: PT45M

Recipe Ingredients:

  • 200 gm Cashew
  • 100 gm Almond (Badam)
  • 300 gm Sugar
  • 2 Piece of Cardamom
  • 75 ml water
  • 2 Tablespoon of Ghee

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: பிளம் கேக் செய்வது எப்படி?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular