Homeவிளையாட்டுபல வருட சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்..!

பல வருட சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்..!

கடந்த பிப்ரவரி 4-ம் தேதி நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் தொடங்கியது. மிகவும் சுவாரஸ்மயாக இந்த டெஸ்ட் போட்டிகள் பல எதிர்ப்பார்ப்புகளுடன் தொடங்கியது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன் பிறகு பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்றது. மேலும் தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட தொடங்கியது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 242 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

அதன் பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக நியூஸிலாந்து அணி 211 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த காரணத்தால் நியூஸிலாந்து அணி 31 ரன்கள் பின்தங்கி இருந்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்த போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்த இன்னிங்ஸை விளையாடிய கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 133 நடித்திருந்தார். இவரது சதத்தால் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை (Kane Williamson Record Broke) கேன் வில்லியம்சன் முறியடித்துள்ளார். மேலும் ஸ்டீவ் ஸ்மித் தனது 32-வது டெஸ்ட் சதத்தை வெறும் 174 டெஸ்ட் இன்னிங்ஸில் வேகமாக அடித்திருந்தார். தற்போது அந்த சாதனையை முறியடித்து வில்லியம்சன் தனது 32-வது சதத்தை வெறும் 172 டெஸ்ட் இன்னிங்ஸில் பூர்த்தி செய்து ஸ்டீவ் ஸ்மித் சாதனையை (Kane Williamson Broke The Record) இவர் முறியடித்துள்ளார்.

Kane Williamson record broke
இதையும் படியுங்கள்: IPL 2024: என்னைக்கு ஸ்டார்ட் ஆகப்போது.! முக்கிய அறிவிப்பு..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular