Homeஆன்மிகம்Kashi Vishwanath Temple: காசி விஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு..!

Kashi Vishwanath Temple: காசி விஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு..!

Kashi Vishwanath Temple: காசி விஸ்வநாதர் திருக்கோயில் புகழ்மிக்க சிவப்பெருமானின் கோயிலாகும். இது இந்துக்களின் புண்ணிய ஸ்தலம் என்று கூறுவார்கள். இந்த கோயில் தற்போது உத்திரபிரதேசம், வாரணாசியில் அமைந்துள்ளது. இந்த கோயில் தற்போது வாரணாசியில் அமைந்திருந்தாலும், பழங்காலத்தில் இது காசி என்று அழைக்கப்பட்டது. இதனால் இதனை அனைவரும் தற்போது வரை காசி விஸ்வநாதர் கோயில் என்றுதான் அழைப்பார்கள். புத்த மதத்தினருக்கும் காசி புனித ஸ்தலமாகத் விளங்குகிறது. மகாவீரரின் முன்னோடியான பரஸ்வநாதர் என்ற தீர்த்தங்கரர் அவதரித்த இடம் தான் காசி. அதனால் ஜைனர்களும் காசி புனித ஸ்தலமாக விளங்குகிறது. (who built kashi vishwanath temple in Tamil) 1780-ஆம் ஆண்டு இக்கோயிலை இந்தூர் ராணி அகல்யாபாய் (kashi vishwanath temple history in Tamil) என்பவரால் கட்டப்பட்டது.

பிறகு பஞ்சாப் மன்னர் இரஞ்சித் சிங் என்பவர் இக்கோயிலுக்கு, 1 டன் தங்கத்தை பரிசளித்தார். இந்த தங்கத்தை வைத்து காசி விஸ்வநாதர் கோயிலின் கலசத்திற்கு தங்க முலாம் பூசப்பட்டது.

இங்கு வரும் பகத்தர்கள் நேரடியாகவே பூஜை பொருட்களை கொண்டு வழிபடலாம். அர்ச்சகரின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டியதில்லை. நாம் இந்த பதிவில் (kashi vishwanath temple story in Tamil) பற்றி பார்க்க உள்ளோம்.

கோயிலின் சிறப்புகள் – kasiyin sirappugal in tamil

இக்கோயிலை புனித யாத்திரிகளின் புண்ணிய ஸ்தலம் என்றே கூறலாம். இந்த கோயிலின் உயரம் 51 அடிகளாகும். இந்த கோயிலின் உள்ளே பெரிய மணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் அமைப்பு வடநாட்டு பாணியில் கட்டப்பட்டிருக்கும். கோயிலின் கோபுரம் உயரமாகவும், அதில் கொடியுடனும் காட்சி அளிக்கும். இதில் விஸ்வநாதர் லிங்கம் (kashi vishwanath temple jyotirlinga) பூமியின் மட்டத்தில் அமைந்துள்ளது. லிங்த்தை சுற்றிலும் வெள்ளி தகடுகள் அமைக்கப்பட்டிருக்கும். லிங்கத்தின் தலையின் மீது தங்க முலாம் பூசப்பட்டிருக்கும். லிங்த்தின் மீது ஒரு கங்கை தீர்த்தம் சொட்டு சொட்டாக விழும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் விஸ்வநாதர் லிங்கத்தை மண்டியிட்டு கீழே அமர்ந்து வணங்குவார்கள். இந்த மணி ஒலிக்கும் சத்தம் பல தூரங்கள் வரை கேட்கும் என்று கூறப்படுகிறது. இந்த கோயிலில் பூஜைகள் நடக்கும் போது கேட்கப்படும் மேளதாளங்கள் மற்றும் மணியோசைகள் பக்தர்களை பக்தி பரவசத்தில் கொண்டு செல்கிறது என்றே கூறலாம். இங்கு உள்ள அரிச்சந்திர காட்டில் பிணங்கள் எப்போதும் எரிந்துக்கொண்டு தான் இருக்கின்றன. காசியில் (kasi history in tamil) இறந்தால் முக்தி கிடைக்கும் என்பதால் காலம் முடிந்த பலரும் இங்கு வந்து மாய்த்துவிடுகின்றனர்.

இந்த கோயிலை ஒட்டியுள்ள குளத்தின் அருகில் ஒரு கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் சிவபெருமானின் காதில் அணிந்திருந்த குண்டலம் அதில் விழுந்ததாகவும், அதனால் அந்த கிணற்றை மணிகர்ணிகா (Manikarnika) கிணறு என்று அழைக்கின்றனர்.

காசியின் அதிசயம்

காசியில் (kashi in tamil) எங்கும் பல்லிகள் சப்தம்மிடுவதில்லையாம். முக்கியமாக இங்கு கருடன் பறப்பதில்லையாம். காசியில் அதிகமாக பிணங்கள் எரியும், பொதுவாக பிணங்கள் எரியும் இடத்தில் கருடன் பறப்பது இயல்பு. ஆனால் இங்கு கருடன் பறப்பதில்லை. அதற்கும் சில வரலாற்று காரணங்கள் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இங்கு அரிசந்திர காட்டில் எரியும் பிணங்களில் இருந்து துர்நாற்றம் வீசாது என்றும், காசியில் உள்ள பூக்கள் வாசனை வீசாது என்றும் கூறுவார்கள். அதனை தற்போது (Kasiyin Ragasiyangal) காணலாம்.

புராணக்கதைகள்

kashi vishwanath temple photos

ஸ்ரீ ராமர் இராவணை கொன்ற பிறகு பிரம்மஹத்தி என்னும் தோஷம் ஏற்படும் என்பதற்காக இராமர் இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய ராமேஸ்வரத்தில் ஒரு சிவலிங்கத்தை வழிபட எண்ணினார். இதனால் அனுமனை காசிக்கு அனுப்பி அங்கிருந்து சிவலிங்கத்தை கொண்டு வருமாறு அனுப்பினார். இந்நிலையில் காசியை அடைந்த அனுமனுக்கு ஒரே வியப்பாக இருந்தது. காரணம் எங்கு பார்த்தாலும் ஒரே சிவலிங்கமாக இருந்தது. இதில் சுயம்பு லிங்கம் (suyambu lingam) எது என்று தெரியாமல் நின்றார். அப்போது ஒரு லிங்கத்தின் மீது மட்டும் கருடன் வட்டமிட்டு கொண்டு நின்றது. அனுமன் அந்த லிங்கம் தான் சுயம்பு லிங்கமாக இருக்கும் என எண்ணி யோசித்தார். அதனை உறுதி செய்யும் விதமாக பல்லியும் சப்தமிட்டது. சுயம்பு லிங்கத்தை உறுதி செய்த அனுமன் அதனை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

ஆனால் அனுமனின் எதிரே தோன்றிய காலபைரவர் அவரை தடுத்தார். காரணம் காசி காலபைரவரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அவர் தான் காசியின் காவல் தெய்வமாக உள்ளார். இவரின் அனுமதி இல்லாமல் லிங்கத்தை எடுத்ததற்காக கோபம் கொண்ட அவர் அனுமனுடன் போர் புரிந்தார். இதனை கண்ட தேவலோக தேவர்கள் இறங்கி வந்து காலபைரவரிடம் வேண்டி நின்றனர். உலகத்தின் நன்மைக்காக இந்த லிங்கம் தென்னாடு செல்கிறது. இதற்கு தாங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் என்று வேண்டினார்கள்.

பிறகு காலபைரவர் கோபம் தணிந்து அனுமன் செல்ல அனுமதித்தார். ஆனாலும் அவருடைய அனுமதி இல்லாமல் அனுமனுக்கு உதவி செய்ததற்காக கருடனுக்கும், பல்லிக்கும் சாபம் இட்டார். கருடனாகிய நீ காசியில் எங்கும் பறக்க முடியாது. பல்லியாகிய நீ சப்தமிட முடியாது என சாபமிட்டார். இதனால் இன்றளவும் அங்கு கருடன் பறப்பதில்லை, பல்லி சப்தமிடுவதில்லை. இதனால் காசியின் மீது உள்ள இறை நம்பிக்கை பக்தர்களிடையே பெருகி கொண்டு வருகிறது.

kashi vishwanath temple

இங்கு வந்து அதாவது காசியில் முக்தி அடையும் ஜீவராசிகளின் காதில் சிவபெருமானே ராமநாமத்தை ஓதுவதாக ஒரு ஐதீகம் உள்ளது. ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாக நம்பிக்கை.

காசியில் உள்ள மற்ற சன்னிதிகள்

அன்ன பூரணி, காலபைரவர், சனி பகவான், சாட்சி விநாயகர், இராமர், அனுமன், சத்திய நாராயணர், கவுடி மாதா, துர்கா தேவி, மகா காளர், மகா காளி, தண்டபானீஸ்வரர், நீலகண்டர், ஆகிய வழிபாடு தலங்கள் இங்க உள்ளன. இந்த கோயிலுக்கு பின்புறம் நந்தி ஒன்று உள்ளது. அந்த நந்தி கோயிலின் சுவற்றை பார்த்து இருக்கும். இந்த நந்தியின் அருகே தான் ஞானவாவி என்னும் தீர்த்த கிணறு உள்ளது. இங்கு உள்ள அன்ன பூரணி கோயிலில் தீபாவளி அன்று அம்பாள் லட்டு தேரில் பவணி வருவாள்.

காசி விஸ்வநாதர் கோயிலின் கட்டுப்பாடுகள் – kashi vishwanath temple rules

பெண் பக்தர்கள் சேலை அணிந்து தான் கோயிலில் உள்ளே வரவேண்டும். ஆண்கள் கால் சட்டை, ஜீன்ஸ், கைலி போன்ற உடைகளை அணிந்து வரக்கூடாது என்ற கட்டுபாடுகள் இருந்தன. ஆனால் தற்போது வெளிநாட்டவர்களும் சுற்றுலாவிற்கு இங்கு வருவதால் கண்ணியமான ஆடைகளுடன் வருவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். காசியின் தரிசனம் பற்றி விவரங்களை அறிந்துக்கொள்வதற்காக அவற்றின் விவரங்களை (kashi vishwanath temple official website) (kashi vishwanath temple online booking) ஆன்லைனில் டிக்கெட்டுகளை பதிவுசெய்து கொள்ளவும், தரிசன நேரங்களை அறிந்துக்கொள்வதற்கும் (kashi vishwanath temple varanasi timings) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் shrikashivishwanath தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு கால வரலாறு..! Thanjai Periya Kovil History in Tamil..!

kashi vishwanath Temple – FAQS

1. பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? Prammakathi thosam in Tamil?

பிரம்ஹத்தி தோஷம் என்பது கொடுமையான பாவங்களை செய்வதாகும். உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது, குருவை உதாசீனப்படுத்துவது, பசுவை கொல்வது, அடுத்தவர் சொத்தை திருட நினைப்பது போன்ற செயல்களாகும்.

2. பிரம்மஹத்தி தோஷம் பரிகாரங்கள்?

பிரம்மஹத்தி தோஷத்திற்கு குலதெய்வத்தை வணங்க வேண்டும். பின் காசி, ராமேஸ்வரம், கங்கை உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் நீராடி, இறைவனை வணங்கி வந்தால் தோஷத்தின் கடுமை குறையும். அமாவாசை தினங்களில் மாலையில் சிவன் கோவிலுக்குச் சென்று ஒன்பது சுற்றுகள் சுற்றி வணங்க வேண்டும்.

3. காசி விஸ்வநாதர் கோவில் எங்கே உள்ளது? where is Kashi Vishwanath temple?

காசி விஸ்வநாதர் கோயில் உத்திரபிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டம், காசி என்னும் ஊரில் உள்ளது.

4. காசி விஸ்வநாதர் கோவில் டிக்கெட் விலை? kashi vishwanath temple ticket price?

மங்கள ஆரத்தி ரூ. 500, சிருங்கார் / போக் ஆர்த்தி ரூ. 300, ருத்ராபிஷேகம் (1 சாஸ்திரி) ரூ.450, சுகம் தரிசனம் ரூ. 300, சன்யாசி போஜன் (திங்கட்கிழமை) ரூ.4500,
4500

5. மணிகர்னிகா காட் சிறப்பு என்ன? What is special about Manikarnika Ghat?

இந்த காட் என்பது வாரணாசியின் இரண்டு தகன மைதானங்களில் மிக முக்கியமான இடமாகும். இந்துகள் தகனம் செய்ய மிகவும் புனிதமான இடம்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular